twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்த ஆண்டின் டாப் 10 வெப்சீரிஸ் பட்டியலை வெளியிட்ட IMDb.. முதலிடத்தில் எந்த வெப்சீரிஸ் தெரியுமா?

    |

    சென்னை: 2020ம் ஆண்டு வெப்சீரிஸ்களின் ஆண்டு என்றே சொல்லலாம். தியேட்டர்கள் மார்ச் மாதம் மூடப்பட்ட நிலையில், இந்தியாவில் வெப்சீரிஸ்களின் வளர்ச்சி அசுர வேகம் எடுத்தது.

    நடிகையும் விராத் கோலியின் மனைவியுமான அனுஷ்கா சர்மா உள்ளிட்ட பல பிரபலங்கள் வெப்சீரிஸ் தயாரிப்பில் ஈடுபட்டனர்.

    கோலிவுட்டின் முன்னணி நடிகைகளும் வெப்சீரிஸ்களில் நடிக்க ஆரம்பித்துள்ளனர்.

    நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் ஜி தமிழ் வெப்சீரிஸ்கள் தான் இந்தியளவில் டிரெண்டாகின.

    இந்தி வெப்சீரிஸ்கள்

    இந்தி வெப்சீரிஸ்கள்

    தென்னிந்திய வெப்சீரிஸ்கள் இன்னமும் முதல் படியில் தான் உள்ளன. அதனால், இந்த ஆண்டு IMDb ரேட்டிங்கில் மொத்தமாகவே இந்தி வெப்சீரிஸ்கள் தான் ஆதிக்கம் செலுத்தி உள்ளன. சில வெப்சீரிஸ்கள் தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு இந்தியா முழுவதும் ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.

    9வது இடத்தில் அபய் 2

    9வது இடத்தில் அபய் 2

    இயக்குநர் கென் கோஷ் இயக்கத்தில் ஜீ5 தளத்தில் இந்தியில் வெளியான அபய் சீசன் 2 வெப்சீரிஸ் இந்த ஆண்டு 9வது இடத்தை பிடித்துள்ளது. நடிகர் குணால் கேமு அபய் எனும் ஹீரோ கதாபாத்திரத்தில் கடந்த இரு சீசன்களாக நடித்து அசத்தி வருகிறார். எல்னாஸ் நவுரோஸி நாயகியாக நடித்துள்ள இந்த கிரைம் த்ரில்லர் வெப்சீரிஸுக்கு ரசிகர்கள் அதிகம்.

    8வது இடத்தில் ஹை

    8வது இடத்தில் ஹை

    அக்‌ஷய் ஓபராய், ரன்வீர் ஷோரே, ஸ்வேதா பாசு பிரசாத் உள்ளிட்டோர் நடிப்பில் இந்தியில் வெளியான High வெப்சீரிஸ் இந்த ஆண்டு 8வது இடத்தை பிடித்துள்ளது. இயக்குநர் நிகில் ராவ் இயக்கத்தில் வெளியான இந்த வெப்சீரிஸும் போதைப் பொருளுக்கு அடிமையான ஒரு இளைஞனின் வாழ்க்கையை சுற்றித் தான் நடக்கிறது. பாலிவுட்டில் இந்த ஆண்டு ஏகப்பட்ட போதைப் பொருள் தொடர்பான வெப்சீரிஸ்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

    7வது இடத்தில் பாதாள் லோக்

    7வது இடத்தில் பாதாள் லோக்

    நடிகை அனுஷ்கா ஷர்மா தயாரிப்பில் அமேசான் பிரைமில் வெளியான பாதாள் லோக் வெப்சீரிஸ் மிகப்பெரிய சர்ச்சையை கிளப்பி வைரலானது. இந்திய கடவுள்களை அவதூறாக சித்தரித்ததாகவும், நாய் ஒன்றுக்கு துர்கா எனப் பெயரிட்டதாகவும் பாதாள் லோக் என்ற டைட்டில் என ஏகப்பட்ட சர்ச்சைகளை தாங்கி வந்த இந்த வெப்சீரிஸ் 7வது இடத்தை பிடித்துள்ளது.

    6வது இடத்தில் அசுர்

    6வது இடத்தில் அசுர்

    வூட் தளத்தில் வெளியான Asur: Welcome to Your Dark Side வெப்சீரிஸ் இந்த பட்டியலில் 6வது இடத்தை பிடித்துள்ளது. ட்ரூ டிடெக்டிவ்ஸ் வெப்சீரிஸை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த வெப்சீரிஸில் ரிதி தோக்ரா, வருண் சோப்தி, அனுப்பிரியா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சீரியல் கொலைகளை யார் செய்வது என்கிற தேடல் தான் இந்த வெப்சீரிஸ்.

    5வது இடத்தில் மிர்சாபூர்

    5வது இடத்தில் மிர்சாபூர்

    ஏகப்பட்ட பிரபலங்களின் ஃபேவரைட் வெப்சீரிஸான மிர்சபூர் டாப் 10 பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி வரும் இந்த வெப்சீரிஸ் கடந்த 2018ம் ஆண்டு தொடங்கியது. சீசன் 1 வெற்றியடைந்த நிலையில், சீசன் 2 இந்த ஆண்டு வெளியாகி ஹிட் அடித்தது. கரண் அனுஷ்மான் மற்றும் குமீத் சிங் இணைந்து இந்த வெப்சீரிஸை இயக்கி உள்ளனர்.

    4வது இடத்தில் பந்திஷ் பண்டிட்ஸ்

    4வது இடத்தில் பந்திஷ் பண்டிட்ஸ்

    IMDb டாப் 10 பட்டியலில் 2020ம் ஆண்டில் 4ம் இடத்தை பிடித்துள்ள வெப்சீரிஸ் Bandish Bandits. த்ரில்லர் வெப்சீரிஸ்களுக்கு நடுவே செம ஜாலியாக ஒரு ரொமான்டிக் வெப்சீரிஸாக ரிலீசான பந்திஷ் பண்டிட்ஸ் வெப்சீரிஸுக்கு பாலிவுட்டில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். பாலிவுட்டின் பிரபல இயக்குநரான ஆனந்த் திவாரி இந்த வெப்சீரிஸை இயக்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

    3வது இடத்தில் ஸ்பெஷல் ஆப்ஸ்

    3வது இடத்தில் ஸ்பெஷல் ஆப்ஸ்

    எம்.எஸ். தோனி பயோபிக், ஸ்பெஷல் 26, பேபி, ரஸ்டம் என ஏகப்பட்ட மெகா ஹிட் பாலிவுட் படங்களை இயக்கிய நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளியான ஸ்பெஷல் ஆப்ஸ் வெப்சீரிஸ் 3வது இடத்தை பிடித்துள்ளது. சிம்புவின் சிலம்பாட்டம் படத்தில் நடித்த சனா கான், கேகே மேனன் உள்ளிட்டோர் நடிப்பில் ஆக்‌ஷன் த்ரில்லராக இந்த வெப்சீரிஸ் உருவாகி இருந்தது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அதிக ரேட்டிங்கை அள்ளிய ஸ்பெஷல் ஆப்ஸ் IMDb ரேட்டிங்கிலும் அங்கீகாரம் பெற்றுள்ளது.

    2வது இடத்தில் பஞ்சாயத்

    2வது இடத்தில் பஞ்சாயத்

    அமேசான் பிரைமில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் பஞ்சாயத் வெப்சீரிஸுக்கு IMDb ரேட்டிங்கில் 2வது இடம் கிடைத்துள்ளது. இன்ஜினியரிங் படித்து விட்டு வேலையில்லா பட்டதாரியாக இருக்கும் இளைஞரின் வாழ்க்கையை சுற்றி நடக்கும் காமெடி டிராமா தான் இந்த பஞ்சாயத்.

    முதலிடத்தில் ஸ்கேம் 1992

    முதலிடத்தில் ஸ்கேம் 1992

    இந்தியாவையே அலறவிட்ட அர்ஷத் மேத்தாவின் 1992ம் ஆண்டு நடந்த மோசடியை மையமாக வைத்து ஹன்சல் மேத்தா, ஜெய் மேத்தா இயக்கிய Scam 1992 வெப்சீரிஸ் தான் இந்த ஆண்டின் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது. பாலிவுட் நடிகர் பிரதீக் காந்தி அர்ஷத் மேத்தாவாக தனது அட்டகாச நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஒட்டுமொத்த இந்திய வெப்சீரிஸ் ரசிகர்களும் இந்த வெப்சீரிஸை கண்டு வியந்து வருகின்றனர்.

    English summary
    Scam 1992: The Harshad Mehta Story got number one place in IMDb top 10 rated webseries in 2020. Here we list out the top 10 webseries.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X