twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    புதிய வார்ப்புகள்... சொனாட்டன் இசை!

    By Staff
    |

    Lekha Rathnakumar
    ஒரு படத்துக்குத் தேவையான பின்னணி இசையை எந்த சிரமுமின்றி சுலபமாக குறைந்த செலவில் செய்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தித் தந்த இசையமைப்பாளரும் விளம்பரப் பட இயக்குநருமான லேகா ரத்னகுமாருக்கு இப்போது மிகப்பெரிய வாய்ப்புகள் வந்த வண்ணமுள்ளன.

    பிரபல இயக்குநர் கே.பாக்யராஜ் தனது அடுத்த படமான புதிய வார்ப்புகளுக்கான இசையை லேகா ரத்னகுமாரின் லேகா சொனாட்டன் கலெக்ஷன்களிலிருந்தே எடுத்துக்கொள்ள முடிவு செய்துவிட்டார். பாக்யராஜைத் தொடர்ந்து பாண்டியராஜன், பிரபு நேபால் போன்றோர் தங்கள் படங்கள் மற்றும் தொடர்களுக்கு லேகாவை அணுகி உள்ளனர்.

    ஆன்லைனில் இசை ட்ராக்குகளைக் கேட்டு, அதுபற்றி ரத்னகுமாருக்கு இமெயில் அனுப்பி பின்னர் சிடி வாங்கி பின்னணி இசை சேர்ப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களைத் தவிர்க்க, இப்போது புது உத்தியை அறிமுகப்படுத்தியுள்ளார் ரத்னகுமார்.

    அதாவது இனி சிடியை நேரில் வந்துகூட பெறத் தேவையில்லை. ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம்.

    http://www.sonoton.com/ இணையதளத்துக்குள் நுழைந்து தங்கள் பெயரைப் பதிவு செய்து கொண்டால் போதும். உடனே உங்களுக்கான ரகசியக் குறியீட்டு எண் கிடைக்கும். அதை வைத்து தளத்துக்குள் நுழைந்து தேவையான இசையை எடுத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்கு முன் ரத்னகுமாரின் வங்கிக் கணக்கில் அதற்குரிய தொகையான ரூ.50000 செலுத்தப்பட்டிருக்க வேண்டும். தொழில்முறை திரைப்படக் கலைஞர்கள் மற்றும் நிஜமாகவே இந்த இசையை உபயோகிக்கும் ஆர்வம் உள்ளவர்களுக்கு மட்டுமே இதில் அனுமதி வழங்கப்படுகிறது.

    பிரபலமான திரைப்பட இயக்குநர்கள், நடிகர்களுக்கு உடனடி அனுமதி வழங்கப்படுகிறது.

    இதுகுறித்து ரத்னகுமார் கூறியதாவது;

    அடிப்படையில் நான் ஒரு இசையமைப்பாளர். நிறைய புதிய புதிய இசையை உருவாக்கி வைத்துள்ளேன். சொனாட்டான் நிறுவனத்தின் கலெக்ஷன்களில் உள்ள பெரும்பாலான இசை நான் உருவாக்கியதுதான். அதேபோல எம்எஸ் விஸ்வநாதன் போன்ற மேதைகளும் சொனாட்டானுக்கு இசையமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

    நேரடி பின்னணி இசையில் கிடைக்கும் துல்லியத்தை விட அதிக துல்லியம், தரத்துடன் பின்னணி இசையைக் கொடுப்பதே என் நோக்கம். பாக்யராஜ் சார் கன்வின்ஸ் ஆனது இந்த தரத்தைப் பார்த்துதான். இன்னும் பல பெரிய இயக்குநர்கள் இந்த புது இசைப் பாணியைப் பயன்படுத்தும் திட்டத்தில் உள்ளனர்.

    இதுவரை பதிவு செய்த சிடிக்களில் இசையைக் கொடுத்து வந்தேன். இனி அதில் ஒரு மாற்றம். சிடி வாங்கும் சிரமத்தைக் கூட தயாரிப்பாளர்களுக்கு, இயக்குநர்களுக்கு வைக்கப்போவதில்லை, என்கிறார் ரத்னகுமார்.

    இவர் இசையமைத்த மூன்று டிராக்குகள் சீனாவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் போட்டிகளில் இசைக்கப்பட உள்ளன.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X