»   »  அமிதாப் படத்திற்கு இளையராஜா! இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் படத்திற்கு இசையமைக்கப் போகிறார்இந்தியத் திரையுலகின் மெலடி ராஜா இசைஞானி இளையராஜா.இந்திப் பாடல்களுக்கு தமிழகமே அடிமையாகக் கிடந்த நிலையில் அப்படியேஅவர்களை அன்னக்கிளி உன்ன தேடுதே மூலம் புரட்டிப் போட்டவர் இளையராஜா.ராஜாவின் வருகைக்குப் பிறகு இந்திப் பாடல்களை காப்பியடித்து டிரம்ஸ் உருட்டிக்கொண்டிருந்த இசையமைப்பாளர்கள் காணாமல் போயினர்.தமிழ் ரசிகர்களின் ரசனையையும் முற்றிலும் மாறிப் போட்டார் ராஜா. மகுடிக்குமயங்கிய நாகமாகிப் போது தமிழகம்.அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் இசை மழை இடையிடையே சிலதடைகளோடு இன்று வரை தொடர்ந்து விளாசிக் கொண்டுள்ளது. தமிழ் திரை இசையில் சகாப்தமாக திகழும் இளையராஜாவின் எத்தனையோ சூப்பர்ஹிட் பாடல்களின் ட்யூன்கள், இந்திக்காரர்களால் உருவப்பட்டுஅங்கும் முத்திரைபதித்துள்ளன.நேரடியாகவும் சில இந்திப் படங்களுக்கு இசையைமத்துள்ளார் ராஜா. இப்போது மிகப் பெரிய வாய்ப்பு ஒன்று அவரைத் தேடி வந்துள்ளது.இந்தித் திரையுலகின் முடிசூடா மன்னன் அமிதாப்பச்சன் நடிக்கும் ஜூனும் என்றபடத்திற்கு இசையமைக்கப் போகிறார் ராஜா.சுனில்மான் சந்த் தயாரிக்கும் இப்படத்தில் அமிதாப்புக்கு ஜோடியாக நடிக்கப்போகிறவர் தபு. படத்தை கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர்இயக்குகிறார். காதலும், தியாகம் கலந்த கதையாக ஜூனும் படம் உருவாகவிருக்கிறது.இப்படத்திற்கு இளையராஜாவின் இசை மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றுபாலகிருஷ்ணன் நம்பினாராம்.அதை அமிதாப்பிடம் சொல்ல, அவர் மிகவும் குஷியாகி இளையராஜாவிடம் அவரேபேசி முடித்தாராம்.உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் அமிதாப்இப்போது ஜூனும் படப்பிடிப்பில் மும்முரமாகியிருக்கிறார்.அமிதாப்பச்சன் தயாரித்த உல்லாசம் படத்துக்கு இளையராஜாவின் மகன் கார்ததிக் ராஜாஇசைமைத்தது நினைவுகூறத்தக்கது.

அமிதாப் படத்திற்கு இளையராஜா! இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் படத்திற்கு இசையமைக்கப் போகிறார்இந்தியத் திரையுலகின் மெலடி ராஜா இசைஞானி இளையராஜா.இந்திப் பாடல்களுக்கு தமிழகமே அடிமையாகக் கிடந்த நிலையில் அப்படியேஅவர்களை அன்னக்கிளி உன்ன தேடுதே மூலம் புரட்டிப் போட்டவர் இளையராஜா.ராஜாவின் வருகைக்குப் பிறகு இந்திப் பாடல்களை காப்பியடித்து டிரம்ஸ் உருட்டிக்கொண்டிருந்த இசையமைப்பாளர்கள் காணாமல் போயினர்.தமிழ் ரசிகர்களின் ரசனையையும் முற்றிலும் மாறிப் போட்டார் ராஜா. மகுடிக்குமயங்கிய நாகமாகிப் போது தமிழகம்.அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் இசை மழை இடையிடையே சிலதடைகளோடு இன்று வரை தொடர்ந்து விளாசிக் கொண்டுள்ளது. தமிழ் திரை இசையில் சகாப்தமாக திகழும் இளையராஜாவின் எத்தனையோ சூப்பர்ஹிட் பாடல்களின் ட்யூன்கள், இந்திக்காரர்களால் உருவப்பட்டுஅங்கும் முத்திரைபதித்துள்ளன.நேரடியாகவும் சில இந்திப் படங்களுக்கு இசையைமத்துள்ளார் ராஜா. இப்போது மிகப் பெரிய வாய்ப்பு ஒன்று அவரைத் தேடி வந்துள்ளது.இந்தித் திரையுலகின் முடிசூடா மன்னன் அமிதாப்பச்சன் நடிக்கும் ஜூனும் என்றபடத்திற்கு இசையமைக்கப் போகிறார் ராஜா.சுனில்மான் சந்த் தயாரிக்கும் இப்படத்தில் அமிதாப்புக்கு ஜோடியாக நடிக்கப்போகிறவர் தபு. படத்தை கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர்இயக்குகிறார். காதலும், தியாகம் கலந்த கதையாக ஜூனும் படம் உருவாகவிருக்கிறது.இப்படத்திற்கு இளையராஜாவின் இசை மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றுபாலகிருஷ்ணன் நம்பினாராம்.அதை அமிதாப்பிடம் சொல்ல, அவர் மிகவும் குஷியாகி இளையராஜாவிடம் அவரேபேசி முடித்தாராம்.உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் அமிதாப்இப்போது ஜூனும் படப்பிடிப்பில் மும்முரமாகியிருக்கிறார்.அமிதாப்பச்சன் தயாரித்த உல்லாசம் படத்துக்கு இளையராஜாவின் மகன் கார்ததிக் ராஜாஇசைமைத்தது நினைவுகூறத்தக்கது.

Subscribe to Oneindia Tamil

இந்தி சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனின் படத்திற்கு இசையமைக்கப் போகிறார்இந்தியத் திரையுலகின் மெலடி ராஜா இசைஞானி இளையராஜா.

இந்திப் பாடல்களுக்கு தமிழகமே அடிமையாகக் கிடந்த நிலையில் அப்படியேஅவர்களை அன்னக்கிளி உன்ன தேடுதே மூலம் புரட்டிப் போட்டவர் இளையராஜா.

ராஜாவின் வருகைக்குப் பிறகு இந்திப் பாடல்களை காப்பியடித்து டிரம்ஸ் உருட்டிக்கொண்டிருந்த இசையமைப்பாளர்கள் காணாமல் போயினர்.

தமிழ் ரசிகர்களின் ரசனையையும் முற்றிலும் மாறிப் போட்டார் ராஜா. மகுடிக்குமயங்கிய நாகமாகிப் போது தமிழகம்.

அன்னக்கிளியில் தொடங்கிய இளையராஜாவின் இசை மழை இடையிடையே சிலதடைகளோடு இன்று வரை தொடர்ந்து விளாசிக் கொண்டுள்ளது.


தமிழ் திரை இசையில் சகாப்தமாக திகழும் இளையராஜாவின் எத்தனையோ சூப்பர்ஹிட் பாடல்களின் ட்யூன்கள், இந்திக்காரர்களால் உருவப்பட்டுஅங்கும் முத்திரைபதித்துள்ளன.

நேரடியாகவும் சில இந்திப் படங்களுக்கு இசையைமத்துள்ளார் ராஜா. இப்போது மிகப் பெரிய வாய்ப்பு ஒன்று அவரைத் தேடி வந்துள்ளது.

இந்தித் திரையுலகின் முடிசூடா மன்னன் அமிதாப்பச்சன் நடிக்கும் ஜூனும் என்றபடத்திற்கு இசையமைக்கப் போகிறார் ராஜா.

சுனில்மான் சந்த் தயாரிக்கும் இப்படத்தில் அமிதாப்புக்கு ஜோடியாக நடிக்கப்போகிறவர் தபு. படத்தை கேரளாவைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர்இயக்குகிறார்.


காதலும், தியாகம் கலந்த கதையாக ஜூனும் படம் உருவாகவிருக்கிறது.இப்படத்திற்கு இளையராஜாவின் இசை மட்டுமே பொருத்தமாக இருக்கும் என்றுபாலகிருஷ்ணன் நம்பினாராம்.

அதை அமிதாப்பிடம் சொல்ல, அவர் மிகவும் குஷியாகி இளையராஜாவிடம் அவரேபேசி முடித்தாராம்.

உடல் நலம் பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் நடிக்க வந்திருக்கும் அமிதாப்இப்போது ஜூனும் படப்பிடிப்பில் மும்முரமாகியிருக்கிறார்.

அமிதாப்பச்சன் தயாரித்த உல்லாசம் படத்துக்கு இளையராஜாவின் மகன் கார்ததிக் ராஜாஇசைமைத்தது நினைவுகூறத்தக்கது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil