»   »  தீபாவளி 'விருந்தில்' 6 படங்கள்!

தீபாவளி 'விருந்தில்' 6 படங்கள்!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
தீபாவளிக்கு விஜய், சூர்யா நடிக்கும் படங்கள் உட்பட 6 முக்கிய படங்கள் திரைக்கு வரத் தயாராகி வருகின்றன.
ஒவ்வொரு தீபாவளிக்கும் முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களை மகிழ்விக்கும். அந்த வகையில் இந்த ஆண்டும் விஜய், சூர்யா உள்ளிட்டோரின் படங்கள் தீபாவளி விருந்து படைக்க காத்திருக்கின்றன.

அழகிய தமிழ்மகன்: விஜய், ஷ்ரியா ஜோடியாக நடிக்கும் அழகிய தமிழ்மகன் படத்தை பரதன் இயக்கியுள்ளார். இந்த படத்தில் நமீதாவும் இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்.

போக்கிரி பட வெற்றியைத் தொடர்ந்து திரைக்கு வரும் அழகிய தமிழ் மகனும் விஜய்க்கு வெற்றி தேடித் தரும் என விஜய் தரப்பு நம்பிக்கையுடன் உள்ளது.

விஜய் அழகிய தமிழ்மகனில் 2 வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

வேல்: கஜினிக்கு பிறகு வெற்றி ஜோடிகளான சூர்யா-ஆசின் ஜோடி நடிக்கும் 2வது படம் வேல். இந்த படத்தை ஹரி இயக்குகிறார். இந்த

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ளார். சில்லென்று ஒரு காதல் படத்திற்கு பின்னர் நீண்ட நாட்களுக்கு பின்னர் வெளியாகும் சூர்யாவின் வேலை அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

விஜய் படத்துடன் சூர்யா படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதால் இருதரப்பு ரசிகர்களும் ஆவலுடன் உள்ளனர்.

பொல்லாதவன்: அதிரடிப் படமாக திரைக்கு வர தயாராக உள்ள தனுஷ்-திவ்யா நடித்த பொல்லாதவன் படத்தை வெற்றிமாறன் இயக்கியுள்ளார். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்க கதிரேசன் தயாரித்துள்ளார்.

பொல்லாதவன் ரவுடிகளின் கொட்டத்தை அடக்கும் படமாக இருக்குமாம். அமைதியாக செல்லும் தனுஷின் வாழ்க்கையில் நடக்கும் ஒரு சம்பவம் அவரை ரவுடிகளோடு மோதச் செய்கிறதாம்.

கண்ணாமூச்சி ஏனடா: யுடிவி மற்றும் ராதிகாவின் ராடான் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்கும் படம் கண்ணா மூச்சி ஏனடா. இந்த படத்தை பிரியா இயக்கியுள்ளார். யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

சத்யராஜ், ராதிகா, பிருத்விராஜ், காதல் சந்தியா உட்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். காதல், சென்டிமென்டுடன் தயாராகியுள்ள படம் என்றாலும், சத்யராஜின் வழக்கமான லொள்ளும் சேர்ந்துள்ளது இந்த படத்திற்கு ஒரு பிளஸ் பாயிண்ட்.

மச்சக்காரன்: ஜீவா-காம்னா ஜெத்மலானி ஜோடியாக நடித்துள்ள இந்த படத்தை தமிழ்வண்ணன் இயக்கியுள்ளார். மெட்ராஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள மச்சக்காரன் படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

நான் அவனில்லை வெற்றி படத்திற்கு பின்னர் ஜீவா நடிக்கும் இந்த படத்தில் தப்பான காரியங்களை செய்யும் நாயகனை, நாயகி காம்னா இடையில் புகுந்து அவரை திருத்துகிறாராம். இதற்கிடையில் காதல், டூயட், அதிரடி எல்லாம் கலக்கப்பட்டுள்ளதாம்.

பழனியப்பா கல்லூரி: அன்பாலயா பிரபாகரன் தயாரித்துள்ள இந்த படத்தில் பிரதீப் என்ற புதுமுகம் கதாநாயகனாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு ஜோடியாக மதுஷாலினி நடிக்கிறார். இந்த படத்தை ஆர்.பவன் இயக்கியுள்ளார்.

படம் முழுவதும் கல்லூரி மாணவர்களின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்டதாம். மூன்று வருடங்கள் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு வெளிவரும் மாணவர்களின் கதையை அழகாக 2.30 மணி நேரத்தில் எடுத்துள்ளார்களாம்.

அஜீத், விக்ரம் படங்கள் இல்லை

விக்ரம்-த்ரிஷா நடித்த பீமா படம் திரைக்கு வர ரெடியாக இருந்தாலும், ஏ.எம்.ரத்னம் பல சிக்கல்களை சந்தித்துள்ளதால் பீமா வருவதில் குழப்பம் நிலவுகிறது. அதேபோல அஜீத்தின் பில்லா படமும் தீபாவளிக்கு வரவில்லை.

மேற்கூறிய 6 படங்களும் தயார் நிலையில் இருந்தாலும், இதனோடு வேறு சில குட்டிப் படங்களும் சேரலாம் என்று தெரிகிறது.

ரஜினி, கமல் ஆகியோரின் படங்கள் தீபாவளிக்கு இம்முறை ரிலீஸாகவில்லை. இதனால் அவர்களின் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தாலும், சிவாஜி என்ற விருந்தே இன்னும் செரிக்காததால் ரஜினி ரசிகர்களுக்கு பெரிய அதிருப்தி கிடையாது.

அதேசமயம், கமல்ஹாசனின் தசாவதாரத்தை எதிர்பார்த்து காத்திருக்க கமல் ரசிகர்களும் தயாராக இருக்கின்றனர். தீபாவளிக்கு வருவதாக எதிர்பார்க்கப்பட்ட தசாவதாரம் பொங்கலுக்கு கண்டிப்பாக வருகிறது.

Read more about: diwali, fans, release, shriya, surya, trisha, vijay, vikram

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil