»   »  கி கா... பால்கிக்காக “சொந்த வீட்டிலேயே” நடித்த அமிதாப்பும், ஜெயாவும்!

கி கா... பால்கிக்காக “சொந்த வீட்டிலேயே” நடித்த அமிதாப்பும், ஜெயாவும்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மும்பை: பால்கியின் புதிய படமான ‘கி கா' படத்தில் அமிதாப் பச்சனும், அவரது மனைவி ஜெயா பச்சனும் இணைந்து கௌரவத் தோற்றத்தில் நடித்துள்ளனர்.

அர்ஜூன் கபூர், கரினா கபூர் நடிப்பில் பால்கி இயக்கி வரும் புதிய படம் ‘கி கா'. ஏற்கனவே, பால்கி இயக்கத்தில் அமிதாப் சீனிகம், பா, ஷமிதாப் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில், பால்கியின் புதிய படமான கி கா'விலும் அமிதாப் நடிக்க உள்ளார். ஆனால், தனியாக அல்ல, தன் மனைவியுடன்.

போட்டோக்கள்...

போட்டோக்கள்...

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார் அமிதாப். கூடவே, ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார்.

வேலை செய்வேன்...

வேலை செய்வேன்...

அதில், அவர் கூறுகையில், "நான் வேலை செய்வேன். நான் என் மனைவியுடன் வேலை செய்வேன். பால்கிக்காகவும் வேலை செய்வேன்.

நாங்கள் நாங்களாகவே...

நாங்கள் நாங்களாகவே...

அர்ஜூன் கபூர், கரினா கபூர் நடிக்கும் கி கா படத்தில் நாங்களும் நடிக்கிறோம். கௌரவத் தோற்றத்தில் நாங்கள் நாங்களாகவே நடிக்கிறோம்.

சொந்த வீட்டிலேயே...

திரைப்படங்களில் பார்க்கும் வீட்டில் அல்லாமல், எங்களது சொந்த வீட்டிலேயே இந்தப் படத்தில் நடிக்கிறோம்' என இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு...

பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு...

இந்தப் படத்திற்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு இந்தப் படம் ரிலீசாக உள்ளது.

English summary
Bollywood star couple Amitabh and Jaya Bachchan have a cameo in director R Balki’s upcoming romantic comedy-drama film “Ki and Ka”, where they play themselves.
Please Wait while comments are loading...