Don't Miss!
- News
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக "பர்கர், சாண்ட்விச்" தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
தமிழ் பொண்ணு.. தமிழிலேயே பேசலாம்ல்ல.. ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய ஆங்கிலத்தால் கடுப்பான ரசிகர்கள்!
சென்னை: நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சமீபத்தில் நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் ஆங்கிலம் பேசியது தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது.
கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஸ்ரேயா ரெட்டி போன்ற பலர் நடிப்பில் வெளிவந்த வெப் தொடர்தான் சூழல். இந்த வெப் தொடர் அமேசான் பிரைம் வீடியோவில் வெளியானது.
சூழல் வெப் தொடர் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்று வருகின்றது.
ஆக்ஷன்
மட்டும்
பார்த்தால்
வீடியோகேம்
தான்,
எமோஷன்
பிளஸ்
ஆக்ஷன்
தான்
வெல்லும்...பத்ரி
ஸ்பெஷல்
பேட்டி

ஆரம்பத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்
அட்டகத்தி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். இந்த படத்திற்கு பிறகு பண்ணையாரும் பத்மினியும், காக்கா முட்டை, தர்மதுரை போன்ற பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளிலேயே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அந்தவகையில் காக்கா முட்டை, வட சென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை, கா/பெ ரணசிங்கம் போன்ற பல படங்களில் இவர் நடித்துள்ளார். அடுத்தடுத்து இவருக்கு கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களாகவே அமைந்தது. இந்த படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் படங்களாகவும் இவருக்கு கை கொடுத்தது.

ஹோம்லி லுக்
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ளார். ஐஸ்வர்யா ராஜேஷ் படம் என்றாலே நல்ல கதையம்சம் இருக்கும் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது. மேலும் அவரது படங்கள் அனைத்தும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடியதாகவே இருக்கும். அதனாலேயே இவருக்கு ஃபேமிலி ஆடியன்ஸ் அதிகம். சமீபத்தில் இவர் நடித்து வெளிவந்த சுழல் வெப் தொடர் சஸ்பென்ஸ் க்ரைம் திரில்லராக உருவாக்கப்பட்டுள்ளது. மொத்தம் எட்டு எபிசோடுகளை கொண்ட இந்த வெப்தொடர் நல்ல வரவேற்பை பெற்றதுபெற்றுள்ளது.

மாட்டிக்கொண்ட ஐஸ்வர்யா
இப்படி தொடர் வெற்றிகளை கொடுத்து வரும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சுழல் பிரஸ்மீட்டின் போது பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. சுழல் வெப் தொடரில் மூணாறில் சண்டைக் காட்சி படமாக்கப்பட்டு கொண்டிருக்கும் பொழுது , ஐஸ்வர்யா சண்டை போட முயற்சி செய்துள்ளார். ஆனால் டைரக்டர் நீங்கள் இங்கேயே நில்லுங்கள், ஹீரோ தான் சண்டை போட வேண்டும், நீங்கள் நின்று வேடிக்கை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதனை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆங்கிலத்தில் கூறியது தற்போது பேச்சுப்பொருளாக மாறியுள்ளது.. அவர் பேசிதாவது " He ran of for the fight, I also go fight, fight is only for Hero you cannot go fight, I said this not even fare, why you fight me Fight all fight will also go fight " என்று ஆங்கிலத்தில் பேசியுள்ளார்.

ட்ரோல் செய்யும் நெட்டிசன்ஸ்
இவர் பேசியதை கவனித்த நெட்டிசன்கள் இவர் பேசும் ஆங்கிலத்தை ட்ரோல் செய்து வருகின்றனர். தமிழ் பெண் தானே? தமிழில் பேச வேண்டியதுதானே, தப்பு தப்பாக எதுக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று கமெண்ட்டுகள் செய்தும், ஐஸ்வர்யா ராஜேஷுக்கு தமிழில் பேசும்படி அறிவுறுத்தியும் அட்வைஸ் செய்தும் வருகின்றனர். ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் தற்போது டிரைவர் ஜமுனா. மோகன்தாஸ், தி கிரேட் இந்தியன் கிச்சன், துருவ நட்சத்திரம் போன்ற பல படங்கள் வெளிவர தயாராக உள்ளது. இதில் தி கிரேட் இந்தியன் கிச்சன் திரைப்படம் மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.