For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  தளபதியின் தேவாவுக்கு 70 வயசு ஆகிடுச்சு.. தமிழ் சினிமாவில் கலக்கிய மம்மூட்டியின் டாப் 5 படங்கள்!

  |

  சென்னை: மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் மம்மூட்டி இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

  மோகன் லால் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலரும் மம்மூக்காவுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

  ஊடகங்கள் மனசாட்சியோடு இருங்கள்… பிரபல பாலிவுட் நடிகை ஆவேசம்! ஊடகங்கள் மனசாட்சியோடு இருங்கள்… பிரபல பாலிவுட் நடிகை ஆவேசம்!

  மலையாள திரையுலகில் மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பல தரமான படங்களில் சிறந்த நடிப்பை கொடுத்துள்ளார் நடிகர் மம்மூட்டி. அந்த படங்கள் குறித்து இங்கே காண்போம்.

  ஹேப்பி பர்த்டே மம்மூக்க

  ஹேப்பி பர்த்டே மம்மூக்க

  தோல்விகள் பல கண்டாலும் தொடர்ந்து முயற்சி செய்தால் வெற்றி கிடைக்கும் என்பதை நிரூபித்துக் காட்டிய மகா கலைஞன் மம்மூட்டியின் 70வது பிறந்தநாள் இன்று. முகமது குட்டி பனபரம்பில் இஸ்மாயில் எனும் பெயரோடு 1951ம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதி கேரளாவின் சந்திரூரில் பிறந்தவர் வழக்கறிஞராக வேண்டும் என்று சட்டம் படித்தாலும், அவருக்காக காத்திருந்த திரையுலகம் அவரை தன் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக ஈர்த்துக் கொண்டது.

  ஏகப்பட்ட தமிழ் படங்கள்

  ஏகப்பட்ட தமிழ் படங்கள்

  மலையாள திரையுலகின் முன்னணி நடிகராக இருந்தாலும் தமிழில் மெளனம் சம்மதம் முதல் பேரன்பு வரை ஏகப்பட்ட படங்களில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி ஏராளமான தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் இன்றளவும் நிறைந்திருக்கிறார். அவரது மகன் துல்கர் சல்மானும் கடந்த ஆண்டு கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்கிற தமிழ் படத்தில் நடித்து ஹிட் கொடுத்து இருந்தார்.

  அழகன்

  அழகன்

  தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளிலும் நடித்து அசத்தியவர் மம்மூட்டி தமிழில் இயக்குநர் மது இயக்கத்தில் 1980ம் ஆண்டு மெளனம் சம்மதம் எனும் படத்தில் நடித்த மம்மூட்டி அடுத்ததாக கே. பாலசந்தரின் அழகன் திரைப்படத்தில் பேரழகனாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் இதயங்களையும் கொள்ளை கொண்டார். அழகன் படத்தில் இடம்பெற்ற சங்கீத ஸ்வரங்கள் பாடலை பார்த்துத் தான் இரவு பகல் தெரியாமல் காதலியுடன் போனில் பேச வேண்டும் என்பதையே பல இளைஞர்களும் கற்றுக் கொண்டார்கள் என்று கூட சொல்லலாம்.

  ரஜினியுடன் தளபதி

  ரஜினியுடன் தளபதி

  அழகன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி, மம்மூட்டி, அரவிந்த் சாமி நடிப்பில் வெளியான தளபதி திரைப்படம் இன்றளவும் மம்மூட்டியை தமிழ் ரசிகர்களால் மறக்க முடியாத படமாக மாற்றியது. நட்புக்கு இலக்கணமே சூர்யாவும் தேவாவும் தான் என ஏகப்பட்ட நண்பர்கள் அந்த படத்தை கொண்டாடினார்கள்.

  லிங்குசாமியின் ஆனந்தம்

  லிங்குசாமியின் ஆனந்தம்

  இயக்குநர் லிங்குசாமியின் ஆனந்தம் திரைப்படத்திற்கும் மம்மூட்டியின் சொந்த வாழ்க்கைக்கும் நிறையவே சம்பந்தங்கள் உண்டு. அந்த படத்தில் வருவதை போலவே நிஜ வாழ்விலும் இவர் தான் மூத்தப் பிள்ளை. இவருக்கு அடுத்ததாக 2 தம்பிகள், 3 தங்கைகள் என மெகா குடும்பம் தான். அண்ணன் தம்பிகள் எப்படி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை காட்டும் படமாக உருவான ஆனந்தம் திரைப்படத்திற்கு இன்றளவும் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

  அஜித் உடன்

  அஜித் உடன்

  ஆனந்தம் படத்தைத் தொடர்ந்து மக்களாட்சி, மறுமலர்சி என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் படங்களையும் தமிழில் நடிகர் மம்மூட்டி கொடுத்ததை பார்த்து இங்குள்ள உச்ச நட்சத்திரங்களுக்கே ஆட்டம் கண்டது. அதன் பிறகு தல அஜித், தபு, ஐஸ்வர்யா ராய், அப்பாஸ் நடிப்பில் இயக்குநர் ராஜீவ் மேனன் இயக்கிய கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் ஒரு கால் இழந்த ராணுவ வீரராக நடித்து கலக்கி இருப்பார் மம்மூட்டி.

  பேரன்பு

  பேரன்பு

  கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிப்பதை நிறுத்திக் கொண்ட நடிகர் மம்மூட்டி நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் ராம் இயக்கத்தில் நடித்த பேரன்பு திரைப்படம் சர்வதேச அளவில் ஏகப்பட்ட விருதுகளை குவித்து திரைக்கு வந்தது. இந்த வயதிலும் எந்தவொரு ஈகோவும் பார்க்காமல் நிஜ நடிகனாக திகழும் மம்மூட்டிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

  English summary
  Malayalam actor Mammootty turns 70 years today. Apart from Blockbuster Malayalam movies he has also done several super hit Tamil films. From Azhagan to Peranbu all movies are epic in Tamil cinema Industry. Mammootty has given excellent performances in many quality films.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X