»   »  பாரீஸ் ஹில்டனுக்கு ஜெயில்

பாரீஸ் ஹில்டனுக்கு ஜெயில்

Subscribe to Oneindia Tamil

டிரைவிங் லைசென்ஸ் இல்லாமல் காரை ஓட்டிச் சென்றதாக ஹாலிவுட் நடிகை பாரீஸ் ஹில்டனுக்கு 45 நாள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹாலிவுட்டின் பிசியான நடிகைகளில் ஒருவர் பாரீஸ் ஹில்டன். அவ்வப்போது சர்ச்சையிலும் சிக்கி செய்திகளில் சிக்குபவர்.

கடந்த பிப்ரவரி மாதம் இவரது கார் லைசென்ஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. இருப்பினும் 30 நாட்களுக்கு மட்டும் அவர் கார் ஓட்டிக் கொள்ள அனுமதிக்கப்பட்டது.

இருப்பினும் அந்தக் காலம் முடிந்த பின்னரும் கூட கார் ஓட்டி வந்தார். இதையடுத்து அவர் மீது லாஸ் ஏஞ்செலஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை நேற்று விசாரித்த நீதிபதி மைக்கேல் சாயர், ஹில்டன் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிரைவிங் லைசென்ஸுடன் கார் ஓட்டிச் சென்றது மன்னிக்க முடியாது குற்றம். இதற்காக அவருக்கு 45 நாள் சிறைத் தண்டனை விதிக்கிறேன். ஜூன் 5ம் தேதிக்குள் அவர் சரணடைய வேண்டும் என உத்தரவிட்டார்.

தீர்ப்பைக் கேட்டதும் பாரீஸ் ஹில்டன் அதிர்ச்சியில் உறைந்தார். அவரது கண்களில் கண்ணீர் தழும்பியது. அவரது தாயார் கேத்தியும் அதிர்ச்சியில் உறைந்தார்.

இந்த தண்டனை மிகவும் கடுமையானது என்று ஹில்டனின் வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தீர்ப்பைத் தொடர்ந்து விரைவில் பாரீஸ் ஹில்டன் சிறையில் அடைக்கப்படுவார் எனத் தெரிகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil