»   »  அஜித்-ஷாலினி 'ஆதர்ஷ தம்பதிக்கு' இன்று 16வது திருமண நாள்! ரசிகர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்து

அஜித்-ஷாலினி 'ஆதர்ஷ தம்பதிக்கு' இன்று 16வது திருமண நாள்! ரசிகர்கள் நெஞ்சார்ந்த வாழ்த்து

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: கோலிவுட்டின் சிறந்த காதல் தம்பதி என்று போற்றப்படும் அஜீத்-ஷாலினி இன்று தங்களது 16 வது திருமண நாளில் அடியெடுத்து வைத்துள்ளனர்.

1999 ம் ஆண்டு அமர்க்களம் படத்தில் தொடங்கிய காதல் 2௦௦௦ மாவது ஆண்டு திருமணத்தில் முடிந்தது. இருவரின் காதல் வாழ்க்கைக்கு அடையாளமாக அனௌஷ்கா, ஆத்விக் என 2 குழந்தைகள் உள்ளனர்.

இன்று திருமண நாளைக் கொண்டாடும் இருவரையும் ரசிகர்கள் இணையத்தில் வாழ்த்த #happyweddingdayajithshalini என்ற ஹெஷ்டேக் தேசியளவில் ட்ரெண்டடித்து வருகிறது.

அதிலிருந்து ரசிகர்களின் வாழ்த்துக்கள் சிலவற்றை இங்கே பார்க்கலாம்.

உண்மையான அன்பு

இருவரின் உண்மையான அன்புதான் எங்களை திருவிழா போல கொண்டாட செய்கிறது என்று காஜா கூறியிருக்கிறார்

நல்ல துணை

'நல்ல துணை அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்' என்று அஜீத்-ஷாலினி தம்பதியை வாழ்த்தியிருக்கிறார் அப்கான்.

இல்லம்- வெல்லம்

இல்லம்-வெல்லம் என தம்பதியரை ரைமிங்காக வாழ்த்தியிருக்கிறார் விஜயலட்சுமி.

காதலர் தினம்

தல ரசிகர்களுக்கு இன்றுதான் காதலர் தினம் என்று கூறியிருக்கிறார் பெத்துராஜ்.

தீரா சந்தோஷமும்

'வேதாளம்' படத்தில் இடம்பெற்ற 'வீர விநாயகா' பாடல் வரிகளைப் பகிர்ந்து தம்பதியை வாழ்த்தியிருக்கிறார் உஷா.

அமர்க்களம்

இருவரின் காதலுக்கும் பிள்ளையார் சுழி போட்ட 'அமர்க்களம்' வசனத்தைப் பகிர்ந்து அஜீத்-ஷாலினியை வாழ்த்தியிருக்கிறார் விவேக்.

இதேபோல ஏராளமான ரசிகர்களின் வாழ்த்துக்களால் இணையத்தில் #happyweddingdayajithshalini என்னும் ஹெஷ்டேக் இந்தியளவில் ட்ரெண்டடித்து வருகிறது.

இதேபோல இத்தம்பதியினர் என்றும் வாழ ரசிகர்களுடன் இணைந்து நாமும் வாழ்த்துவோம்...

English summary
Today Ajith-Shalini Celebrating Their 16th Wedding Anniversary. Now #happyweddingdayajithshalini Hashtag Trending in India.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil