»   »  காளிதாஸ் விழாவில் ஹேமா ஆட்டம்

காளிதாஸ் விழாவில் ஹேமா ஆட்டம்

Subscribe to Oneindia Tamil
Hemamalini
உஜ்ஜைனியில் நடந்த அகில இந்திய காளிதாஸ் விழாவில் முன்னாள் கனவுக் கன்னியும், பாஜக எம்.பியுமான ஹேமமாலினி கலந்து கொண்டு அருமையாக ஆடி, அப்ளாஸ்களை அள்ளிக் கொண்டார்.

கோவில் நகரமான உஜ்ஜைனியில் ஆண்டுதோறும் அகில இந்திய காளிதாஸ் விழா நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு பொன் விழா ஆண்டு என்பதால் விமரிசையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அங்குள்ள தசரா மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். விழாவின் சிறப்பம்சமாக, ஹேமமாலினியும், அவரது குழுவினரும் கலந்து கொண்ட நடன நிகழ்ச்சி நடைபெற்றது.

கவி காளிதாஸின் மேகதூதம், குமாரசம்பவம் ஆகியவற்றிலிருந்து எடுக்கப்பட்ட கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு நடனம் மற்றும் நாட்டியத்தை ஹேமமாலினி குழுவினர் நடத்தினர்.

ஹேமமாலினியின் அம்சமான டான்ஸையும், இசை நாடகத்தையும் கூடியிருந்தவர்கள் ரசித்துப் பார்த்தனர்.

Read more about: hemamalini
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil