தமிழில் பட்ட அவமானம்.. தந்தையின் திடீர் மரணத்தில் நடந்த திருமணம்.. நடிகை ஹேம மாலினியின் கதை!

சென்னை: பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்தவர் தான் நடிகை ஹேம மாலினி. அந்த காலத்தில் அதிகம் சம்பளம் வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருந்த ஹேம மாலினிக்கு, இப்போது வரைக்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு. தமிழ் நடிகையாக இருந்து அதன்பிறகு தான் பாலிவுட் சென்று மிகப்பெரிய முன்னணி நடிகையானார் என்று சொல்லப்படுகிறது. ஆனால், உ ண்மையில், தமிழில் அவருக்கு படவாய்ப்பு இல்லாததாலும், இவர் எல்லாம் ஒரு நடிகையா என பலர் இவரை கேலி செய்ததாலும், நான் ஒரு சிறந்த நடிகை என்பதை நிரூபித்து காட்டுகிறேன் என்கிற வெறியேடு பாலிவுட் சென்றவர் தான் நடிகை ஹேமமாலினி.

நடிகை ஹேம மாலினி 1948 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 16ஆம் தேதி தஞ்சாவூரில் பிறந்தார். சக்கரவர்த்தி ஐயர், ஜெயலக்ஷ்மி தம்பாதிகளுக்கு மகளாக பிறந்த இவர், படித்தது வளர்ந்தது எல்லாமே சென்னையில் தான்.ஹேம மாலினியின் கண்கள் மிகவும் அழகாக மற்றவரை கவரும் வகையில் இருக்குமாம். நடனத்தின் மீது ஈடுபாடு கொண்ட இவர், பரதம் கற்றுக்கொண்டு ஏராத மேடையே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பாரதத்தில் சிறந்து விளங்கினார்.

Hema Malini dharmendra Bollywood
Photo Credit:

முதல் திரைப்படம் : ஹேமா மாலினி 1962 ஆம் ஆண்டு தமிழில் வெளியான 'இது சத்தியம்' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதை தொடர்ந்து 'பாண்டவபாசம்' என்கிற தெலுங்கு திரைப்படத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்தார்.
இரண்டு திரைப்படத்தில் நடித்த பிறகும் ஹேம மாலினிக்கு எந்த படத்திலும் துணை நடிகையாக கூட நடிப்பதற்கு வாய்ப்பு வரவில்லை. ஹேம மாலினிக்கு நடிப்பை விட நடன கலைஞராக வரவேண்டும் என்பதில் தான் ஆர்வம். ஆனால், ஹேம மாலினியின் அம்மாவிற்கு தன்னுடைய மகள் நடிகையாக வரவேண்டும் என்ற ஆசை இருந்ததால், ஹேம மாலினி சினிமாவிற்கு வந்தார்.

ட்ரீம் கேர்ள்: தமிழில் வாய்ப்பு இல்லாததால ஹிந்தி பக்கம் சென்ற ஹேம மாலினி முதல் முதலா sapnon ka saudagar என்ற இந்தி படத்தில் 'ட்ரீம் கேர்ள்' என்ற கதாபாத்திரத்தில் ஒரு சின்ன ரோலில் நடித்திருந்தார். அந்த திரைப்படத்தை தொடர்ந்து பாலிவுட் கொண்டாடும் 'ட்ரீம் கேர்ளாக' அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகை என பெயர் எடுத்தார். அந்த காலம் மட்டுமில்லாமல், இந்த காலம் வரைக்கும் ட்ரீம் கேர்ள் என்றால் அது ஹேம மாலினி தான் என ரசிகர்கள் கொண்டாடும் ஒரு நடிகையாக இருக்கிறார்.

Hema Malini dharmendra Bollywood
Photo Credit:

மனதில் பூத்த காதல்: Andaa, Seetha au geetha,dharmathma, sanyasi, sholey என அடுத்தடுத்து பல வெற்றித் திரைப்படத்தில் நடித்து ஏராளமான விருதுகளை பெற்ற ஹேம மாலினி, பாலிவுட் டாப் நடிகர் தர்மேந்திராவுடன் இணைந்து 28-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்கள். அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்ததால், ஹேம மாலினியும் தர்மேந்திராவும் ஒருவரை ஒருவர் காதலித்துள்ளனர். ஆனால், தர்மேந்திராவிற்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியும் குழந்தைகளும் இருப்பதால், இந்த திருமணத்திற்கு ஹேம மாலினியின் பெற்றோர் சம்மதிக்க வில்லை. அந்த நேரத்தில் இந்தி நடிகர் ஜிஜேந்திரா ஹேம மாலினியை காதலிப்பதாகவும் திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் ஹேம மாலினியின் பெற்றோரிடம் சொல்ல, அவர்களும் திருமணத்திற்கு சம்மதித்தனர்.

Take a Poll

தந்தையின் மரணம்: இதையடுத்து சென்னையில் ஹேம மாலினி, ஜிஜேந்திர திருமணத்திற்கான ஏற்பாடுகள் சென்னையில் நடந்தது. சினிமாவில் வருவது போல திருமணம் நடக்கும் போது வந்த தர்மமேந்திரா திருமணத்தை நிறுத்தினார். ஹேம மாலினி, தர்மேந்திரா திருமணத்தை கொஞ்சமும் விரும்பாத ஹேம மாலினியின் தந்தை இவர்களின் காதலுக்கு எதிரியாகவே இருந்துள்ளார். ஒரு கட்டத்தில் ஹேம மாலியின் தந்தை இறந்த விட, அதன் பிறகு தான் ஹேம மாலினி, தர்மேந்திரா திருமணம் நடந்தது.1980 ஆம் ஆண்டு சென்னையில் எளிமையாக நடந்தது. ஹேமா மாலினியை தர்மேந்திரா திருமணம் செய்து கொண்ட பிறகும், தர்மேந்திரா தனது முதல் மனைவியை விவாகரத்து செய்யவில்லை. அனைவரும் தனித்தனியாக ஒன்றுமையாக வாழ்த்து வருகிறார்கள். ஹேம மாலினி தர்மேந்திரா தம்பதிகளுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். திருமணமாகி 45 ஆண்டுகள் ஆன போதும், ஹேம மாலினி, தர்மேந்திரா இருவரும் அதே காதலுடன் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X