»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நியூயார்க்:

இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் தென் மேற்குப் பருவக் காற்று நியூயார்க் பக்கம் வீசி,லாங் ஐலண்ட் தீவின் நஸாவ் ஆடிட்டோரியத்தில் நிறைந்திருந்த 15,000க்கும்மேற்பட்ட ரசிகர்களை குளிர்வித்தது.

82 உறுப்பினர் கொண்ட ரஹ்மானின் இசைப் படை, லாங் ஐலண்ட் தீவிலுள்ள நஸாவ்ஆடிட்டோரியத்தில் இசை நிகழ்ச்சியை நடத்தியது. இதுவரை அமெரிக்காவில்நடந்திராத மிகப் பெரியஇசை நிகழ்ச்சியாக ரஹ்மானின் இசை நிகழ்ச்சிக்குவிளம்பரங்கள் செய்யப்பட்டிருந்தன.

"ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் இன் கன்சர்ட் என்று பெயரிடப்பட்டிருந்த இந்த இசைநிகழ்ச்சியில் ஆப்பிரிக்க, பிரேசில் நாட்டு இசைக் கலைஞர்களும் கலந்து கொண்டனர்.

34 வயதாகும் ரஹ்மான் மொத்தம் 4 மணி நேரம் நிகழ்ச்சியை நடத்தினார். 15,000வாட்ஸ் செளன்ட் சிஸ்டங்களுடன், இந்தியாவிலிருந்து வந்திருந்த 14 பாடகர்கள், 68இசைக் கலைஞர்களுடன் ரஹ்மான் நடத்திய இசை கச்சேரியில் அரங்கமே கட்டுண்டுகிடந்தது. மொத்தம் 600 எடை கொண்ட இசைக் கருவிகள் நிகழ்ச்சியில்பயன்படுத்தப்பட்டன.

இந்திய இசைக் குழு ஒருபுறமும், மறு பக்கத்தில் மேற்கத்திய இசைக் குழுவும்இசைத்தன. இவர்கள் தவிர உள்ளூரைச் சேர்ந்த 24 பேர் குழுவும் கச்சேரியில் கலந்துகொண்டன.

நிகழ்ச்சியின் துவக்கத்தில் ரஹ்மான் பேசுகையில், அமெரிக்கஇசையமைப்பாளர்களுடன் சேர்ந்து இசையமைப்பதற்காக பெருமைப்படுகிறேன்என்றார்.

வெள்ளை நிறத்தில் உடையணிந்திருந்த ரஹ்மான், பியானோ வாசித்தபடி இசைக்குழுவை வழி நடத்தினார்.

நிகழ்ச்சியில் ரஹ்மான் இசையமைத்திருந்த தமிழ், இந்தி மற்றும் அவரது பிறதிரைப்படம் இல்லாத பாடல்கள் இசைக்கப்பட்டன.

ரஹ்மானின் இந்த நிகழ்ச்சியில், உதித் நாராயணன், எஸ்.பி.பாலசுப்ரமணியம்,ஹரிஹரன், கவிதா கிருஷ்ணமூர்த்தி, சுக்வீந்தர் சிங், சாதனா சர்கம், சங்கர் மகாதேவன்ஆகியோர் கலந்து கொண்டு பாடினர்.

ஆடிட்டோரியத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களும் சிலநேரங்களில் இசைக்கேற்ப கை, கால்களை அசைத்தது, இசைக்கு மொழி அநாவசியம்என்பதை நிரூபித்தது.

நிகழ்ச்சியில், பல ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளவருமானஇங்கிலாந்துக் கவிஞர் டான் பிளாக் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

ரஹ்மான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த பாரதீய வித்யா பவன் செயல் இயக்குநர்ப.ஜெயராமன் கூறுகையில், மனிதர்களை ஒருங்கிணைக்க இசையால் மட்டுமே முடியும்என்பதை இந்த நிகழ்ச்சி காட்டியுள்ளது என்றார்.

நியூயார்க் தவிர, டொரன்டோ, லாஸ் ஏஞ்சலஸ், சான் பிரான்சிஸ்கோ ஆகியநகரங்களிலும் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil