»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

இந்த ஆண்டின் ஆரம்பமே கோலிவுட்டுக்கு சரியில்லை. ஜனவரியில் ரிலீஸ் ஆன ஒரு படமும் சொல்லிக் கொள்ளும்படி வசூலை பார்க்கவில்லை.

பொங்கலையொட்டி விஜய்யின் திருப்பாச்சி, சரத்குமாரின் ஐயா, தனுஷின் தேவதையைக் கண்டேன், சத்யராஜின் அய்யர் ஐ.பி.எஸ், பிரஷாந்த்தின் ஆயுதம், டான்ஸர்,பொங்கலுக்குப் பிறகு அயோத்தியா ஆகிய படங்கள் வெளிவந்தன.

இதில் எதுவுமே ஹிட் ஆகவில்லை என்கிறது கோலிவுட் வட்டாரம். தேவதையைக் கண்டேன், திருப்பாச்சி, ஐயா சுமாராக ஓடுகிறதாம்.

ஆனாலும் கூட வசூல் திருப்தியில்லையாம். முதல் வாரம் வந்த வசூல், அடுத்த வாரம் காற்றோடு போய்விட்டது.

ஆயுதம், அய்யர் ஐ.பி.எஸ், டான்ஸர் ஆகியவை பிளாப் பட வரிசையில் சேர்ந்துள்ளனவாம்.

திருப்பாச்சி பெரிய எதிர்பார்ப்புடன் வந்தது. ஆனால் படத்தின் வசூல் படு சுமார்தானாம்.


ஆனால், அதை மறைப்பதற்காக கில்லி வசூலை தாண்டியது திருப்பாச்சி என்று டுபாக்கூர் செய்தியை பரப்பி வருகிறார்கள். இந்த படங்களின் முதல் இருவாரவசூலில் திருப்பாச்சியே டாப் என்று நூல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மை வேறு மாதிரியாக இருப்பதால் விஜய் தரப்பு கொஞ்சம் டென்ஷனாகவே உள்ளது.

வழக்கம் போல இந்தப் படத்திலும் அஜீத்தை மறைமுகமாக கலாய்த்திருக்கிறார் விஜய். விஜய் இப்படியே 4 பாட்டு, படம் பூரா பைட்டு என்று நடித்துக்கொண்டிருந்தால், அம்புட்டுத்தான் என்கிறார்கள் கோலிவுட்டின் நாடி அறிந்தவர்கள்.

ஒரு கால் இழந்த குட்டியின் நடிப்பு டான்ஸரில் நன்றாக இருந்தும் கூட படத்தின் வசூல் சரியில்லை என்கிறார்கள்.


திருட்டு விசிடி ஒழிப்பு, தியேட்டர் டிக்கெட் கட்டணம் ஏற்றம் என பல சலுகைகள் இருந்தும், இத்தனைத் தோல்விப் படங்களை ஒரே மாதத்தில் தமிழ்திரையுலகம் கண்டுள்ளது, கோலிவுட்டில் டென்சனை கூட்டியிருக்கிறது.

வெறும் பில்டப், பஞ்ச் டயலாக்குகள் ஆகியவற்றை மட்டும் வைத்து ரசிகர்களை இனியும் ஏமாற்ற முடியாது என்பதை ஹீரோக்கள் உணர்ந்து கொண்டுநல்ல கதைகளுடன் கூடிய படங்களில் நடிக்க முயற்சிக்க வேண்டும்.

கோலிவுட் பண்டிட்டுகளுக்கு இது காதில் ஏறுமா?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil