»   »  தமிழுக்குத் தடா போடும் டோலிவுட்!

தமிழுக்குத் தடா போடும் டோலிவுட்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் திரைப்படங்கள் தெலுங்குப் படங்களை தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு வசூலைஅள்ளி வருவதால் ஆந்திராவில் நேரடித் தமிழ்ப் படங்களையும், டப்பிங்படங்களையும் அனுமதிப்பதில்லை என்று தெலுங்குத் திரையுலகினர் முடிவுசெய்துள்ளனர்.

ஒரு காலத்தில் பிற மொழிப் படங்களின் ரீமேக்கும், டப்பிங்கும் தமிழ்த் திரையுலகைஆட்டிப் படைத்து வந்தன. குறிப்பாக தெலுங்கில் வெளியான பல படங்கள்அப்படியே ரீமேக் ஆகி தமிழைக் கலக்கி வந்தன.

அதேபோல சூப்பர் ஹிட் இந்திப் படங்களும் தமிழுக்கு மொழி மாற்றம்செய்யப்பட்டன. இதனால் நேரடித் தமிழ்ப் படங்களுக்கு இணையாக ரீமேக் மற்றும்டப்பிங் படங்கள் அதிக அளவில் தமிழில் வெளியாகின. ஆனாலும், இந்த டப்பிங்மற்றும் ரீமேக் படங்களால் தமிழ்த் திரையுலகுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை.காரணம், எதையும் தாங்கும் மனம் படைத்தது தமிழ் என்பதால்!

ஆனால் கன்னடம், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி திரையுலகின் நிலையேவேறாக உள்ளது. மலையாளத்தில் ரீமேக் படங்களை மட்டுமே அனுமதிக்கிறார்கள்.அதுவும் கூட ரொம்ப அரிதாகத்தான் பிற மொழிப் படங்களை ரீமேக் செய்கிறார்கள்.டப்பிங் படங்களுக்கு அங்கு அனுமதியே கிடையாது.

இருந்தாலும் தமிழ்ப் படங்கள் அப்படியே கேரளாவில் திரையிடப்பட்டு வசூலைவாரிக் குவித்து வருகின்றன. குறிப்பாக கமல், ரஜினி, விக்ரம் படங்களுக்கு அங்குபெரும் வரவேற்பு உள்ளது.

கன்னடத்திலும் இதே கதைதான். அங்கு டப்பிங் படங்களை அனுமதிப்பதில்லை.ஆனால் கன்னடத்தில் தயாரிக்கப்படும் 90 சதவீதப் படங்கள் ரீமேக் படங்கள்தான்.ஆனாலும் இந்தப் படங்களுக்கு அதிக அளவில் வசூல் வருவதில்லை.இப்படங்களைப் பார்ப்பதற்குப் பதில் நேரடியாக ஒரிஜினல் படங்களையேபார்ப்பதில்தான் கன்னட மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

எனவே தமிழ், இந்தியில் வரும் படங்களை அதே மொழியில் பார்த்து ரசித்து விட்டுப்போகிறார்கள் கர்நாடகத்தினர். தமிழும், இந்தியும் அங்கு சக்கை போடு போட்டுவருகின்றன. அதேபோல ஆங்கிலப் படங்களுக்கும் அங்கு நல்ல வரவேற்புஇருக்கிறது.

தமிழ்ப் படங்களின் ஆதிக்கம் காரணமாக அரண்டு போன கன்னடத் தயாரிப்பாளர்கள்கர்நாடக அரசை வலியுறுத்தி, பிற மொழிப் படங்களுக்கு குண்டக்க மண்டக்க வரிவிதிக்க வைத்து விட்டனர். மேலும், புதிய பிற மொழிப் படங்களை திரையிடுவதிலும்ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

மலையாளத்தில் இப்படி குறுகிய கண்ணோட்ட நடவடிக்கைகள் இதுவரை இல்லை.அதேபோல ஆந்திராவிலும் இதுபோன்ற நடவடிக்கைகள் இல்லாமல் இருந்தது.தமிழும், தெலுங்கும் படு நட்பாக, தோழமையாக, ஜாலியாக இருந்து வருகின்றன.

ஆனால் இப்போது தெலுங்குத் திரையுலகினர் தமிழைப் பார்த்து பயப்படஆரம்பித்துள்ளனர். சமீப காலமாக தெலுங்கில் சக்கைப் போடு போட்டு வரும் தமிழ்ப்படங்கள்தான் காரணம்.

ரஜினிக்கும், விஜயகாந்த்துக்கும் தான் முன்பு தெலுங்கில் அதிக டிமாண்ட் இருந்தது.இவர்களின் தமிழ்ப் படங்களை டப் செய்து தெலுங்கில் வெளியிட்டால் நல்லவரவேற்பும், வசூலும் கிடைக்கும்.

ஆனால் இப்போது நிலைமை தலைகீழ். விஷாலின் படமும், சிம்புவின் படமும் படுபோடு போடும் நிலை ஏற்பட்டுள்ளது. சந்திரமுகிதான் இதற்குப் பிள்ளையார் சுழிபோட்டது. அப்படத்திற்குத் தமிழைப் போலவே தெலுங்கிலும் அபார வரவேற்பு.

மெகா ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்டோரின் படங்களை விட அதிக வசூலை வாரியதுசந்திரமுகி. இதனால் கொஞ்சம் போல அதிர்ந்தனர் தெலுங்குப் படவுலகினர். இதைத்தொடர்ந்து டப் ஆன அந்நியனும் அமோக வசூலை அறுவடை செய்தது.

இதைத் தொடர்ந்து வரலாறு படைத்த படம் சூர்யாவின் கஜினி. நேரடித் தெலுங்குப்படங்களை விட இப்படத்திற்கு அதிக வசூல் கிடைத்தது தெலுங்குப் படவுலகினரைபெரும் வியப்பில் ஆழ்த்தியது.

இதையடுத்து நேரடித் தெலுங்குப் படங்களை விட தமிழ்ப் படங்களை வாங்கி டப்செய்து லாபம் பார்க்க ஆரம்பித்தனர் தயாரிப்பாளர்கள். இதனால் நேரடிப் படங்களைவிட டப்பிங் படங்கள் அதிகம் வர ஆரம்பித்தன. இதனால் ஒரு தரப்புதயாரிப்பாளர்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

இப்படிப் பாதிப்புக்குள்ளான தயாரிப்பாளர்களின் அதிருப்தியில் நெய் ஊற்றித் தூபம்போடும் விதமாக தமிழ் சினிமாவின் குட்டி நடிகர்களான சிம்பு, விஷால், பரத்ஆகியோரின் படங்களும் தெலுங்கில் வாரிக் குவித்தது பெரும் கோபமாக மாறஉதவியது.

இதற்கு மேலும் பொறுமை காத்தால் நம்ம பொழப்பு போய் விடும் என்று பயந்துபோன அந்தத் தயாரிப்பாளர்கள் ஒன்று திரண்டு தமிழ் டப்பிங் படங்களுக்குத் தடைபோட முயற்சித்தனர். அவர்களது முயற்சியால் தயாரிப்பாளர்கள் கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்தில் தமிழ் டப்பிங் படங்களை இனி அனுமதிப்பதில்லை, நேரடித் தமிழ்ப்படங்களுக்கும் தடை விதிப்பது என தீர்மானிக்கப்பட்டது.

இதேபோல தொலைக்காட்சிகளிலும் தமிழ் படங்களின் காட்சிகள், பாடல்களைக்காட்டுவதற்கும் தடை விதிக்கத் தீர்மானித்துள்ளனர் தயாரிப்பாளர்கள்.

கன்னடம், தெலுங்கு, மலையாளம் என அண்டை மாநில மொழிகள் எல்லாம் தமிழ்த்திரையுலகின் சிறகுகளை ஒவ்வொன்றாக முறித்து வருகின்றன. ஆனால் கோலிவுட்கோமான்கள் இதுகுறித்து இதுவரை எந்தவித ரியாக்ஷனும் காட்டாமல் மெளனமாகஉள்ளனர்.

ஒருவேளை அவர்களது இலக்கு உலகப் பார்வைக்கு மாறி விட்டதோ?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil