»   »  அக்பரின் மனைவிதான் ஜோதா!

அக்பரின் மனைவிதான் ஜோதா!

Subscribe to Oneindia Tamil
Aishwarya Rai
ராஜபுத்திர இளவரசி ஜோதா, அக்பரின் மனைவிதான் என்று முகலாய மன்னர் பரம்பரையைச் சேர்ந்த மாமன்னர் பகதூர் ஷா ஸபாரின் கொள்ளுப் பேரனான ஜியாவுதின் டுசி கூறியுள்ளார்.

ஐஸ்வர்யா ராய், ஹிருத்தி்க் ரோஷன் நடிப்பில் கெளவாரிக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேதா யார் என்பது குறித்து சர்ச்சைகளும் எழுந்துள்ளன.

இந் நிலையில் இதுகுறித்து ஹைதராபாத்தில் அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், ராஜபுத்திர இளவரசியாக இருந்த ஜோதா, மாமன்னர் அக்பரின் மனைவிதான். இளவரசி ஜோதாவை திருமணம் செய்து கொண்ட பின்னர் அவருக்கு மலாய்கா மர்யம் ஸமானி பேகம் என அக்பர் பெயர் சூட்டினார்.

ஆனால் இந்த விஷயத்தை தேவையில்லாமல் சிலர் பிரச்சினையாக்குகின்றனர். உண்மை என்ன என்று தெரியாமல் பேசுகின்றனர், விமர்சிக்கின்றனர்.

தனது படை பலத்தை பெருக்கவும், தனது ஆட்சியின் எல்லையை விரிவுபடுத்தவும் இளவசரி ஜோதாவை திருமணம் செய்து கொண்டார் அக்பர்.

வீரம் மிகுந்த ராஜபுத்திரர்கள் அக்பருக்கு விசுவாசமாக நடந்து கொண்டனர். முகலாய சாம்ராஜ்யத்திற்குப் பேருதவியாகவும் இருந்தனர்.

அக்பர் மட்டுமல்லாமல், ஒளரங்கசீபும் கூட ராஜபுத்திர இளவரசியைத்தான் மணந்தார் என்று கூறியுள்ளார் டுசி.

தனது கூற்றுக்கு ஆதாரமாக அக்பரும், ஜோதாவும் இணைந்திருப்பது போன்ற பழங்கால ஓவியத்தின் நகலையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இளவரசி ஜோதா, அக்பரின் மனைவி அல்ல. மாறாக அவரது மகன் சலீமின் மனைவி என்பது ராஜபுத்திர சமூகத்தினரின் வாதம். இதனால்தான் ஜோதா அக்பரம் படம் தொடர்பாக பெரும் சர்ச்சை வட இந்தியாவில் எழுந்துள்ளது. படத்திற்கு எதிராக ஆங்காங்கு போராட்டங்களும் நடந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil