»   »  'ஜெட்' பிளைட்டில் ரஹ்மான் பாட்டு!

'ஜெட்' பிளைட்டில் ரஹ்மான் பாட்டு!

Posted By:
Subscribe to Oneindia Tamil
A.R.Rahman
இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையமைப்பில் லண்டனில் அரங்கேற்றப்பட்ட 'தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்' இசைத் தொகுப்பை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது விமானங்களில் ஒலிபரப்பவுள்ளது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கிடையே இயக்கப்படும் ஜெட் ஏர்வேஸ் விமானங்களில் ரஹ்மானின் இசை தொகுப்பு ஒலிபரப்பப்படும். இதுதவிர ஏ.ஆர்.ரஹ்மானின் பேட்டியையும் பயணிகள் பார்த்து ரசிக்கலாம்.

கடந்த ஆண்டு லண்டனில் தி லார்ட் ஆப் தி ரிங்க்ஸ் பெருத்த வரவேற்புக்கு மத்தியில் அரங்கேற்றப்பட்டது என்பது நினைவிருக்கலாம்.

இதுகுறித்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர் ராஜா சரண் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி லார்ட் ஆப் தி ரிங்ஸ் குழுவினருடன் கை கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம்.

2007ம் ஆண்டு ஜூன் மாதம் அரங்கேற்றப்பட்ட இந்த ஆல்பம் பல நாடுகளிலும் புகழ் பெற்ற பெருமைக்குரியது. இங்கிலாந்து முழுவதும் இந்த ஆல்பத்திற்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர்.

இந்த பெருமையில் தற்போது ஜெட் ஏர்வேஸ் நிறுவனமும் இணைந்து கொள்வது மகிழ்ச்சி தருகிறது என்று கூறியுள்ளார் அவர்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil