twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சிவாஜி சிலை-திறக்கும் எஸ்.எஸ்.ஆர்.

    By Staff
    |

    சென்னை: நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சிலை தஞ்சையில் வரும் 15ம் தேதி திறக்கப்படுகிறது. மூத்த நடிகர் எஸ்எஸ்ஆர் சிலையை திறந்து வைக்கிறார்.

    சிவாஜியின் மகன் ராம்குமார் மற்றும் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் மா.நடராஜன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் சொந்த மாவட்டமான தஞ்சையில் அவரது சிலையை அமைக்க வேண்டும் என்று 72 கிராமங்களை சேர்ந்த பொது மக்கள் கேட்டுக் கொண்டனர். இதற்காக நடராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது.

    சிவாஜியின் மனைவி கமலாம்மாள் உயிருடன் இருக்கும்போதே சிலையை திறக்க ஏற்பாடு செய்தோம். அதற்குள் அவர் மறைந்து விட்டார். சிலை அமைப்பதற்கு முதல்வர் கருணாநிதியிடம் நடிகர் பிரபு, ராம்குமார் அனுமதி பெற்றனர்.

    அதன்படி அவரது சிலை தஞ்சை, புதுக்கோட்டை சாலை மணிமண்டபம் அருகே அமைக்கப்படுகிறது. இதற்காக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். மெரீனா கடற்கரையில் வைக்கப்பட்டுள்ளதை போன்று அதே வடிவத்தில், அதே உயரத்தில் அமைக்கப்படுகிறது.

    இந்த சிலை வருகிற 15ம் தேதி மாலை 6 மணிக்கு திறக்கப்படுகிறது. நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் இதை திறந்து வைக்கிறார். இதில் முக்கிய பிரமுகர்கள், கலை உலக பிரமுகர்கள் கலந்து கொள்கிறார்கள்.

    இதே போன்று நாகர்கோவில், மதுரை, குமாரபாளையம் ஆகிய இடங்களிலும் சிவாஜியின் சிலை விரைவில் திறக்கப்படும். அக்டோபர் 1ம் தேதி சிவாஜியின் 80வது பிறந்த நாள் விழா கொண்டாடப்படுகிறது. இதில் முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X