twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    1942 முதல் 2014 வரை ஏவிஎம் தயாரித்த படங்கள்... ஒரு அரிய புகைப்படத் தொகுப்பு!

    By Shankar
    |

    இது கொஞ்சம் நீளமான ஸ்லைட் ஷோதான்.. ஆனால் எழுபது ஆண்டுகள் தமிழ், தெலுங்கு, கன்னட, இந்தி சினிமாவின் முக்கியமான படங்களைத் தயாரித்து அளித்த ஏவி எம் நிறுவனத்துக்கு இந்த புகைப் படங்களின் தொகுப்பை நம்மாலான ஒரு மரியாதையாகத் தருகிறோம்.

    எத்தனை சாதனையாளர்கள், எவ்வளவு பெரிய மேதைகளுடன் பணியாற்றி, அருமையான படங்களைத் தந்துள்ளனர் ஏவி எம் நிறுவனத்தினர் என்பதை இந்த தொகுப்பு உங்களுக்கு உணர்த்தும்.

    ஏவிஎம் என்ற லோகோ உருண்டை கோடம்பாக்கத்துக்கே தனி அடையாளம் என்றால் மிகையல்ல!

    இதோ, நமது புகைப்படத் தொகுப்பு...

    இவர்தான் மெய்யப்ப செட்டியார்

    இவர்தான் மெய்யப்ப செட்டியார்

    தமிழ் சினிமாவின் முக்கியத் தூண்களில் ஒருவராகத் திகழ்ந்த ஏவி மெய்யப்பச் செட்டியார். 1907-ம் ஆண்டில் பிறந்தவர் 1979-ம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

    சபாபதி

    சபாபதி

    இன்றைக்குப் பார்த்தாலும் சிரித்துக் கொண்டே இருக்கலாம், சபாபதி படத்தை. ஏவி எம் தயாரிப்புதான் இது. வெளியான ஆண்டு 1942. ஏவிஎம் மெய்யப்பனும், ஏடி கிருஷ்ணசாமியும் இயக்கினர்.

    ஹரிச்சந்திரா

    ஹரிச்சந்திரா

    இது கன்னடத்தில் வெளியான ஏவிஎம் படம். 1943-ல் வெளியான இப்படத்தை ஏடி கிருஷ்ணசாமி இயக்கினார்.

    ஸ்ரீவள்ளி

    ஸ்ரீவள்ளி

    1945-ல் வெளியான இந்தப் படத்தை ஏவி மெய்யப்பனும் ஏடி கிருஷ்ணசாமியும் இயக்கினர்.

    நாம் இருவர்

    நாம் இருவர்

    1947-ம் ஆண்டு வெளியான முக்கியமான படம் இது. பாரதியாரின் பாடல்கள்தான் முழுக்க. பெரும் வெற்றிப் படம். இயக்குநர் ஏவி மெய்யப்பன்.

    வேதாள உலகம்

    வேதாள உலகம்

    வெளியான ஆண்டு 1948. சாரங்கபாணி நடித்த இந்தப் படத்தின் இயக்குநர் ஏவி மெய்யப்பன். இந்த ஆண்டோடு காரைக்குடியிலிருந்த ஏவிஎம் ஸ்டுடியோவை சென்னைக்கு இடம் மாற்றினார்.

    வாழ்க்கை

    வாழ்க்கை

    டிஆர் ராமச்சந்திரன், வைஜெயந்திமாலா நடிப்பில் 1949-ல் வெளியானது வாழ்க்கை. இயக்கியவர் ஏவி மெய்யப்பன்.

    ஓர் இரவு

    ஓர் இரவு

    அண்ணா கதை வசனம் எழுதிய படம். பி நீலகண்டன் இயக்குநராக அறிமுகமான படம். 1951-ல் வெளியானது.

    பராசக்தி

    பராசக்தி

    1952-ல் வெளியான இந்தப் படத்தின் மூலம் நடிகர் திலகம் சிவாஜி கணேசனும், கதை வசனகர்த்தா மு கருணாநிதியும் பெரும் புகழ் பெற்றனர். கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் வெளியானது.

    அந்த நாள்

    அந்த நாள்

    1954-ம் ஆண்டு பாடல்களே இல்லாமல் வெளியான முதல் தமிழ்ப் படம் இது. சிவாஜி கணேசனை வீணை எஸ் பாலச்சந்தர் இயக்கியிருந்தார்.

    பேடார கண்ணப்பா

    பேடார கண்ணப்பா

    படம் வெளியான ஆண்டு 1954. கன்னடத்தில் வெளியான இந்தப் படத்தின் நாயகன் ராஜ்குமார்.

    பெண்

    பெண்

    ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, எஸ் பாலச்சந்தர், அஞ்சலி தேவி நடித்து 1954-ல் வெளியான இந்தப் படத்தின் இயக்குநர் எம்வி ராமன்.

    சங்கம்

    சங்கம்

    தெலுங்கில் என் டி ராமாராவ், அஞ்சலி தேவி நடிப்பில் வெளியான படம். ஆண்டு 1954. இயக்குநர் எம்வி ராமன்.

    செல்லப் பிள்ளை

    செல்லப் பிள்ளை

    கே ஆர் ராமசாமி - சாவித்திரி நடிப்பில வெளியான செல்லப் பிள்ளையும் எம் வி ராமன் இயக்கியதுதான்.

    பாய் பாய்

    பாய் பாய்

    எவி எம் தயாரித்த இந்திப் படம் பாய் பாய். அசோக்குமார் நாயகனாக நடிக்க, எம்வி ராமன் இயக்கிய இந்தப் படம் 1956-ல் வெளியானது.

    சோரி சோரி

    சோரி சோரி

    1956-ல் வெளியான ஏவிஎம்மின் இன்னுமொரு இந்திப் படம் சோரி சோரி. ராஜ் கபூர், நர்கீஸ் நடித்திருந்தனர். இயக்குநர் ஆனந்த் டாகுர். சங்கர் ஜெய்கிஷனுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது கிடைத்தது.

    மிஸ் மேரி

    மிஸ் மேரி

    எல்வி பிரசாத் இயக்கத்தில் 1957-ல் வெளியான இந்த இந்திப் படத்தில் ஜெமினி கணேசன், ஜமுனா, மீனா குமாரி நடித்திருந்தனர்.

    ஹம் பஞ்சி ஏக் தில்கே

    ஹம் பஞ்சி ஏக் தில்கே

    1957-ல் மாஸ்டர் ரோமி நடித்து வெளியான இந்திப் படம். பிஎல் சந்தோஷி இயக்கினார்.

    பூ கைலாஸ்

    பூ கைலாஸ்

    கன்னடத்தில் கே சங்கர் இயக்கிய பூ கைலாஸில், என்டி ஆர், கல்யாண் குமார், எஸ்வி ரங்காராவ் நடித்திருந்தனர். வெளியான ஆண்டு 1958. அதே ஆண்டில் இந்தப் படம் அதே பெயரில் தெலுங்கிலும் வெளியானது. ஹீரோ என்டிஆர். அதே ஆண்டு இந்தப் படம் தமிழில் பக்த ராவணா என்ற பெயரில் வெளியானது.

    மாமியார் மெச்சிய மருமகள்

    மாமியார் மெச்சிய மருமகள்

    எஸ்எஸ் ராஜேந்திரன், எம்என் ராஜம் நடித்த இந்தப் படம் வெளியான ஆண்டு 1959. கிருஷ்ணன் பஞ்சு இயக்கினர்.

    பாப் பேடே

    பாப் பேடே

    ராஜா பரஞ்ச்பே இயக்கத்தில் 1959-ல் அசோக்குமார் நடித்து வெளியான இந்திப் படம் இது.

    தெய்வப் பிறவி

    தெய்வப் பிறவி

    சிவாஜி, பத்மினி, எஸ்எஸ் ராஜேந்திரன் நடிக்க, கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய படம். வெளியான ஆண்டு 1960.

    பக்தி மகிமா

    பக்தி மகிமா

    கே சங்கர் இயக்கத்தில் என்டிஆர், ஜமுனா நடித்த தெலுங்குப் படம். வெளியான ஆண்டு 1960.

    பாவ மன்னிப்பு

    பாவ மன்னிப்பு

    சிவாஜி கணேசன், தேவிகா நடிக்க, ஏ பீம்சிங் இயக்கிய படம் இது. 1961-ல் வெளியானது.

    சய்யா

    சய்யா

    ஆஷா பரேக், சுனில் தத் நடித்த இந்திப் படம் சய்யா. 1961-ல் வெளியானது. ரிஷிகேஷ் முகர்ஜி இயக்கியிருந்தார்.

    பார்த்தால் பசி தீரும்

    பார்த்தால் பசி தீரும்

    சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் நடித்த படம். பீம்சிங் இயக்கத்தில் 1962-ல் வெளியானது.

    வீரத் திருமகன்

    வீரத் திருமகன்

    சிஎல் ஆனந்தன், சச்சு நடிப்பில் 1962-ல் வெளியான வீரத் திருமகனை இயக்கியவர் ஏ சி திருலோகச்சந்தர்.

    மன் மாவ்ஜி

    மன் மாவ்ஜி

    கிஷோர் குமார், சாதனா நடிப்பில் 1962-ல் வெளியான இந்திப் படம் இது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கியிருந்தனர்.

    அன்னை

    அன்னை

    கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் பானுமதி நடித்து 1962-ல் வெளியான படம் அன்னை.

    நானும் ஒரு பெண்

    நானும் ஒரு பெண்

    ஏசி திருலோகச்சந்தர் இயக்கத்தில் எஸ் வி ரங்காராவ், விஜயகுமாரி நடித்த படம். 1063-ல் வெளியானது.

    சர்வர் சுந்தரம்

    சர்வர் சுந்தரம்

    1963-ல் வெளியான சர்வர் சுந்தரம், தமிழ் சினிமாவில் முக்கியமான படம். இயக்கம் கிருஷ்ணன் பஞ்சு.

    குழந்தையும் தெய்வமும்

    குழந்தையும் தெய்வமும்

    ஏ சி திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளியான குழந்தையும் தெய்வமும் 1955-ல் வெளியானது. ஜெய் சங்கர்தான் ஹீரோ.

    மேஜர் சந்திரகாந்த்

    மேஜர் சந்திரகாந்த்

    ஜெயலலிதா - நாகேஷ் நடித்த இந்தப் படத்தை இயக்கியவர் கே பாலச்சந்தர். படம் வெளியான ஆண்டு 1966.

    பக்த பிரகலாதா

    பக்த பிரகலாதா

    சிஎச் நாராயணமூர்த்தி இயக்கத்தில் நான்கு மொழிகளில் வெளியான பக்த பிரகலாதாவில் எஸ் வி ரங்காராவ்தான் பிரதான வேடமேற்றார். பாலமுரளி கிருஷ்ணாவும் நடித்திருந்தார். வெளியான ஆண்டு 1967.

    அதே கண்கள்

    அதே கண்கள்

    ரவிச்சந்திரன் - காஞ்சனா நடிப்பில் ஏசி திருலோகச்சந்தர் இயக்கிய இந்தப் படம் 1967-ல் வெளியானது. இந்தப் படம் அதே கல்லு என்ற பெயரில் தெலுங்கிலும் வெளியானது.

    உயர்ந்த மனிதன்

    உயர்ந்த மனிதன்

    சிவாஜி - வாணி ஸ்ரீ நடிப்பில், கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 1968-ல் வெளியானது உயர்ந்த மனிதன்.

    அன்னையும் பிதாவும்

    அன்னையும் பிதாவும்

    கல்யாண் குமார், வாணி ஸ்ரீ நடித்த இந்தப் படம் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் 1969-ல் வெளியானது.

    எங்க மாமா

    எங்க மாமா

    1970-ல் சிவாஜி - ஜெயலலிதா இணையில் ஏ சி திருலோகச்சந்தர் இயக்கத்தில் உருவான படம் இது.

    ஜைஸே கோ தைஸா

    ஜைஸே கோ தைஸா

    1973-ல் வெளியான இந்த இந்திப் படத்தை இயக்கியவர்கள் எம் முருகன் - எம் குமரன். ஜீதேந்திரா - ரீனா ராய் நடித்திருந்தனர். ஆர்டி பர்மன் இசையமைத்தார்.

    புன்னமி நாகு

    புன்னமி நாகு

    சிரஞ்சீவி - ரதி நடித்த தெலுங்கு சூப்பர் ஹிட் படம். இந்தப் படத்தில்தான் மறைந்த இயக்குநர் ராஜசேகர் அறிமுகமானார்.

    முரட்டுக் காளை

    முரட்டுக் காளை

    எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த படம். இந்தப் படம்தான் தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய ட்ரெண்ட் செட்டர். இளையராஜா இசையமைத்திருந்தார்.

    சிவப்பு மல்லி

    சிவப்பு மல்லி

    ஏவிஎம்முக்காக விஜயகாந்த் நடித்த படம். இயக்குநர் ராம நாராணயன். 1981-ல் வெளியானது.

    சகலகலா வல்லவன்

    சகலகலா வல்லவன்

    கமல்ஹாஸன் நடித்து, எஸ்பி முத்துராமன் இயக்தில் 1982-ல் வெளியான படம்.

    முந்தானை முடிச்சு

    முந்தானை முடிச்சு

    1983-ல் வெளியானது முந்தானை முடிச்சு. பாக்யராஜ் இயக்கி நடித்து பெரும் வெற்றிப் பெற்ற படம்.

    புதுமைப் பெண்

    புதுமைப் பெண்

    1984-ல் வெளியான படம் இது. பாரதிராஜ் ஏவிஎம்முக்காக செய்த ஒரே படம் இது.

    நல்லவனுக்கு நல்லவன்

    நல்லவனுக்கு நல்லவன்

    ரஜினி நடிப்பில், எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வெளியான படம் இது. வெளியான ஆண்டு 1984.

    உயர்ந்த உள்ளம்

    உயர்ந்த உள்ளம்

    1985-ல் கமல் - அம்பிகா நடிப்பில், இளையராஜா இசையில் எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் வந்த படம்.

    மிஸ்டர் பாரத்

    மிஸ்டர் பாரத்

    1986-ல் வெளியான மிஸ்டர் பாரத்தில் ரஜினி - சத்யராஜ் நடித்திருந்தனர். எஸ் பி முத்துராமன் இயக்கினார்.

    சம்சாரம் அது மின்சாரம்

    சம்சாரம் அது மின்சாரம்

    மத்திய அரசின் தங்கத் தாமரை விருது பெற்ற படம். விசு நடித்து இயக்கியிருந்தார். 1986-ல் வெளியானது.

    பேர் சொல்லும் பிள்ளை

    பேர் சொல்லும் பிள்ளை

    கமல் நடித்து, எஸ்பி முத்துராமன் இயக்கத்தில் 1987-ல் வெளியான படம் இது.

    ராஜா சின்ன ரோஜா

    ராஜா சின்ன ரோஜா

    1989-ல் ரஜினி - கவுதமி நடிப்பில் வெளியானது ராஜா சின்ன ரோஜா. இயக்கம் எஸ் பி முத்துராமன்.

    எஜமான்

    எஜமான்

    ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் ரஜினி - மீனா நடித்த படம் இது. 1993-ல் வெளியாகி வெற்றி பெற்றது.

    மின்சாரக் கனவு

    மின்சாரக் கனவு

    1997-ல் வெளியான இந்தப் படத்தை ராஜீவ் மேனன் இயக்கினார், ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்தார். நான்கு தேசிய விருதுகளைக் குவித்த படம் இது.

    ஜெமினி

    ஜெமினி

    விக்ரம் நடிப்பில், சரண் இயக்கத்தில் 2002-ம் ஆண்டு வெளியான படம் ஜெமினி.

    சிவாஜி - தி பாஸ்

    சிவாஜி - தி பாஸ்

    ரஜினி நடிக்க, ஷங்கர் இயக்கத்தில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் உருவான சிவாஜி தி பாஸ், வசூலில் புது சரித்திரம் படைத்தது.

    அயன்

    அயன்

    சூர்யா, தமன்னா நடிக்க, ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்த சூப்பர் ஹிட் படம் இது. 2009-ல் வெளியானது.

    லீடர்

    லீடர்

    சேகர் கம்முலா இயக்கத்தில் ராணா நடித்த தெலுங்குப் படம் லீடர். 2011-ல் வெளியானது.

    முதல் இடம்

    முதல் இடம்

    விதார்த் நடிப்பில், ஆர் குமரன் இயக்கத்தில் வெளியான முதல் இடம் படம் எதிர்ப்பார்த்த வெற்றியைத் தரவில்லை. அதன் பிறகு வேறு படமும் எடுக்காமல் இருந்த ஏவிஎம், இப்போது இணையதளத்துக்காக ஒரு படத்தை இயக்கினர். யுடியூபில் காணக் கிடைக்கிறது.

    Read more about: avm tribute ஏவிஎம்
    English summary
    Here is the list of AVM Production's notable movies from 1942 to 2014.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X