»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரையலகைச் சேர்ந்த நடிகர், நடிகைகள் ஏப்ரல் மாத கடைசியில் துபாய் செல்கிறார்கள். எல்லாம் கலை நிகழ்ச்சி நடத்தி பணம்சுருட்டத் தான்.. ஸாரி பணம் ஈட்டத் தான்.

சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவர்கள் ஏதோ செய்யப் போகிறார்கள் என்று நினைத்துவிடாதீர்கள். நடிகர் சங்கத்திற்கு புதியகட்டடம் கட்டப் போகிறார்களாம். அதற்குத் தான் இந்த நிதி திரட்டும் கலை நிகழ்ச்சி.

தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சமீபத்தில் தேர்தல் நடந்தது. அதில், விஜயகாந்த் தலைமையிலான பழைய அணியே மீண்டும் வெற்றிபெற்றது. உடனே ஏதாவது செய்து தமிழர்களின் பாக்கெட்டை நோண்ட வேண்டுமே..!

அதற்காக துபாயில் ஏப்ரல் மாத இறுதியில் கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஏப்ரல் 28 அல்லது 29ம் தேதியில் இதுநடக்குமாம்.

முன்னணி நடிகர்கள் உள்பட 60க்கும் மேற்பட்ட நடிகர், நடிகையர் பட்டாளம் துபாய் செல்ல படு ஆர்வமாக இருக்கிறதாம். துபாய் தவிரமேலும் 2 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தவும் திட்டம் உள்ளதாம்.

மற்ற 2 நகரங்களில் ஒன்றாக சென்னையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறதாம். இந்தக் கலை நிகழ்ச்சிகள் மூலம் வசூல் செய்யப்படும் பணத்தைவைத்து புதிய கட்டடம் கட்டப் போகிறார்களாம். இந்தப் புதிய கட்டடம் வணிக வளாகம் போல அமையவுள்ளதாம்.

இதன் மூலம் கிடைக்கும் வாடகைப் பணத்தை வைத்து நலிவடைந்த கலைஞர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை அறிமுகம் செய்யப்போகிறார்களாம்.

ஒரு பக்கம் முகம் தெரியாத விவேக் ஓபராய்கள் சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தெருவில் இறங்கி வேலை பார்த்து உதவி செய்துகொண்டிருக்க, இந்தப் பக்கம் தியேட்டரில் வைத்து பறித்தது போக மிச்ச சொச்சத்தையும் தமிழனிடம் இருந்து சுரண்டும் வேலையில் நம்நடிகர்கள் இறங்கியுள்ளனர்.

இந்த "பணம் பறிக்கும்" வேலையை எப்போதுதான் நடிகர் சங்கம் கைவிடுமோ தெரியவில்லை.

Read more about: cinema tamil film tn cine stars

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil