»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சினிமா விளம்பரங்கள் கொடுக்கும் பாணியை கோடம்பாக்கம் மாடர்னாக்கிக் கொண்டுள்ளது.

முன்பெல்லாம், ஜிலு ஜிலுவென காற்றில் படபடக்கும் காகிதங்களால் சினிமா விளம்பரங்கள் ஜொலி ஜொலிக்கும். பிறகு வித்தியாசமானவாசகங்களை போட்டு அசத்தினார்கள். (உபயம்: பார்த்திபன்)

பார்த்திபனின் சோற்றுக் கட்சி என்ற படத்திற்கான விளம்பரம், தமிழகத்தின் மூலை முடுக்குகளை மிரட்டியதை யாரும் மறந்திருக்க மாட்டார்கள்.

பாட்ஷா படத்திற்காக, பிரமாண்ட நாயுடன், ரஜினி அமர்ந்திருப்பது போல விளம்பரம் பயமுறுத்தியது நினைவிருக்கலாம்.

தேவர் மகன் படத்திற்காக கமல் கையில் நிஜ அரிவாளைக் கொடுத்து விளம்பரப்படுத்தினார்கள்.

இப்போது கோடம்பாக்கம் வேறு ஒரு டிரண்டிற்கு மாறியிருக்கிறது. பிரமாண்ட பட கட் அவுட்களின் மத்தியில் படத்தின் பெயருக்கு மட்டும் நியான்விளக்குகளில் பொலிவு சேர்க்கிறார்கள்.

சென்னையின் உயிர் நாடியான அண்ணா சாலையில், ஆயிரம் விளக்குப் பகுதியில், விரும்புகிறேன், வாஞ்சிநாதன் படங்களின் பிரமாண்ட கட் அவுட்களின் மத்தியில்(விரும்புகிறேன் .. ரொம்பப் பிரமாண்டம்) அழகிய நியான் விளக்குகளில் படத்தின் டைட்டில் ஜொலிக்கிறது.

வித்தியாசமான இந்த விளம்பரம் பார்க்கவும் அழகாக இருக்கிறது. பளிச்சென, கண்ணைக் கவரும் இந்த விளம்பரங்களால் தூரத்திலிருந்து கூட படத்தின்பெயரைப் பார்க்க முடிகிறது.

இந்த புதிய பாணி மூலம் ஒரு பலன் இருக்கிறது. படம் தியேட்டரில் ஓடுகிறதோ இல்லையோ, வித்தியாசமான இந்த உத்திக்காக, விளம்பரங்கள்ரொம்ப நாளைக்கு மக்கள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil