»   »  மீண்டும் கவுண்டமணி-செந்தில்!

மீண்டும் கவுண்டமணி-செந்தில்!

Subscribe to Oneindia Tamil
Goundamani with Senthil
தமிழ்த் திரையிலகை ஒரு காலத்தில் கலக்கிய கவுண்டமணியும், செந்திலும், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவைக் கலக்கியவர்கள் கவுண்மணியும், செந்திலும். உலகெங்கும் உள்ள தமிழர்களை குடும்பம் குடும்பமாக சிரிக்க வைத்தது இந்த ஜோடி.

பின்னர் தனித் தனியாகவும் இவர்கள் பிரிந்து படங்களைக் கொடுத்தனர். இருப்பினும், இவர்களுக்குள் ஏற்பட்ட பிரிவினையும், விவேக், வடிவேலு போன்றவர்களின் வரவும், கவுண்டமணி - செந்தில் பொற்காலத்தை ஓரம் கட்டி விட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் தங்கம் படத்தில் கவுண்டமணி மறுபடியும் கலக்கினார். அவரது காமெடிக்கு என்றும் போல வரவேற்பு இருப்பதைப் பார்த்த கோடம்பாக்கம், மறுபடியும் கவுண்டமணி பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளனராம்.

கூடவே செந்திலையும் சேர்த்து நடிக்க வைக்கவும் முயற்சி நடந்தது. அதில் வெற்றியும் பெற்றுள்ளனர் தயாரிப்பாளர்கள். நீண்ட காலத்திற்குப் பிறகு கவுண்டமணியும், செந்திலும் இணைந்து இதயத்தின் கதை என்ற படத்தில் நடிக்கவுள்ளனர்.

இப்படத்தில் வழக்கம் போல கவுண்டர் உதைப்பார், செந்தில் ஓடுவார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil