»   »  மாரி நாயகன் தனுஷின் 32 வது பிறந்தநாள் இன்று

மாரி நாயகன் தனுஷின் 32 வது பிறந்தநாள் இன்று

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: 1983 ம் வருடம் ஜூலை மாதம் 28 ம் தேதி கஸ்தூரி ராஜா - விஜயலட்சுமி தம்பதியினருக்கு மகனாகப் பிறந்த வெங்கடேஷ் பிரபு என்கின்ற தனுஷின் 32 வது பிறந்த தினம் இன்று.

தனது 18 வது வயதில் திரைத்துறையில் துள்ளுவதோ இளமை (2002) படத்தின் மூலம் அடியெடுத்து வைத்த தனுஷ் இந்த 13 வருடங்களில் 28 படங்களில் நடித்து சாதனை புரிந்து இருக்கிறார்.


நடிகர், தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், பாடலாசிரியர் என்று பன்முகங்களைக் கொண்ட நடிகர் தனுஷின், இந்தப் பிறந்தநாளில் அவரைப் பற்றிய சிறப்புகளை இங்கு பார்ப்போம்.


துள்ளுவதோ இளமை

துள்ளுவதோ இளமை

எல்லோருக்கும் இளமை ஊஞ்சலாடுகின்ற 18 வது வயதில் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் நடிகராக திரைத்துறையில் காலடி எடுத்து வைத்த நடிகர் தனுஷ், குறுகிய காலத்திலேயே தமிழின் முன்னணி நடிகராக உயர்ந்து விட்டார்.


வெற்றி நாயகன்

வெற்றி நாயகன்

துள்ளுவதோ இளமை கைகொடுத்தாலும் கூட காதல் கொண்டேன் படம் தான் தனுஷை பாமர மக்களிடமும் நடிகராக கொண்டு சேர்த்தது. தொடர்ந்து இவர் நடிப்பில் வெளிவந்த திருடா திருடி, பொல்லாதவன், புதுப்பேட்டை, திருவிளையாடல் ஆரம்பம் மற்றும் யாரடி நீ மோகினி போன்ற படங்கள் தனுஷின், அந்தஸ்தை தூக்கிப் பிடித்து அவரை ஒரு வெற்றி நாயகனாக தமிழ் சினிமாவில் மாற்றிய படங்களாகும்.


ஆடுகளம்

ஆடுகளம்

2011 ம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த ஆடுகளம் திரைப்படம் தனுஷிற்கு தேசிய விருதை அள்ளித் தந்தது, 6 தேசிய விருதுகள் வாங்கி தமிழ் சினிமாவை மட்டுமன்று ஒட்டுமொத்த இந்திய சினிமாவையும் திரும்பிப் பார்க்க வைத்த திரைப்படம் ஆடுகளம்.


வொய் திஸ் கொலைவெறி?

வொய் திஸ் கொலைவெறி?

3 படத்தில் இடம்பெற்ற இந்தப் பாடலை எழுதிப் பாடிய தனுஷை இந்தப் பாடல் ஒரே இரவில் உலகம் முழுவதும் கொண்டு சென்று சேர்த்தது.


ராஞ்சனா

ராஞ்சனா

ராஞ்சனா என்ற ஹிந்திப் படத்தின் மூலம் ஹிந்தியில் அறிமுகமான தனுஷ், 2 வது படத்திலேயே இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் என்று போற்றப்படும் நடிகர் அமிதாப்புடன் இணைந்து ஷமிதாப் படத்தில் நடிக்கும் பேறுபெற்றவர் ஆனார்.


வேலை இல்லாப் பட்டதாரி

வேலை இல்லாப் பட்டதாரி

இடையில் சற்று துவண்டிருந்த தனுஷின் மார்க்கெட்டை நச்சென்று மேலே தூக்கிப் பிடித்த படம் வேலை இல்லாப் பட்டதாரி, சுமார் 8 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்தப்படம் 50 கோடி ரூபாயை அள்ளியது. தனுஷின் மிகச்சிறந்த படங்களில் தனியான ஒரு இடம் வேலை இல்லாப் பட்டதாரிக்கு என்றுமே இருக்கும், அந்த அளவிற்கு ஹிட் கொடுத்த படம் இது.


2 தேசிய விருதுகள்

2 தேசிய விருதுகள்

தனுஷ் சொந்தமாகத் தயாரித்து வெளியிட்ட காக்கா முட்டை திரைப்படம் சிறந்த தயாரிப்பாளருக்கான தேசிய விருதை தனுஷிற்கு பெற்றுத் தந்தது, குறைந்த வயதிலேயே 2 தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர் ஆகிவிட்டார் தனுஷ்.


இன்று பிறந்தநாள் கொண்டாடும் தனுஷ் மேலும் பல சிறந்த படங்களில் நடித்து பல விருதுகளைக் குவிக்க வேண்டும் என்று மனமார வாழ்த்துவோம்..பிறந்தநாள் வாழ்த்துக்கள் தனுஷ்.
English summary
Actor Dhanush Today Celebrating His 32nd Birthday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil