»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஒரு வழியாக புதுக்கோட்டையிலிருந்து சரவணன் அபர்ணாவுக்கு நல்ல காலம் பிறக்கிறது.

குட்டியாக இருந்தாலும் சுட்டியாகவும், முறுக்கிவிட்ட வீணை மாதிரியும் கிண் என்ற உடல் வாகுடன் வலம் வரும் அபர்ணாவுக்கு முதல்படத்தின் தோல்வியைத் தொடர்ந்து வேறு ஒரு படமும் வரவில்லை.

மலையாளத்திலும் கன்னடத்திலும் கிடைத்த சில வாய்ப்புக்களும் படமாக மாறவில்லை. மலையாளத்தில் இவர் நடித்த ஒரு படம் மட்டுமேரிலீஸ் ஆனது. மற்ற ப்ராஜெக்டுகள் தூங்கி வழிகின்றன.

வசதி பார்ட்டியான அபர்ணாவிடம் பணம் பார்த்துவிட முயன்ற சில உப்புமா கம்பெனிக்காரர்கள், நாங்கள் படம் எடுக்கிறோம், நீங்கள்பைனான்ஸ் பண்ணுங்கள் என்று கேட்டுக் கொண்டு வீட்டு காலிங் பெல்லை அமுக்க, நாயை விட்டு விரட்டாத குறையாக அவர்களைதிருப்பி அனுப்பி வைத்தார் அபர்ணா.

இதனால் வீட்டிலேயே சும்மா பொழுதைப் போக்கிய அபர்ணாவுக்கு கை கொடுக்க முன் வந்திருக்கிறார் இயக்குனர் சேரன். இவர் இயக்கிநடிக்கப் போகும் பொக்கிஷம் என்ற படத்தில் அபர்ணாவை புக் செய்துவிட்டார்.

இயல்பான துறுதுறு தமிழ்ப் பெண் கேரக்டருக்கு அபர்ணா தான் கரெக்ட் என்று முடிவு கட்டி இந்த வாய்ப்பைத் தந்துள்ளாராம் சேரன்.

இந்த வாய்ப்பால் முகம் மலர்ந்து போய் இருக்கும் அபர்ணாவுக்கு அடுத்தாக சிபிராஜுடன் ஜோடியாக நடிக்க ஒரு சான்ஸ் கிடைத்துள்ளது.இந்தப் படத்தை இயக்கப் போவது செல்வா.

இவை தவிர அன்பிற்கினிய, பயோ-டேட்டா ஆகிய இரு படங்களும் தமிழில் கிடைத்துள்ளன.

இந்த நான்கு படங்களின் சூட்டிங்குகளும் விரைவில் தொடங்கப் போகின்றன.

திடீரென சேரன் மாதிரியான பெரிய டைரக்டர்களின் வாய்ப்புக்கள் வந்துவிட்டன.. சந்தோஷமா என்று கேட்டபடி இனியும்புதுக்கோட்டையிலிருந்து சரவணன் மாதிரி அநியாயத்துக்கு கவர்ச்சி காட்டுவீர்களா அல்லது அடக்கி வாசிப்பீர்களா என்று ஒருகேள்வியைப் போட்டோம்.

சினிமா என்றாலே கவர்ச்சி தானே. கவர்ச்சி இல்லாமல் சினிமாவே இல்லை. இதனால் நான் அப்படி நடிக்க மாட்டேன், இப்படி நடிக்கமாட்டேன் என்றெல்லாம் சொல்ல மாட்டேன் என்று அதிரடியாய் பதில் தருகிறார் அபர்ணா.

அழகும் இளமையும் எப்போதும் இருக்குமா? இருக்கிற வரை அதை காட்டுவதில் என்ன தப்பு என்றார்.

பரத நாட்டியம் கற்ற அபர்ணாவுக்கு அழகாக கீ-போர்ட் வாசிக்கவும் தெரியுமாம். ஷட்டில் விளையாட்டில் ஆர்வம் ஜாஸ்தியாம், நன்றாகசமைக்கத் தெரியும் என்றும் சொல்கிறார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil