twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வள்ளுவர் கோட்டத்தில் ரஜினிக்கு நாளை பிரமாண்ட விழா!

    By Shankar
    |

    ரஜினியின் 62வது பிறந்த நாளை ரசிகர்கள் சார்பில் பெரிய அளவில் கொண்டாடுகின்றனர் ரசிகர் மன்றத்தினர்.

    நாளை டிசம்பர் 13-ம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடக்கும் இந்த விழாவில் 5000 ரசிகர்கள் பங்கேற்பார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே விழாவுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    சென்னை மாவட்ட ரஜினிகாந்த் தலைமை மன்றத்தின் என் ராமதாஸ், ஆர் சூர்யா, கே ரவி ஆகிய மூவரின் ஏற்பாடு மற்றும் தலைமையில் நடக்கும் இந்த விழாவில், தமிழ் திரையுலகின் ஜாம்பவான்கள் - ரஜினிக்கு பக்கபலமாக நிற்கும் இயக்குநர் எஸ்பி முத்துராமன், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, நடிகர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

    பிஎஸ் அசோக் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக வருகிறார்.

    இவர்களைத் தவிர, தயாரிப்பாளர் டிஜி தியாகராஜன், நடிகர் செந்தில், ராகவா லாரன்ஸ், வாசு விக்ரம், சின்னி ஜெயந்த், கருணாஸ் போன்ற ரஜினியின் தீவிர அபிமானிகள் பங்கேற்றுப் பேசுகிறார்கள்.

    சிவகார்த்திகேயன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

    சூப்பர் ஸ்டார் ரஜினியின் பாடல்களுக்கு சிக்கு புக்கு கலைநிகழ்ச்சி குழுவினர் ஆடும் நடனநிகழ்ச்சி இடம்பெறுகிறது.

    நிகழ்ச்சியில் ரஜினி ரசிகர் மன்றத்தினர் 62 மாணவர்களுக்கு கல்வி உதவி வழங்கப்படுகிறது.

    விழா குழுவில் இடம்பெற்றுள்ள சைதை ரவி, அண்ணா நகர் மு.டில்லி, தாம்பரம் கேசவன், பட்டாணி மணி, மயிலை முருகன், பூங்கா நகர் எழில், வளசை ஆனந்தன், கொடுங்கையூர் ஆனந்தன், வில்லிவாக்கம் சுகுமார், வீரா சம்பத், சைதை முருகன் ஆகியோர் விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்து வருகின்றனர். சிறப்பு அழைப்பாளராக பி.எஸ்.அசோக் அழைக்கப்பட்டுள்ளார்.

    இவர்களுடன் அனைத்து மாவட்ட, ஒன்றிய, நகர மன்ற நிர்வாகிகள் நிகழ்ச்சியில் திரளாகப் பங்கேற்கின்றனர்.

    இந்த விழாவில் ரஜினி பங்கேற்கும் வாய்ப்பு அதிகம் உள்ளதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளன.

    English summary
    Superstar Rajinikanth's 62nd birthday celebrations will be held at Chennai Valluvar Kottam on December 13th by Chennai fans.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X