twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    என்னது.. இளையராஜாவின் இந்த குத்துப் பாடல்.. தாலாட்டுப் பாடலாக இருந்ததா!

    |

    சென்னை : இசைஞானி இளையராஜா மற்றும் இயக்குனர் மணிரத்தினம் இணைந்த படங்களின் பாடல்கள் மற்றும் இசைக்காகவே மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இன்று வரை இருந்து வருகிறது.

    அவ்வாறு இவர்கள் இணைந்து பணியாற்றிய தளபதி, மௌனராகம், நாயகன் என பல படங்கள் இன்று வரை பலரது நினைவுகளில் நீங்கா இடம் பிடித்துள்ளது.

    இந்த நிலையில் நாயகன் திரைப்படத்தில் அனைவரும் ரசித்து ருசித்த குத்தாட்ட பாடல் ஒன்று முதலில் தாலாட்டு பாடலாக உருவாகி இருந்ததாக இசைஞானி இளையராஜா தனது இசைக்கச்சேரியில் கூறியிருக்கிறார்.

    சினிமா சிம்புவின் விரல் நுனியில் இருக்கும்.. கிரிக்கெட்டர் அஸ்வினிடம் மனம் திறந்த விஷ்ணு விஷால்!சினிமா சிம்புவின் விரல் நுனியில் இருக்கும்.. கிரிக்கெட்டர் அஸ்வினிடம் மனம் திறந்த விஷ்ணு விஷால்!

    காலத்தால் அழியாத

    காலத்தால் அழியாத

    இந்திய சினிமாவில் இசைஞானி இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர் எவரும் இல்லை. அவ்வாறு தனது இசையின் மூலம் பலதரப்பட்ட பாடல்களுக்கு இசை அமைத்து அதை இன்று வரை காலத்தால் அழியாதவாறு நாம் அனைவரும் ரசிக்கும் வகையில் சிறந்த பாடல்களாக ஒலித்துக் கொண்டிருக்கிறது.

    வரலாற்றில் இடம்பிடித்து

    வரலாற்றில் இடம்பிடித்து

    இயக்குனர் மணிரத்னம் மற்றும் இசைஞானி இளையராஜா என இரு ஜாம்பவான்கள் இணையும் படம் என்றால் ரசிகர்களுக்கு ஒரே கொண்டாட்டம் தான், அவ்வாறு இவர்கள் இருவரும் இதற்கு முன் இணைந்த பல திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியடைந்து வரலாற்றில் இடம்பிடித்து.

    படைப்பாளிகளுக்கு நூலகமாக

    படைப்பாளிகளுக்கு நூலகமாக

    இவ்வாறு இவர்கள் இருவரும் பல படங்களில் இணைந்து பணியாற்றி இருந்தாலும், கமல்ஹாசன் நடிக்க மணிரத்னம் இயக்கிய நாயகன் திரைப்படம் இன்று வரை பொக்கிஷமாக பல ரசிகர்களுக்கும் வளர்ந்து வரும் படைப்பாளிகளுக்கும் ஆகச் சிறந்த நூலகமாக இந்த படம் திகழ்ந்து வருகிறது.

    ஒய்யாரமாக கவர்ச்சி நடனத்தில்

    ஒய்யாரமாக கவர்ச்சி நடனத்தில்

    அவ்வாறு இம்மூவர் கூட்டணியில் உருவான நாயகன் திரைப்படத்தில் வரும் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் ஆன நிலையில் இதில் வரும் "நிலா அது வானத்து மேலே" என்ற குத்து பாடல் இன்றுவரை அனைவரையும் ஆட்டம் போட வைத்து வருகிறது. காமெடி நடிகர் ஜனகராஜ் மற்றும் குயிலி, இருவரும் படகில் ஒய்யாரமாக கவர்ச்சி நடனத்தில் ஆடியவாறு பாடல் காட்சி ஒளிப்பதிவு செய்யப்பட்ட இந்தப் பாடல் திரைப்படம் வெளியானபோது மிகப் பிரபலமாக இருந்தது.

    தென்பாண்டி சீமையிலே-க்கு மாற்றாக

    தென்பாண்டி சீமையிலே-க்கு மாற்றாக

    இவ்வாறு குத்துப் பாடலாக பலருக்கும் பரிச்சயமான "நிலா அது வானத்து மேலே" பாடல் உண்மையிலேயே ஒரு தாலாட்டுப் பாடலுக்காக இளையராஜா மெட்டிசைத்ததாம். நாயகன் படத்தில் வரும் மற்றுமொரு பிரபலமான பாடலான "தென்பாண்டி சீமையிலே" பாடலுக்கு மாற்றாக ஒரு தாலாட்டு பாடலுக்காக உருவாக்கப்பட்டிருந்தது தான் இந்த "நிலா அது வானத்து மேலே" பாடல்.

    குத்துப் பாடலாக மாற்றி

    குத்துப் பாடலாக மாற்றி

    இயக்குனர் மணிரத்னத்திடம் இந்தப் பாடல் இசையை வாசித்துக் காட்டிய போது தென்பாண்டி சீமையிலே பாடலுக்கு மாற்றாக உருவாக்கப்பட்ட தாலாட்டு பாடல் இது என இளையராஜா கூறியதாகவும், அதற்கு இயக்குனர் எனக்கு இந்த பாடலை எல்லோரும் ஆடும் வகையில் ஒரு குத்துப் பாடலாக மாற்றிக் கொடுக்க முடியுமா? எனக் கேட்டதாகவும், என்ன முடியுமா!! இந்தா வாங்கிக்கோ, என இளையராஜா அசால்டாக இந்தத் தாலாட்டு பாடலை குத்துப் பாடலாக மாற்றி அமைத்து இயக்குனருக்கு அந்த இடத்திலேயே மிகப் பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.

    ஆச்சரியத்தை பாராட்டுக்களாக

    ஆச்சரியத்தை பாராட்டுக்களாக

    இவ்வாறு நாம் திரையில் பலமுறை கண்டு ரசித்துள்ள இந்த குத்துப் பாடல் முதலில் தாலாட்டுப் பாடலாக இருந்தது என்பதை இசைஞானி இளையராஜாவின் சிங்கப்பூர் இசைக்கச்சேரியின் வாயிலாக கேட்டதும் அரங்கத்தில் இருந்த ரசிகர்கள் பலரும் கைகளைத் தட்டி ஆரவாரப் படுத்தி தங்களது ஆச்சரியத்தை பாராட்டுக்களாக இசைஞானிக்கு தெரிவித்தனர்.

    English summary
    ILaiyaraaja open talk about Nayagan song
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X