twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    'தீ': சன் ஆடியோவின் முதல் வெளியீடு!

    By Staff
    |

    Sundar C with Ragini
    சன் பிக்சர்ஸ் நிறுவனம் தன் எல்லையை இன்னும் விஸ்தரித்துள்ளது. தனது ஒரு அங்கமாக சன் ஆடியோ நிறுவனத்தைத் துவக்கியுள்ளது.

    சன் பிக்சர்ஸின் இரண்டாவது படமான, சுந்தர் சி நடிக்கும் 'தீ' படத்தின் இசை தான் சன் ஆடியோவின் முதல் வெளியீடு.

    இதற்கான அறிமுக விழாவையும், தீ படத்தின் இசை வெளியீட்டையும் ஒரே நேரத்தில் சத்யம் வளாகத்தில் நடத்தியது சன் நிறுவனம்.

    ஜி. கிச்சா இயக்கியுள்ள இப்படத்தில் சுந்தர்.சி, ராகிணி, நமீதா நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார்.

    சன் ஆடியோ நிறுவனத்தை சிம்பு முன்னிலையில் இசையமைப்பாளர்கள் ஸ்ரீகாந்த் தேவா, இமான், விஜய் ஆண்டனி துவக்கி வைத்தனர்.

    பின்னர் தீ படத்தின் பாடல் சிடியை முறைப்படி லாரன்ஸ் வெளியிட, தயாரிப்பாளர்கள் சிவசக்தி பாண்டியன், கலைப்புலி தாணு, முரளிதரன், ஆர்.பி.செளத்ரி, தியாகராஜன், எஸ்.ஏ. சந்திரசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். பாடல் கேசட்டை குஷ்பு வெளியிட, சாந்தனு, நகுலன் பெற்றுக் கொண்டனர்.

    விழாவில் வாழ்த்திப் பேசிய தயாரிப்பாளர் சங்க நிர்வாகி சிவசக்தி பாண்டியன்,

    சன் பிக்சர்ஸ் படமும் ரஜினி படம் மாதிரிதான். திரையிட்ட இரண்டே வாரங்களில் வசூலை குவித்து விடுகிறது. தீ படமும் அந்த வரிசையில் வசூலை அள்ள வாழ்துகிறேன் என்றார்.

    தயாரிப்பாளர் தாணு பேசுகையில், சன் நிறுவனம் பல்வேறு துறைகளில் வெற்றிகளைக் குவித்து வருவது சந்தோஷமாக உள்ளது. திரையுலகிற்கு பல சேவைகள் புரிகிறது. அடுத்ததாக ஸ்டுடியோ ஒன்றைத் தொடங்க வேண்டும். கலர் லேப் மற்றும் அவுட்டோர் யூனிட்டையும் தொடங்கி சினிமாவுக்கு புதுப் பாதையைக் காட்ட வேண்டும் என்றார்.

    சிம்பு பேசுகையில், 'தூர்தர்ஷன் மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தபோது மாலை 6.30 மணிக்கு சன் சேனல் ஒளிபரப்பாகும். அதை பார்க்க ஆவலுடன் வீட்டுக்கு ஓடி வருவேன். அந்த நிறுவனம் இன்று இந்த அளவுக்கு வெற்றிகளை குவிப்பதை கண்டும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கலாநிதி மாறனின் திறமையை கண்டும் வியக்கிறேன். சன் பிக்சர்ஸில் படம் இயக்குபவர்கள் அதிர்ஷ்டசாலிகள். மிகப்பெரிய விளம்பரம் அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த வாய்ப்பை அவர்கள் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

    படத்தின் நாயகன் சுந்தர் பேசுகையில், 'மக்களுக்கு எது பிடிக்கும் என சன் நிறுவனத்துக்கு தெரியும். அதனால்தான் அவர்கள் டிவி மூலம் நல்ல நிகழ்ச்சிகளையும் சினிமா மூலம் நல்ல படங்களையும் தருகிறார்கள். திட்டமிட்டு பட வேலைகளில் ஈடுபடுகிறார்கள். தெலுங்கில் பெரிய வெற்றிப் படமான ஆபரேஷன் துரியோதனா படத்தின் ரீமேக்தான் தீ. இப்படத்தில் முதன்முறையாக கஷ்டப்பட்டு டான்ஸ் ஆடியிருக்கிறேன் என்றார் சுந்தர்.

    சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஹன்ஸ்ராஜ் சக்ஸேனா பேசுகையில், தெனாவட்டு, தீ படங்களையடுத்து சிவா மனசுல சக்தி, படிக்காதவன், 'பூக்கடை ரவி' படங்கள் வெளியாக உள்ளன. இதற்கிடையே ஒரு இனிய அதிர்ச்சியாக சில படங்களை அறிவிக்க இருக்கிறோம். அது குறித்து டிசம்பர் முதல் வாரத்தில் அறிவிப்போம். கலாநிதி மாறனின் வழி நடத்தல்தான் இந்த வெற்றிகளுக்குக் காரணம் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X