ஹீரோயினிடம் முத்தக் காட்சியை விளக்குவதுபோல் பாரதிராஜா என்னிடம் தயங்கினார்... பிரபல காட்சி பற்றி கமல்
சென்னை: நடிகர் கமல்ஹாசன் தற்சமயம் பிக் பாஸ் சீசன் 6-ஐ பரபரப்பாக தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
தனது ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்துக் கொண்டிருக்கும் அதே வேளையில் தான் நடிக்கும் படங்களுக்கான பேச்சுவார்த்தைகளையும் நடத்திக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் ஒரு காட்சியை பாரதிராஜா தன்னிடம் விவரித்தது பற்றி கமல் சுவாரசியமாக கூறியிருக்கிறார்

16 வயதினிலே
இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களின் அறிமுகப் படம் என்பதை தாண்டி தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர் திரைப்படம் என்ற பெருமைக்குரியது 16 வயதினிலே திரைப்படம். அது மட்டுமின்றி நடிகர்கள் கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி, கவுண்டமணி, இசைஞானி இளையராஜா, இயக்குநர்கள் பாரதிராஜா, பாக்யராஜ், அந்தப் படத்தின் விநியோகஸ்தராக நடிகர் ராஜ்கிரன் போன்ற பல ஜாம்பவான்கள் இணைந்த படம் 16 வயதினிலே.

பாரதிராஜா எனும் சப்பானி
16 வயதினிலே படத்தில் கதாநாயகன் என்று யாரும் கிடையாது. சப்பானி என்கிற கதாபாத்திரம் கூட, யாரேனும் கிண்டல் செய்தால் அது தன்னைத்தான் கிண்டல் செய்கிறார்கள் என்று தெரியாமல் அவர்களுடன் சேர்ந்து சிரிக்க கூடிய ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். ஆனால் ஸ்பாட்டில் உண்மையான சப்பானியாக இருந்தது பாரதிராஜாதான். ஏனென்றால் சுற்றி முற்றி என்ன நடக்கிறது என்று கவனிக்காமல் முழுக்க முழுக்க படத்திலேயே கவனமாக இருப்பார்.

மக்களின் அன்பு
பாரதிராஜாவிற்கு கிடைக்க வேண்டிய சரியான மரியாதையை தமிழக மக்கள் அள்ளிக் கொடுத்து பாராட்டி தீர்த்து விட்டார்கள். முதலில் சப்பானி என்கிற கதாபாத்திரத்தை எழுதியபோது அது நொண்டி நடக்க வேண்டும் என்று பாரதிராஜா எழுதவில்லையாம். அந்தக் கதாபாத்திரம் நொண்டி நடித்தால் நன்றாக இருக்கும் என்பது கமல்ஹாசன் அவர்களின் ஆலோசனையாம். சப்பாணி கதாபாத்திரம் எந்த அளவிற்கு கேலி செய்யப்படுகிறதோ அந்த அளவிற்கு கிளைமாக்சில் கைத்தட்டல் வாங்கும் என்று கமல் ஹாசன் கூறியிருக்கிறார்.

கோமணம்
வெறும் கோமணத்துடன் நடிக்க வேண்டிய காட்சியை முதலில் பாரதிராஜா என்னிடம் கூறும்போது மிகவும் தயங்கினார். ஒரு முத்தக் காட்சியை ஹீரோயினிடம் விளக்குவது போல தயங்கி தயங்கி என்னிடம் ஏதோ சொல்ல வந்தார். பிறகு கோமணம் கட்டி நடிக்க வேண்டும் என்று கூறியவுடன் நான் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உடைகளை அவிழ்த்துவிட்டு கோமணத்துடன் வந்து நடித்தேன். அவர் என்னை "வெட்கம் கெட்ட நடிகன்யா நீ... பரமக்குடி பிச்சிட்டய்யா..." என்று என்னை மகிழ்ச்சியாக கொண்டாடினார் பாரதிராஜா என கமல் ஹாசன் அவரைப் பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications











