ஸ்னிக்தா-மிஷ்கினின் நந்தலாலா ஒத்திவைப்பு

மிஷ்கினே எழுதி, இயக்கி ஹீரோவாக நடித்துள்ள படம் நந்தலாலா. கத்தாழைக் கண்ணாலே பாடல் மூலம் ஹிட் ஆன அழகு நடிகை ஸ்னிக்தா இப்படத்தில் மிஷ்கினுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
பிப்ரவரி 20ம் தேதி இப்படம் திரையிடப்படுவதாக இருந்தது. ஆனால் தற்போது மார்ச் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு விட்டது.
இதுகுறித்து படத் தயாரிப்பாளரான ஐங்கரண் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் கருணாமூர்த்தி கூறுகையில், பிப்ரவரி மாதம் நிறையப் படங்கள் ரிலீஸாகின்றன. இதனால் தியேட்டர்கள் கிடைப்பதில் திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.
எனவேதான் மார்ச் மாதத்தில் படத்தை திரையிடுவது உசிதமாக இருக்கும் என கருதி மார்ச்சுக்கு ஒத்திவைத்துள்ளோம் என்றார்.
ஏற்கனவே இளையராஜாவின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. படம் குறித்து பெரும் எதிர்பார்ப்பும் உள்ளது.
பொறுத்திருப்போம் மார்ச் வரை..
Comments


Click it and Unblock the Notifications