»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

விஜய் நடிக்கும் "வசீகரா"வில் காயத்ரி ஜெயராமும் நடிக்கிறார், ஆனால் கெஸ்ட் ரோலில்.

இந்தப் படத்தில் "மஞ்சக் காட்டு மைனா" ரேஞ்சுக்கு ஒரு சூப்பரான டான்சும் உண்டாம்.

ஹீரோயினாக அறிமுகமான காயத்ரிக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் டி.விக்குப் போனார்.அங்கும் எதிர்பார்த்த அளவுக்கு முன்னுக்கு வர முடியாததால் அதை தலைமுழுகிவிட்டு மீண்டும் சினிமாவுக்கேவந்துவிட்டார்.

ஆனாலும் காயத்ரி ஜெயராமுக்கு கதாநாயகி பாத்திரம் தருவதற்கு யாருமே முன் வரவில்லை. ஹீரோயின் ரோல்கிடைப்பது வரை காத்திருக்கவும் தயார் என்று காயத்ரி ஜெயராம் கூறியிருந்தார். ஆனால் எவ்வளவு நாட்கள் தான்பொறுத்திருக்க முடியும்?

விஜய்யின் அடுத்த படமான "வசீகரா"வில் கெஸ்ட் ரோல் கிடைத்துள்ளது. எப்படியாவது இந்தப் படத்தின் மூலம்மீண்டும் ஒரு பிரேக்கை ஏற்படுத்தும் ஆவலில் உள்ளார் காயத்ரி ஜெயராம்.

அதனால் இந்தப் படத்தில் திகட்டத் திகட்ட கவர்ச்சி காட்டவும் முடிவெடுத்துள்ளார். "வசீகரா"வில் விஜய்யுடன்ஜோடி சேருவது சினேகா. இருவரும் ஜோடி சேருவது இதுதான் முதல் முறை.

சினேகாவை ரொம்பவும் "உரிக்க" முடியாது என்பதால் தான் காயத்ரி ஜெயராமை சேர்த்துள்ளார்களாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil