twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சின்னத்திரைக் கலைஞர்களுக்கு 1216 வீடுகள்!

    By Chakra
    |

    Kalaignar TV
    தமிழக அரசு ஒதுக்கியுள்ல நிலத்தில் சின்னத் திரைக் கலைஞர்களுக்கு முதல்கட்டமாக 1,216 வீடுகள் கட்டப்படுகின்றன. இவற்றைக் கட்டித் தர மலேஷிய நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் விடுதலை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:

    திரைப்பட தொழிலாளர்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் வீடு கட்டி குடியேற தமிழக முதல்வர் பையனுரில் 90 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்து கொடுத்தார்.

    இந்த இடத்தில் சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்புக்கு 8 ஏக்கர் நிலம் கிடைத்துள்ளது. சின்னத்திரை கலைஞர்களுக்கு வீடு கட்டும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்கள்.

    இதைத்தொடர்ந்து கூட்டமைப்பு சார்பில் மலேசியாவில் உள்ள 'ரிம்பா முலியா மேனேஜ்மென்ட்' என்ற நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். பிறகு கடந்த 3-ம்தேதி இரு தரப்பிலும் கையெழுத்திட்டோம்.

    இதன்படி எங்களுக்கு ஒதுக்கப்பட்ட 8 ஏக்கர் நிலத்தில் முதல் கட்டமாக 1216 குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இந்த வீடுகள் 600 சதுர அடி, 800 சதுர அடி, 1000 சதுர அடி அளவில் உருவாக்கப்படும். எங்கள் கூட்டமைப்பில் சின்னத்திரை நடிகர்கள் சங்கம், சின்னத்திரை எழுத்தாளர்கள் சங்கம், சின்னத்திரை இயக்குனர்கள் சங்கம், சின்னத்திரை படத்தொகுப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து செயல்படுகின்றன. கூட்டமைப்பில் உள்ளவர்களுக்கு மட்டுமின்றி குஷ்புவை தலைவராக கொண்ட சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ளவர்களுக்கும் வீடுகள் வழங்கப்படும்.

    விரைவில் 90 ஏக்கர் நிலத்தில் வீடு கட்டுவதற்காக முதல்வர் அடிக்கல் நாட்ட இருக்கிறார். அதைத் தொடர்ந்து எங்கள் 8 ஏக்கர் குடியிருப்புகளை கட்டும் வேலைகள் தொடங்கும்.

    நாங்கள் கட்டும் 1216 வீடுகளுக்கும் 175 கோடி முதல் 200 கோடி வரை செலவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு சின்னத்திரை கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் இதற்காக உருவாக்கப்பட்டு அதில் வீடு வாங்கும் அனைத்து சின்னத்திரை கலைஞர்களும் உறுப்பினர்களாக இணைக்கப்படுவார்கள்.

    நிலம் சங்கம் பெயரிலும் வீடு உறுப்பினர்கள் பெயரிலும் இருக்கும்..." என்றார் விடுதலை.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X