For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  டோலா ரே டோலா, ஏக் தோ தீன்.. மாஸ்டர்ஜி சரோஜ் கானின் மறக்க முடியாத ஆர்ப்பாட்ட நடனங்கள்!

  By
  |

  சென்னை: இந்திய சினிமாவுக்கு அடுத்த இழப்பு, மாஸ்டர்ஜி சரோஜ் கானின் மறைவு.

  Recommended Video

  படுக்கைக்கு அழைப்பது சரி என்ற 'ரீல்' ஷகீலா!

  தொடர் இறப்புகளால் துக்கப்படும் பாலிவுட்டுக்கு இது போதாதகாலம். இர்பான் கான், ரிஷிகபூர், சுஷாந்த் சிங் ராஜ்புத் உட்பட சில திறமைகளை இழந்த பாலிவுட், அடுத்து மாஸ்டர்ஜியை இழந்திருக்கிறது.

  இரங்கல் செய்திகளால் நிரம்பி வழிகிறது சமூக வலைத்தளங்கள். மறைந்த சரோஜ்கான் மூன்று வயதில் நஸரானா என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்.

  பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் திடீர் மரணம்.. மாரடைப்பால் உயிர்பிரிந்தது.. பாலிவுட் அதிர்ச்சி!பிரபல நடன இயக்குனர் சரோஜ் கான் திடீர் மரணம்.. மாரடைப்பால் உயிர்பிரிந்தது.. பாலிவுட் அதிர்ச்சி!

  நடன இயக்குனர்

  நடன இயக்குனர்

  பிறகு நடன கலைஞரானார். நடன இயக்குனர் சோஹன்லாலுடன் பணிபுரியும்போது அவரிடம் நடனம் கற்றுக்கொண்ட சரோஜ் கான், அவரையே தனது இளம் வயதில் திருமணம் செய்துகொண்டார். பிறகு படிப்படியாக நடனங்களை கற்றுக்கொண்டு உதவி நடன இயக்குனராக பணியாற்றிய அவர், கீதா மேரா நாம் என்ற படத்தின் மூலம் நடன இயக்குனராக அறிமுகமானார்.

  தேசிய விருது

  தேசிய விருது

  பிறகு தொடர்ந்து நடன இயக்குனர் சரோஜ் கான் பிசியானார். அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. சுமார் 2000 பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கிறார், சரோஜ் கான். அதில் பல சூப்பர் ஹிட் பாடல்களும் நடனத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவான பாடல்களும் உண்டு. சிறந்த நடனத்துக்காக மூன்று முறை தேசிய விருது பெற்றிருக்கிறார் இவர். அதில் சில மறக்க முடியாத பாடல்கள்.

  தக் தக் கர்னி லகா

  தக் தக் கர்னி லகா

  பேட்டா (பாக்யராஜின் எங்க சின்ன ராசா ரீமேக்) படத்தில் செக்ஸியான பாடல் இது. அனில் கபூர் ஹீரோ. மாதுரி தீக்‌ஷித் ஹீரோயின். சூப்பர் ஹிட்டான இந்தப் பாடலின் நடனம் இப்போதும் பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஆனந்த் மிலிந்த் இசை என்றாலும் இந்தப் பாடல், சிரஞ்சீவியின் தெலுங்கு படத்துக்காக இளையராஜா உருவாக்கிய ட்யூனின் அப்பட்டமான காப்பி. (இது தமிழில் காதல் தேவதை என்ற பெயரில் டப் ஆனது. 'சம்மதம் தந்துட்டேன் நம்பு' என்று தொடங்கும் பாடல் இது).

  டோலா ரே டோலா

  டோலா ரே டோலா

  சஞ்சய் லீலா பன்சாலியின் 'தேவதாஸ்' படப் பாடல். ஷாருக் கான் ஹீரோவாக நடித்த இந்தப் படத்தின் இப்பாடலுக்காக மாதுரி தீக்‌ஷித்தும் ஐஸ்வர்யா ராயும் ஆடும் ஆட்டம் இருக்கிறதே.. ப்பா என்று ரசிகர்களை பிரமிக்க வைத்த நடன அமைப்பு. அதற்கேற்ப இஸ்மாயில் தர்பாரின் இசையும் பினோத் பிரதானின் ஒளிப்பதிவில் விஷூவலும் மிரட்டியது. சரோஜ் கான் நினைவை என்றென்றும் போற்ற, போதும் இந்த ஒரு ஆர்ப்பாட்ட பாடல்.

  ஏக் தோ தீன்

  ஏக் தோ தீன்

  மொழியாத ஊர்களில் கூட முணு முணுக்க வைத்தப் பாடல், 'ஏக் தோ தீன்..' இந்தியா முழுவதும் ஏன், இந்தியாவை தாண்டியும் பேசப்பட்ட இந்த பாடல், அனில் கபூர், மாதுரி தீக்‌ஷித் நடித்த தேஜாப் படத்தில் இடம்பெற்ற உண்டு. சரோஜ்கான் நடன அமைப்பில் நடனத்தில் கலக்கி இருப்பார் மாதுரி தீக்‌ஷித். பாடல் வெளிவந்த காலகட்டத்தில் நடன அமைப்புக்காகவும் பாராட்டப்பட்ட பாடல் இது.

  தம்மா தம்மா லோகே:

  தம்மா தம்மா லோகே:

  ஜீதேந்திரா, ஜெயப்பிரதா, சஞ்சய் தத், மாதுரி தீக்‌ஷின் நடித்த தானேதார் (அன்புக்கு நான் அடிமை ரீமேக்) படத்தின் பாடல் இது. பப்பிலஹரியின் இசையில் உருவான தம்மா தம்மா லோகே 90 களில் செம ஹிட். பாடலைப் போலவே சரோஜ்கானின் நடனமும் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது. ஹவா ஹவா: அனில் கபூர், ஶ்ரீதேவி நடித்த மிஸ்டர் இண்டியா படத்தில் இடம்பெற்ற பாடல் ஹவா ஹாவாய். இந்த்ப் பாடலுக்கு ஶ்ரீதேவியின் நடனம் அப்போது பரபரப்பாகப் பேசப்பட்டது.

  போய் வாருங்கள் மாஸ்டர்ஜி

  போய் வாருங்கள் மாஸ்டர்ஜி

  தபா ஹோ ஹயே : கடந்த வருடம் வெளியான கிளாங் படத்தில் மாதுரி தீக்‌ஷித் ஆடும் பாடல். பொதுவாக பிரமாண்ட செட்களில் ஏகப்பட்ட டான்சர்களை சரியாக கையாள்வதில் சரோஜ் கான் திறமைசாலி. இந்தப் பாடலிலும் அப்படித்தான். தனது நடனங்களின் மூலம் எப்போது ரசிகர்களின் மனதில் நிறைந்திருப்பார், நடனத்தாய் சரோஜ்கான். போய் வாருங்கள் மாஸ்டர்ஜி!

  English summary
  From Dola Re Dola to Ek Do Teen.. Saroj khan mesmerised the audience
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X