twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    எந்த ஹீரோ 'டாப்'பில் இருக்கிறார்?... நம்ம நடிகர்களின் தெலுங்கு, மலையாள பிசினஸ் நிலவரம் எப்படி?

    By
    |

    சென்னை: தமிழில் கொடிகட்டி பறக்கும் நம்மூர் ஹீரோக்களில் ஒரு சிலருக்கு மட்டுமே தெலுங்கு, மலையாள மார்க்கெட் சூப்பராக இருக்கிறது.

    தமிழ் திரைப்படங்கள் இப்போது அதிகமாக மற்ற மொழிகளில் டப் செய்யப்பட்டு வருகின்றன. அதே போல மற்ற மொழி படங்களும் இங்கு டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன.

    தெலுங்கு படங்கள், அங்கு ரிலீஸ் ஆகும் நேரத்தில் இங்கும் ரிலீஸ் ஆவது வழக்கம். சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் மட்டும்தான் இந்த ரிலீஸ் இருந்து வந்தன.

     தலையில் அடித்துக்கொண்டு கதறியப்படி ஓடி வந்த ஷங்கர்.. இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த அந்த பயங்கரம்! தலையில் அடித்துக்கொண்டு கதறியப்படி ஓடி வந்த ஷங்கர்.. இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த அந்த பயங்கரம்!

    டப் செய்யப்பட்டு

    டப் செய்யப்பட்டு

    இப்போது தமிழ்நாட்டின் சிறு நகரங்களிலும் முன்னனி தெலுங்கு ஹீரோ படங்கள் ரிலீஸ் ஆகின்றன. முன்பெல்லாம் தெலுங்கில் ரிலீஸ் ஆகும் நாளன்று இங்கும் ரிலீஸ் ஆனாலும் சில மாதங்கள் கழித்து தமிழில் டப் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட்டன. இப்போது அப்படியில்லை. அங்கு ரிலீஸ் ஆகும் அதே நாளில் டப்பிங் செய்யப்பட்டு இங்கு ரிலீஸ் ஆகின்றன.

    மலையாளத்தில்

    மலையாளத்தில்

    விஜய் தேவரகொண்டாவின் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் மற்றும் அவரது முந்தைய சில படங்கள் அப்படித்தான் ரிலீஸ் செய்யப்பட்டன. இதே போல தமிழ் படங்கள் மலையாளத்தில் டப் செய்யப்படாமல் நேரடியாகவே ரிலீஸ் செய்யப் படுகின்றன. ஆனால் தெலுங்கில், டப் செய்யப்பட்டே ரிலீஸ் ஆகின்றன. இதில் எந்த ஹீரோ படங்களுக்கு அங்கு மார்க்கெட் இருக்கிறது? என சில வினியோகஸ்தர்களிடம் விசாரித்தோம்.

    ரஜினி, கமல், மணி

    ரஜினி, கமல், மணி

    ரஜினி, கமல், மணிரத்னம் படங்களுக்கு தமிழைப் போன்றே தெலுங்கு, மலையாளத்தில் நல்ல ஓபனிங் உண்டு. அவர்களை அடுத்து நடிகர் சூர்யாவுக்கு தெலுங்கில் மார்க்கெட் இருக்கிறது. தமிழில் ரிலீஸ் ஆகும்போது என்ன ஓபனிங் இருக்குமோ, அதே ஓபனிங் அவர் படங்களுக்கு அங்கும் இருக்கிறது. சூர்யா நடித்த படங்கள் அங்கு 40 கோடி ரூபாய் வரை பிசினஸ் ஆனது, ஒரு காலத்தில்.

    சூர்யாதான் முதலிடம்

    சூர்யாதான் முதலிடம்

    ஆனால் அவரது சமீபத்திய படங்கள் சரியாக ஓடவில்லை என்றதால், இப்போது ரூ.20 கோடிக்கு இறங்கிவிட்டதாகச் சொல்கிறார்கள். இருந்தாலும் தமிழ் நடிகர்களின் தெலுங்கு மார்க்கெட்டில் சூர்யாதான் முதலிடத்தில் இருக்கிறார். அடுத்து, விஜய், கார்த்தி, விஷால் படங்களுக்கு ஓபனிங் இருக்கிறது என்கிறார்கள். விஜய்க்கு சுமார் ரூ. 8 கோடி அளவில் அங்கு பிசினஸ் இருக்கிறது.

    மலையாளத்தில்

    மலையாளத்தில்

    கார்த்தியின் கைதி படத்துக்கு தமிழில் என்ன ஓபனிங் இருந்ததோ, அதே அளவில் தெலுங்கிலும் இருந்தது. அடுத்த இடத்தில் அஜித் படங்கள் இருக்கின்றன. தெலுங்கில் இப்படியென்றால், மலையாளத்தில் தலைகீழ். தமிழில் பெரிய ஹீரோ படங்கள் ரிலீஸ் ஆகும் அதே நாளிலேயே கேரளாவிலும் ரிலீஸ் ஆகின்றன. விஜய், அஜித், சூர்யா படங்கள் அங்கு ரிலீஸ் ஆகும் நாட்களில் கேரள ஹீரோக்கள், தங்கள் படங்களின் ரிலீஸை தள்ளி வைத்து விடுகிறார்கள்.

    அல்லு அர்ஜூன்

    அல்லு அர்ஜூன்

    அந்த அளவுக்கு டப் செய்யப்படாமலேயே தமிழ்ப் படங்கள் அங்கு ஹிட்டடிக்கின்றன. ரஜினி, விஜய், அஜித், சூர்யாவுக்கு அங்கு பெரியளவு மார்க்கெட் இருக்கிறது என்கிறார்கள். தெலுங்கு ஹீரோ அல்லு அர்ஜூனுக்கு மலையாளத்தில் பெரிய ஓபனிங் இருக்கிறது. அவரது படங்கள் டப் செய்யப்படாமலேயே அங்கு சூப்பர் ஹிட்டாக ஓடுகிறது. அவருக்கு அங்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் இருக்கிறது.

    English summary
    How is telugu, malayalam business for Tamil heroes?
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X