»   »  சாயாசிங்கின் வில்லங்கம்!

சாயாசிங்கின் வில்லங்கம்!

Subscribe to Oneindia Tamil
Chaya Singh
'வல்லமை தாராயோ' படத்தில் வித்தியாசமான அதேசமயம் வில்லங்கமான ரோலில் நடிப்பதாக கூறுகிறார் சாயா சிங்.

திருடா திருடி மூலம் ரசிகர்கள் நெஞ்சங்களை திருடிய சாயா சிங் அதன் பிறகு தேறாமலேயே போய் விட்டார். திடீரென குத்துப் பாட்டுக்கு ஆட வந்து சலசலப்பை ஏற்படுத்தினார்.

கடைசியாக விவேக் ஹீரோவாக நடிக்கும் சொல்லி அடிப்பேன் படத்தில் 2 நாயகியரில் ஒருவராக நடித்து வந்தார். அந்தப் படம் எப்போது வரும் என்று யாருக்குமே தெரியவில்லை.

இந்த நிலையில் பெரிய இடைவெளிக்குப் பின்னர் வல்லமை தாராயோ படத்தில் நாயகியாக நடிக்கிறார் சாயா சிங். இப்படத்தில் அவருக்கு வித்தியாசமான கேரக்டராம். அதாவது அவரது கணவராக வரும் பார்த்திபன் ரொம்ப நல்ல மாதிரியானவர். அந்த ஒரே காரணத்திற்காக டைவர்ஸ் கேட்கும் மனைவியாக நடிக்கிறாராம் சாயாசிங்.

ரொம்ப வில்லங்கமாக இருக்கே என்று சாயாசிங்கிடம் கேட்டால், எனக்கு கேரக்டர் ரொம்பப் பிடித்திருந்தது. அருமையாக நடிக்க நல்ல வாய்ப்புகள் இருந்ததால் இந்த கேரக்டருக்கு ஓகே. சொன்னேன். இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தால் இனிமேல் தொடர்ந்து இதுபோல வித்தியாசமான கேரக்டர்களிலேயே நடிப்பேன்.

எனக்கு கேரக்டர்தான் முக்கியம். இடையில் சில படங்களில் ஒத்தைப் பாட்டுக்கு ஆடியதால் என்னை ஐட்டம் நாயகியாக்க முயற்சித்தார்கள். சிலர் ஏன் இப்படி ஒரு பாட்டுக்கெல்லாம் ஆடுகிறாய் என்றும் அட்வைஸ் செய்தார்கள்.

எனவேதான் ஒரு பாட்டுக்கு இனி ஆடுவதில்லை என்ற முடிவெடுத்தேன். நல்ல கேரக்டருக்காக காத்திருந்ததால்தான் தமிழில் பெரிய இடைவெளி ஏற்பட்டு விட்டது. இனிமேல் நல்ல கேரக்டராகப் பார்த்து பார்த்து நடிக்கப் போகிறேன் என்கிறார் சாயா சிங்.

வல்லமை தாராயோ தனக்கு பெரிய பிரேக் தரும் என்ற நம்பிக்கையில் அப்படத்.தில் நடித்துக் கொண்டிருக்கிறார் சாயா சிங்.

இந்த படத்தை இயக்கியிருப்பது மதுமிதா.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil