»   »  சிரஞ்சீவி மீது தம்பி மனைவி புகார்

சிரஞ்சீவி மீது தம்பி மனைவி புகார்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி நடிகர் பவன் கல்யாணின் மனைவி நந்தினி, தனது கணவர், சிரஞ்சீவி உள்ளிட்டோர் மீது நீதிமன்றத்தில் புகார் கூறியுள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி பவன் கல்யாணும் தெலுங்கில் பிரபல நடிகராக உள்ளார். இவரது மனைவி நந்தினி.

நந்தினி, விசாகப்பட்டனத்தில் உள்ள நீதிமன்றத்தில் நேற்று புகார் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், எனது கணவருக்கு இன்னொரு திருமணம் நடந்துள்ளது. எனது சம்மதம் இல்லாமல் அவர் கல்யாணம் செய்து கொண்டுள்ளார்.

இந்த கல்யாணத்துக்கு சிரஞ்சீவி மற்றும் அவரது குடும்பத்தினரும் உடந்தையாக இருந்துள்ளனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் நந்தினி.

சிரஞ்சீவி, பவன் கல்யாண், சிரஞ்சீவியின் இன்னொரு தம்பியும் நடிகருமான நாகேந்திரபாபு உள்ளிட்ட சிரஞ்சீவி குடும்பத்தினர் 14 பேர் மீது குற்றம் சாட்டியுள்ளார் நந்தினி.

இந்தப் புகாரை இன்னும் பார்க்கவில்லை என்றும் பார்த்த பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நீதிபதி கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.

சிரஞ்சீவி குடும்பத்தினர் மீது நந்தினி கொடுத்துள்ள புகாரினால் தெலுங்குத் திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil