»   »  கொலைவெறி தொடங்கி ஆலுமா டோலுமா வரை... அனிருத் கடந்து வந்த பாதை

கொலைவெறி தொடங்கி ஆலுமா டோலுமா வரை... அனிருத் கடந்து வந்த பாதை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: இளம் இசையமைப்பாளர் அனிருத்தின் 25வது பிறந்த நாள் இன்று. 1990ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி ரவிச்சந்தர்- லட்சுமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த அனிருத் இன்று தனது 25 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார்.

தனது 21 வது வயதில் 3 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அடியெடுத்து வைத்த அனிருத் இன்று முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராகத் திகழ்கிறார்.

இந்த 4 வருடங்களில் 10 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார் தற்போது கைவசமும் ஏராளமான படங்கள் இருக்கின்றன. இந்தப் பிறந்தநாளில் அனிருத் கடந்து வந்த பாதை அவரின் படங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

அனிருத் ரவிச்சந்தர்

சிறந்த இசையமைப்பாளர், பாடகர் ஏன் நல்ல நடனக் கலைஞராகவும் அறியப்படும் அனிருத் இன்று தனது 25 வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். இவரின் பிறந்தநாள் பரிசாக வேதாளம் படத்தின் பாடல்களை படக்குழுவினர் இன்று வெளியிட்டு இருக்கின்றனர். ரசிகர்கள் மற்றும் நட்சத்திரங்கள் பலரும் அனிருத்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை சமூக வலைதளங்கள் மூலமாக பகிர்ந்து வருகின்றனர்.

3

3

அனிருத்தின் உறவினர் ஐஸ்வர்யா தனுஷ் இயக்குநராக அவதாரமெடுத்த 3 திரைப்படம் அனிருத் திரையுலக வாழ்க்கைக்கும் ஒரு தொடக்கமாக அமைந்தது. மற்ற இசையமைப்பாளர்களைப் போல பெரிய போராட்டம் எதுவுமின்றி 3 படத்தில் இசையமைப்பாளராக மாறிய அனிருத்துக்கு 3 படம் உலகளவில் ஒரு நல்ல அடையாளத்தைப்பெற்றுத் தந்தது.

கொலைவெறி

குறிப்பாக படத்தில் இடம்பெற்ற கொலைவெறி பாடல் அனிருத்தின் இசையை உலகளவில் கொண்டு சேர்த்தது. படம் வந்து 4 வருடங்கள் கடந்தும் கூட பாடல் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் ஒரு தனியிடத்தைப் பெற்றிருக்கிறது. மேலும் யூடியூபில் அதிகம் பார்க்கப்பட்ட பாடலாகவும் கொலைவெறி பாடல் இருக்கிறது.

4 ஆண்டுகளில்

4 ஆண்டுகளில்

இந்த 4 ஆண்டுகளில் 3 தொடங்கி எதிர் நீச்சல், டேவிட், இரண்டாம் உலகம், வணக்கம் சென்னை, வேலையில்லாப்பட்டதாரி, மான் கராத்தே, காக்கிச்சட்டை, மாரி, கத்தி என மொத்தம் 10 படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இதில் இரண்டாம் உலகம், டேவிட் போன்ற படங்களில் மட்டும் அனிருத்தின் இசை பெரிதாக எடுபடவில்லை. மற்ற படங்கள் அனைத்திலும் பாடல்கள் ஹிட்டாகி இன்று அனிருத்தை தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாற்றியிருக்கிறது அவரின் இசையார்வம்.

தெலுங்கிலும்

தெலுங்கிலும்

தற்போது அனுசுயா ராமலிங்கம் vs ஆனந்த் விஹாரி படத்தின் மூலம் தெலுங்கிலும் தனது தனது இசை ராஜ்ஜியத்தை அனிருத் தொடரவிருக்கிறார். நிதின் - சமந்தா நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படம் 2016 ம் ஆண்டு ஜனவரியில் வெளியாகவிருக்கிறது.

கைநிறைய படங்கள்

கைநிறைய படங்கள்

ஆக்கோ, வேதாளம், தங்கமகன், சிங்கம் 3 மற்றும் நானும் ரவுடிதான் போன்ற படங்களுக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இதில் வேதாளம் திரைப்படம் அஜீத் நடிப்பில் தீபாவளி வெளியீடாக திரைக்கு வரவிருக்கிறது.

இளைய தலைமுறையினரின்

இளைய தலைமுறையினரின்

இளம் இசையமைப்பாளர் என்பதால் இளைஞர்களை தனது இசையால் வசப்படுத்தி இருக்கிறார் அனிருத். இளமையுடன் இணைந்த துள்ளல் இசை அனிருத்தை இளைய தலைமுறையினருக்கு பிடித்தவராக மாற்றியிருக்கிறது. இன்னும் நிறைய படங்களுக்கு அனிருத் இசையமைக்க வேண்டும் என்று இந்தப் பிறந்தநாளில் மனமார வாழ்த்துவோம்.

பிறந்தநாள் வாழ்த்துக்கள் அனிருத்!

English summary
Young Music Director Anirudh Ravichander Today Celebrating his 25th Birthday.From thatsTamil and all our Readers around the world, wishing this marvelous Music Composer a wonderful birthday ahead.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil