»   »  தம்பி ஹீரோ-அண்ணன் வில்லன்!

தம்பி ஹீரோ-அண்ணன் வில்லன்!

Subscribe to Oneindia Tamil
Vikram with Shriya
மலையாளத்திலும், தமிழிலும் ஹீரோவாக வலம் வந்து கொண்டிருக்கும் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித் வில்லனாக தமிழில் அறிமுகமாகிறார்.

70களில் மலையாளத்தில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்த சுகுமாரனின் புதல்வர்கள்தான் இந்திரஜித்தும், பிருத்விராஜும். பிருத்விராஜ் மலையாளத்தில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் அங்கிருந்து தமிழுக்கு வந்தார். இப்போது தமிழிலும் அவருக்கு கை நிறையப் படங்கள்.

இந்த நிலையில் அண்ணன் இந்திரஜித்தும் தமிழுக்கு வருகிறார். ஆனால் நாயகனாக அல்ல, வில்லனாக. விக்ரம் நடிக்கும் கந்தசாமி படத்தில்தான் இந்த வாய்ப்பு இந்திரஜித்தை தேடி வந்துள்ளது.

பெரும் பொருட் செலவில், சீயான் விக்ரமின் வித்தியாசன கெட்டப்களில் உருவாகிக் கொண்டிருக்கும் கந்தசாமி படத்தின் ஷூட்டிங் முதல் ஷெட்யூலை முடித்துள்ளது.

அடுத்த கட்டமாக இத்தாலி, கிரீஸ் ஆகிய நாடுகளுக்கு கிளம்பிச் செல்லவுள்ளனர். இதுவரை யாரும் போயிராத இடங்களில் ஷூட்டிங் நடக்கவுள்ளதாம்.

இதற்கிடையே, விக்ரமுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளாராம் சுசி. கணேசன். எனவே பெரிய நடிகர் யாரையாவது நடிக்க வைக்கலாம் என நினைத்து சிலரையும் அணுகியுள்ளாராம் கணேசன்.

ஆனால் வில்லன் கதாபாத்திரம் மீது இம்ப்ரஸ் ஆன விக்ரம், தானே அதில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், சாமி, வேண்டாம் ரிஸ்க் என்று கூறி தடுத்து விட்டாராம் கணேன். அழகிய தமிழ் மகன் படத்தில் விஜய், நாயகன், வில்லனாக இரு வேடம் பூண்டு நடித்து, அது வரவேற்பு பெறாமல் போனதையும் சசி.கணேசன் சுட்டிக் காட்டியுள்ளார்.

இந்த நிலையில் புதிய திருப்பமாக, பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்தை வில்லன் கேரக்டரில் நடிக்க வைக்க சுசி.கணேசன் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இந்திரஜித் சென்னையில் தங்கிப் படித்தவர். எனவே தம்பி பிருத்வியை விட சூப்பராக தமிழ் பேசுவாராம்.

இந்திரஜித் தவிர ஓம் சாந்தி ஓம் வில்லன் அர்ஜூன் ராம்பால், இர்பான் கான், சிவாஜி வில்லன் சுமன் என மேலும் சில வில்லன்களையும் பரிசீலனை வலையில் போட்டு வைத்துள்ளனராம்.

சீயானை 'சீண்டப்' போவது யாரோ?

Read more about: kandasamy, shriya, vikram
Please Wait while comments are loading...