twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அவர்தான் எம்ஜிஆர்...அண்ணா சொன்ன சுவாரஸ்ய தகவல்

    |

    பல தலைவர்கள் வந்தாலும் சென்றாலும் வருடங்கள் கடந்தும் சில தலைவர்கள் மட்டுமே நேசிக்கப்படுகிறார்கள், அதில் ஒருவர் எம்ஜிஆர். அடித்தட்டு மக்களால் இன்றளவும் நேசிக்கப்படும் தலைவராக இருக்கிறார். இடது கை கொடுப்பதை வலது கை அறியக்கூடாது என்பார்கள், அதற்கு எம்ஜிஆர் பெரும் உதாரணம் என்பதை கீழே குறிப்பிட்டுள்ள சம்பவம் உணர்த்துகிறது.

    இனிமே இப்படித்தான்... தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் புஷ்பா நாயகன்!இனிமே இப்படித்தான்... தமிழ் படங்களில் கவனம் செலுத்தும் புஷ்பா நாயகன்!

    1949-ல் ஆரம்பிக்கப்பட்ட திமுக

    1949-ல் ஆரம்பிக்கப்பட்ட திமுக

    திமுகவை 1949 ஆம் ஆண்டு ஆரம்பித்த அண்ணா அதன் பொதுச் செயலாளராக இருந்தார். அவருக்கு கீழ் ஐம்பெரும் தலைவர்கள் பெரும் தளபதிகளாக இருந்தனர். அடுத்த வரிசையில் கருணாநிதி இருந்தார். 1960 களில் திமுகவில் இணைந்த எம்ஜிஆர் முக்கிய சக்தியாக இருந்தார். 1957 ஆம் ஆண்டு தேர்தலில் 15 இடம், 1962 ஆம் ஆண்டு தேர்தலில் 50 இடம் என முன்னேறிய திமுக 1967 ஆம் ஆண்டு ஆட்சியைப்பிடித்தது.

    ஆட்சியைப்பிடித்த அண்ணா

    ஆட்சியைப்பிடித்த அண்ணா

    அதற்கு முக்கிய காரணமாக இருந்தது காங்கிரஸ் ஆட்சியின் மீதான மக்களின் வெறுப்பு, திமுக அதை அறுவடை செய்தது, எல்லாவற்றிற்கும் மேலாக எம்ஜிஆர். ஆட்சியைப்பிடித்த சில மாதங்களிலேயே முதல்வர் அண்ணாவுக்கு உடல்நலம் இல்லாமல் போனது. அவருக்கு தொண்டையில் புற்றுநோய் இருப்பது தெரியவந்து அனைவரும் அதிர்ந்து போயினர். அண்ணாவை மிகவும் நேசித்த எம்ஜிஆருக்கும் இது பேரிடியாக அமைந்தது.

    புற்றுநோய் சிகிச்சைக்கு அமெரிக்கா சென்ற அண்ணா

    புற்றுநோய் சிகிச்சைக்கு அமெரிக்கா சென்ற அண்ணா

    அமெரிக்காவுக்கு சிகிச்சைக்காக அண்ணா சென்றார். சிகிச்சை முடிந்து நலமுடன் திரும்பி வந்தார். அப்போது சட்டப்பேரவையில் நடந்த நிகழ்வு ஒன்றை முன்னாள் அதிமுக எம்.பி கே.சி.பழனிசாமி தனது முகநூலில் பதிவு செய்துள்ளார். அந்தப்பதிவு இதுதான், "அண்ணா வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வந்த பின் 1968 ஆம் ஆண்டு சட்டமன்றம் நடந்து கொண்டு இருந்தது.

    காங்கிரஸ் கட்சியின் கிடுக்கிப்பிடி கேள்வி

    காங்கிரஸ் கட்சியின் கிடுக்கிப்பிடி கேள்வி

    அப்போது காங்கிரஸ் கட்சி உறுப்பினர் அனந்தநாயகி கேள்வி நேரத்தில் அண்ணாவை நோக்கி ஒரு கேள்வி எழுப்பினார். முதல்வர் அவர்களே நீங்கள் வெளிநாட்டில் சிகிச்சை பெற்று திரும்பியதில் எவ்வளவு பணம் செலவு ஆனது. அது உங்கள் சொந்த பணமா? அல்லது அரசு பணமா? அல்லது உங்கள் கட்சி செலவா? என்று கேட்டார்.

    நாளை பதில் அளிக்கிறேன் - அண்ணா

    நாளை பதில் அளிக்கிறேன் - அண்ணா

    அண்ணா சபையை சுற்றி பார்த்து உங்கள் இந்த கேள்விக்கு நாளைக்கு நான் பதில் சொல்கிறேன் என்ற உடன் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் ஒரு மாதிரியாக சிரித்தனர். மறுநாள் சட்டப்பேரவை கூடியதும் அதே கேள்வி நேரத்தில் நேற்று எனது கேள்விக்கு என்ன பதில் என்று அனந்தநாயகி மீண்டும் கேட்டுள்ளார்.

    எம்ஜிஆரின் உயர்ந்த குணம்

    எம்ஜிஆரின் உயர்ந்த குணம்

    அண்ணா சிரித்துக்கொண்டே அவரது கேள்விக்கு பதிலளித்துள்ளார். எனது சிகிச்சை முழு செலவையும் நானும் கொடுக்கவில்லை. தமிழக அரசும் கொடுக்கவில்லை. எங்கள் கட்சியும் அந்த செலவை ஏற்கவில்லை. செலவான தொகை ரூபாய் ஒரு லட்சத்து இருபத்தி ஐந்தாயிரம் ரூபாய் மொத்தமும் இங்கே இதோ சட்டமன்ற உறுப்பினர் ஆக அமர்ந்து இருக்கிற என் அன்பு தம்பி எம்ஜிஆரின் உழைப்பின் மூலம் கிடைத்த பணத்தை எனக்காக என் சிகிச்சைக்காக செலவை அவரே ஏற்று கொண்டு பணம் செலுத்திய ஆதாரம் இதோ என ஆதாரத்தை காட்டியுள்ளார்.

    எம்ஜிஆருக்கு மரியாதை கொடுத்த அண்ணா

    எம்ஜிஆருக்கு மரியாதை கொடுத்த அண்ணா

    நேற்று அவர் அவைக்கு வரவில்லை அவர் முன்னால் இந்த விளக்கத்தை சொல்ல வேண்டும் என்று எண்ணியே நேற்று நான் பதில் சொல்லவில்லை என்ற உடன் சட்டமன்ற அவையில் பலத்த கரவொலி எழுந்துள்ளது. வாழ்க்கையின் அனைத்து விநாடிகளையும் செதுக்கி செதுக்கி தன்னை பக்குவ படுத்தி கொண்டவர் எம்ஜிஆர்.

    உதவி செய்ததை சொல்லிக்காட்டாத எம்ஜிஆர்

    உதவி செய்ததை சொல்லிக்காட்டாத எம்ஜிஆர்

    பட்டினியில் கிடந்த போதும் சரி பணம் மழை போல அவர் வாழ்வில் கொட்டிய போதும் தன்னிலை தவறாதவர் எம்ஜிஆர். அண்ணா சிகிச்சைக்கான தொகையை ஏற்று கொண்டதாக ஒரு போதும், எம்ஜிஆர் ஒரு நாளும் ஒரு இடத்தில் கூட சொன்னது இல்லை. அறிஞர் அண்ணா சொன்ன பிறகே நாட்டுக்கு இந்த உண்மை தெரிந்தது...

    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்...இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்...! (அதிமுகவில் எம்ஜிஆர் காலத்து பிரமுகர், முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமியின் முகநூலிலிருந்து)

    காலம் கடந்தும் நினைவுக்கூறப்படுவதற்கு காரணம் இதுதான்

    காலம் கடந்தும் நினைவுக்கூறப்படுவதற்கு காரணம் இதுதான்

    எம்ஜிஆர் அண்ணாவின் மீது கொண்ட பாசத்தால் செலவு செய்திருக்கலாம் என்று சொல்லலாம், ஆனால் முகம் தெரியாத பலருக்கும் இதுபோன்று செலவு செய்தவர் எம்ஜிஆர். வீட்டில் உலையை வைத்துவிட்டு எம்ஜிஆர் வீட்டுக்கு சென்றால் உதவி நிச்சயம் என பலர் திரைத்துறையில் சொல்லியதுண்டு. ஒவ்வொருவருக்கும் ஏதாவது ஒரு வகையில் எம்ஜிஆரின் உதவி இருந்திருக்கும், பலருக்கு கேட்காமலேயே அவர் கஷ்டம் அறிந்து உதவியிருப்பார் எம்ஜிஆர்.

    எம்ஜிஆரின் உதவி செய்யும் உள்ளத்துக்கு பலர் பயனடைந்து அவரது விசுவாசியாகினர். அதன் வீச்சு இன்றளவும் உள்ளதை காணமுடிகிறது. அதனால்தான் காலம் கடந்தும் எம்ஜிஆர் நினைவுக்கூரப்படுகிறார்.

    Read more about: mgr anna dmk
    English summary
    He is the MGR ... Interesting information that Anna said
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X