»   »  பீமாவுக்குத் தடை!

பீமாவுக்குத் தடை!

Subscribe to Oneindia Tamil

பைனான்சியர் தொடர்ந்த வழக்கில், விக்ரம், திரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பீமா படத்தை திரையிட சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

விக்ரம், திரிஷா நடிக்க, லிங்குச்சாமி இயக்க, ஏ.எம். ரத்னம் தயாரித்துள்ள படம் பீமா. இப்படம் தொடங்கப்பட்டது முதலே பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறது.

முதலில் ரத்னத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. இதனால் படத்தை இயக்குநர் லிங்குச்சாமியிடமே கொடுத்து விட்டு ஒதுங்கி விடலாமா என அவர் யோசித்தார். பிறகு லிங்குச்சாமிதான் பணத்திற்கு ஏற்பாடு செய்து படம் தொடர்ந்து வளர உதவினார்.

இப்படியாக தட்டுத் தடுமாறி வளர்ந்து வந்த பீமா, சமீபத்தில் முடிவடைந்தது. படத்தின் ஆடியோவும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. செப்டம்பர் இறுதிக்குள் படம் வந்து விடும் என லிங்குச்சாமியும் உறுதியாக கூறியிருந்தார்.

ஆனால் தர்மபுரி படத்தில் எனக்கு ரத்னம் ரூ. 80 லட்சம் சம்பளப் பாக்கி வைத்துள்ளார். அதைக் கொடுத்து விட்டு பீமாவை ரிலீஸ் செய்ய வேண்டும் என்று கூறி தயாரிப்பாளர் கவுன்சிலில் விஜயகாந்த் புகார் கொடுத்ததால் பீமாவுக்கு சிக்கல் ஏற்பட்டது.

அது போதாதென்று தற்போது மகேஷ் என்ற பைனான்சியர் சென்னை உயர்நீதின்றத்தில் தொடுத்த வழக்கில், படத்தைத் திரையிட இடைக்காலத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மகேஷ் இதுதொடர்பாக உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கடந்த 2000மாவது ஆண்டு ஏ.எம்.ரத்னம் என்னிடம் ரூ. 25 லட்சம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் அதைத் திருப்பித் தரவில்லை.

இதையடுத்து நான் வழக்கு தொடர்ந்தேன். அதை விசாரித்த நீதிமன்றம், பீமா படத்திற்குத் தடை விதித்தது. இதையடுத்து பணத்தை பீமா படத்தை ரிலீஸ் செய்வதற்கு முன்பாக நான் திருப்பிக் கொடுத்து விடுகிறேன் என்று உறுதியளித்தார். இதனால் இடைக்காலத் தடை விலக்கப்பட்டது. ஆனால் சொன்னபடி செய்யவில்லை.

எனவே எனது பண பாக்கியைக் கொடுத்த பிறகே பீமாவை திரையிட அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி ஜோதிமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச், மறு உத்தரவு வரும் வரை பீமாவுக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டது.

மேலும், வருகிற திங்கள்கிழமைக்குள் இதுகுறித்து விளக்கம் அளிக்குமாறு ரத்னத்திற்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

பீமாவுக்கு புஷ்டி கிடைத்து பெட்டியிலிருந்து வெளி வருவது எப்போதோ?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil