»   »  சஞ்சய் தத்தின் திக் திக் பிறந்த நாள்!

சஞ்சய் தத்தின் திக் திக் பிறந்த நாள்!

Subscribe to Oneindia Tamil

மும்பை தொடர் குண்டுவெடிப்பில் என்ன தண்டனை கிடைக்கும் என்ற பரபரப்பான பின்னணியில் நடிகர் சஞ்சய் தத் தனது பிறந்த நாளை படு எளிமையாக கொண்டாடினார்..


மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 100 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சஞ்சய் தத்தும் ஒருவர்.

100 பேரில் இதுவரை 96 பேருக்குத் தண்டனை அறிவிக்கப்பட்டு விட்டது. சஞ்சய் தத் உள்ளிட்ட 4 பேருக்கு மட்டும் இன்னும் தண்டனை என்ன என்று கூறப்படவில்லை. நாளை இவர்களுக்கு தண்டனை அறிவிக்கப்படவுள்ளது.


சஞ்சய் தத்துக்கு 5 முதல் 10 ஆண்டுகள் வரை கடுங்காவல் தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தப் பின்னணியில் சஞ்சய் தத் நேற்று தனது 48வது பிறந்த நாளை கொண்டாடினார்.

படு எளிமையாக வீட்டினருடன் தனது பிறந்த நாளை சஞ்சய் தத் கொண்டாடினார். திரையுலகினர் யாரும் அவரது பிறந்த நாளுக்கு அழைக்கப்படவில்லை.

இருப்பினும் திரையுலகைச் சேர்ந்தவர்கள் சஞ்சய் தத்துக்கு வாழ்த்து தெரிவித்து பொக்கே உள்ளிட்டவற்றை அவருக்கு அனுப்பியிருந்தனர்.

Please Wait while comments are loading...