»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லண்டனில் நடைபெறும் நட்சத்திர கலை விழாவில் பங்கேற்பதற்காக நடிகர் சரத்குமார்,நடிகை ராதிகா தலைமையில் 13 பேர் கொண்ட நட்சத்திரப் பட்டாளம் ஒரேவிமானத்தில் கிளம்பினர்.

லண்டனில் வெம்புலே அரினா என்ற பிரமாண்ட அரங்கத்தில் தமிழ் சினிமாநட்சத்திரங்கள் பங்கேற்கும் மாபெரும் நட்சத்திர இரவு நிகழ்ச்சி 21ம் தேதி இரவு 7மணிக்கு நடைபெறுகிறது. இதில் நடிகர் சரத்குமார், நடிகை ராதிகா ஆகியோர் சிறப்புவிருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

இந்த விழாவில் பங்கேற்க நடிகர்கள் அர்ஜூன், சூர்யா, அப்பாஸ், செந்தில், விவேக்,நடிகைகள் மீனா, ரம்யாகிருஷ்ணன், ரம்பா, சிம்ரன், ஜோதிகா, நடன இயக்குனர் ராஜூசுந்தரம், பாடகர்கள் மனோ, உன்னிமேனன், பாடகிகள் மால்குடி சுபா, மனோ, ஹரிணி,இசையமைப்பாளர் தினா மற்றும் 12 நடன கலைஞர்கள் ஆகியோர் சென்னையில்இருந்து புதன் கிழமை இரவு கிளம்பினர்.

லண்டன் மேடையில் "உப்பு கருவாடு பாடலுக்கு அர்ஜூன் - ரம்யா, "மேகம் கருக்குதுஎன்ற பாடலுக்கு ஜோதிகா, "சொட்ட சொட்ட நனையுது தாஜ்மகால் என்ற பாட்டுக்குசிம்ரன், "கொட்டப்பாக்கு கொழுந்து வெத்தலை பாடலுக்கு மீனா, "சென்யோ ரீட்டாபாடலுக்கு சூர்யா - ஜோதிகா, "பொண்டாட்டிக்கும் புருஷனுக்கும் என்ற பாடலுக்குஅர்ஜூன் - மீனா ஆகியோரும் நடனம் ஆடுகின்றனர்.

நிகழ்ச்சியின் இறுதிப் பாடலாக "அந்த அரபிக் கடலோரம் பாடலுக்கு அனைத்து நடிகர்நடிகைகளும் மேடையில் தோன்றி நடனம் ஆடுகின்றனர்.

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் இதுபற்றி கூறுகையில், ""ராதிகாவின் ராடன்பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் 6 கலை நிகழ்ச்சிகள் நடத்ததிட்டமிட்டுள்ளோம். அதில் 3 வெளிநாடுகளிலும் மற்ற நிகழ்ச்சிகள் சென்னையிலும்நடைபெறும்.

வெளிநாட்டில் இவ்வளவு பெரிய நட்சத்திரப் பட்டாளம் கலந்து கொள்ளும் முதல்நிகழ்ச்சி இது தான். அடுத்து துபாய், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில்நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றார் அவர்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil