»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil


கிசுகிசுக்களால் வாய்ப்புக்களை இழந்து பிரிந்த ஸ்ரீகாந்த்-சினேகா ஜோடி மீண்டும் போஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும்இணைகிறது.

இவர்கள் இருவரும் இணையும் நடிக்கும் மூன்றாவது படம் இது. தொடர்பான செய்திகள் இவர்கள் இணைந்து நடித்த ஏப்ரல் மாதத்தில்சுமாராக ஓடியது. அடுத்த படமான பார்த்திபன் கனவு ஹிட்டானது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனியே சந்திக்கஇருவருக்கும் லவ் பத்திக்கிச்சு.. அது தொடர்பான கிசுகிசுக்களும் பத்திக்கிச்சு.

இந் நிலையில் ஸ்னேகாவுக்கும் ஸ்ரீகாந்த்துக்கும் அடுத்தடுத்து விபத்துக்குள் நடிக்க இருவரும் ஒருவரை ஒருவர் அருகில் இருந்துகவனித்துக் கொண்டனர். பலன்.. கோடம்பாக்கத்தில் இருவருமே வாய்ப்புக்களை இழந்தது. இதனால் தெலுங்குக்குப் போய்முட்டி மோதிப் பார்த்தார் ஸ்ரீகாந்த். ஸ்னேகாவும் அங்கே போனார்.

ஒர்க் அவுட் ஆகவில்லை. இந் நிலையில் இருவரும் காதலை தூக்கி தூரமாய் வைத்துவிட்டு சான்ஸ் வேட்டையில் இறங்கஉன்னைப் பார்த்த நாள் முதல், மனசெல்லாம் என ஸ்ரீகாந்த்துக்கு சான்ஸ் கிடைத்தது. இரு படங்களுமே சுமாராக ஓடிய நிலையில்ஜூட் கிடைத்தது. படம் படு ஓட்டம் ஓடியதால் அடுத்தடுத்து வாய்ப்புக்கள் வந்தவண்ணம் உள்ளன.

ஸ்னேகாவுக்கும் ஜனா, ஆட்டோகிராப் உள்பட பல வாய்ப்புக்கள் வந்தன. பிரிந்ததால் கிடைத்த பலன்கள் இவை.


இந் நிலையில் அவ்வை சண்முகி படத்தை தயாரித்த ஸ்ரீமகாலட்சும் கம்பைன்ஸ் நிறுவனம், போஸ் என்ற அடுத்த படத்தைஎடுக்கிறது. இதில் ஸ்ரீகாந்த்-சினேகா ஜோடியைப் வளைத்துப் போட்டுள்ளார்கள். இதற்காக இருவரையுமே மிகவும் கன்வின்ஸ்செய்ய வேண்டி வந்ததாம். ஜோடி சேர்ந்தால் மீண்டும் கிசுகிசுக்கள் வந்து வாய்ப்புக்களுக்கு வேட்டு வைக்குமோ என்ற பயம்இருக்கும்.

ஆனாலும் இறுதியில் வென்றது தயாரிப்பாளர் தான். இந்தப் படத்தை இயக்கப் போவது தயா படத்தை இயக்கிய செந்தில்குமார்.இசை யுவன்சங்கர்ராஜா இசையமைக்கிறார். பா.விஜய், கலைக்குமார், சினேகன், யுகபாரதி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள்.

விஜய் மில்டன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெய்சங்கர் படத்தொகுப்பு செய்கிறார். சண்டைக் காட்சிகளை பீட்டர் ஹெய்ன்கவனிக்கிறார்.

படத்தில் கமாண்டோ படை வீரராக ஸ்ரீகாந்த் நடிக்கிறார். படத்தின் பெரும்பான்மையான காட்சிகளை டெல்லி மற்றும் கோவாபகுதிகளில் எடுக்கிறார்கள். பாடல் காட்சிகளுக்காக வெளிநாடுகளுக்குப் போகத் திட்டமிட்டுள்ளனர். காதல், ஆக்ஷன்இரண்டையும் கலந்து கட்டி கொடுக்கவிருப்பதாக இயக்குநர் செந்தில்குமார் கூறுகிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil