»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பெர்லின்:

கப்பல் காதலை விளக்கிய டைட்டானிக் திரைப்படத்தின் ஹீரோயின் கேட்வின்ஸ்லெட், ஜெர்மனி தொலைக்காட்சி நிறுவனத்தாரால் வழங்கப்படும் உயர்ந்தவிருதான கோல்டன் கேமரா விருது பெற்றுள்ளார்.

டைட்டானிக் திரைப்படம், மேற்கு ஐரோப்பாவில் தெலைக்காட்சியில்ஒளிபரப்பானபோது 1.3 கோடி பேர் இந்தபடத்தை பார்த்தார்கள்.

பியூர்டோரிகோவைச் சேர்ந்த பாப் பாடகர் ரிக்கி மார்ட்டின், சர்வதேச இசைப் பிரிவில்விருது பெற்றார். டைடர் பாப், சிறந்த நடிகராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பெர்லின் நகரில் பிப்ரவரி 6-ம் தேதி நடைபெறும் விழாவின்போது இந்த விருதுகள்வழங்கப்படும்.

லாஸ் ஏஞ்சல்ஸ்: லத்தீன் அழகி என வர்ணிக்கப்படும் ஜெனிபர் லோபஸின்,சமீபத்திய பாப் ஆல்பம் அமெரிக்காவில் சக்கை போடு போடுகிறது.

பாப் இசையில் மட்டுமல்லாது, சில திரைப்படங்களிலும் தலை காட்டியவர் லோபஸ்(அனகோண்டாவை யாரும் மறந்திருக்க முடியாது).

அவரது திரைப்படமான தி வெட்டிங் பிளானர்என்ற படத்தின் பாடல்கள் தற்போதுசக்கை போடு போடுகின்றன.

அதே போல, புதன்கிழமை வெளியான புதிய பாடல் ஆல்பமான "ஜே.லோவெளியான முதல் நாளே 2,72,000 கேசட்டுகள் விற்பனையாகின.

லோபஸ்சுக்கு உள்ள ஒரே பிரச்சனை அவரது காதலனும் ராப் பாடகருமான பபிகோம்ப் தான். அனுமதியின்றி துப்பாக்கி வைத்துக் கொண்டிதற்காகவும், லஞ்சம்வாங்கியதற்காகவும் விசாரணையில் சிக்கியிருக்கிறார் கோம்ப்.

லண்டன்: ஆஸ்கர் விருதுக்கு நிகரான இங்கிலாந்தின் "பாஃப்டா விருதுக்கு, சமீபத்தில்வெளியான கிளேடியேட்டர் மற்றும் சீன தற்காப்பு கலை குறித்த "கிரெளச்சிங் டைகர்அன்ட் ஹிடன் டிராகன் ஆகிய படங்கள் அதிக விருதுகளுக்குபபரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இரு படங்களும் மொத்தம் தலா 14 பிரிவுகளில் விருதுக்குப் பரிந்துரைசெய்யப்பட்டுள்ளன. கிரேக்கப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டுதயாரிக்கப்பட்டது கிளேடியேட்டர்.

இந்த விருதுகளுக்குத் தேர்வு செய்யப்பட்ட கலைஞர்களும், படங்களும் பிப்ரவரி25-ம் தேதி நடைபெறும் கண்கவர் நிகழ்ச்சியின்போது அறிவிக்கப்படும். அதற்குஅடுத்த ஒரு மாதத்தில் ஆஸ்கர் விருது விழா நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிறந்த படம், சிறந்த இயக்குநர் (ஆங்க் லீ), சிறந்த நடிகை (மிச்சேல் யியோ) ஆகியமூன்று பிரிவுகளில் கிரெளச்சிங் டைகர் மற்றும் ஹிடன் டிராகன் படம்பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அதே பிரிவுகளில் கிளேடியேட்டர் படமும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இந்தப் படங்கள் தவிர, அல்மோஸ்ட் பேமஸ், எரின் புரோக்விச், பில்லி எலியட் ஆகியபடங்களும் தலா 11 விருதுகள் வரை பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சிறந்த நடிகர் விருது ருஸ்ஸல் கிரெளவ், மைக்கேல் டக்ளஸ், டாம் ஹாங்க்ஸ், ஜெப்ரிரஷ், ஜேமி பெல் ஆகியோர் சிறந்த நடிகர் பிரிவில் கடுமையான போட்டியில்உள்ளனர்.

சிறந்த நடிகை பிரிவிலும் கடும் போட்டி இருக்கிறது. ஜூலியட் பினோச், கேட் ஹட்சன்,ஜூலியா ராபர்ட்ஸ், ஹிலாரி ஸ்வாங்க், மிச்சல் யியோ ஆகியோர் உள்ளனர்.

ஜுலியட் (சோகோலட்), காடே ஹட்சன் ( அல்மோஸ்ட் பேமஸ்), ஜுலியா ராபர்ட்ஸ்(எரின் புரோகோவிச்), ஹிலாகி ஸ்வாங் (பாய்ஸ் டோன்ட் க்ரை மற்றும் மிக்சேலி)ஆகியோர் நடிகைக்கான விருதுக்காக பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர்.

Read more about: awards cinema world

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil