For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  ஸ்பெஷல்ஸ்

  By Staff
  |

  இஷா கோபிகர் நடித்த கேர்ள் பிரண்ட் என்ற ஹிந்தி படம் பாலிவுட்டில் பயங்கர சர்ச்சையைக் கிளப்பிவிட்டுள்ளது.

  தமிழில் என் சுவாசக்காற்றே படத்தின் மூலம் அறிமுகமானார் இஷா கோபிகர் . தொடர்ந்து காதல் கவிதைஉள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால் எந்தப் படமும் சொல்லிக் கொள்ளும்படி ஓடவில்லை. அப்படியேமூட்டை முடிச்சுகளுடன் மும்பைப் பக்கம் போய்விட்டார்.

  அவரது சிக்கென்ற உடல்வாகு வாய்ப்புக்களைக் கொண்டு வந்து சேர்த்தது. கதாநாயகியாக நடித்துக்கொண்டிருந்தவர் கொஞ்சம் வித்தியாசமாக நடிக்க ஆசைப்பட்டு கேர்ள் பிரண்ட் படத்தை ஒப்புக் கொண்டார்.இப்போது அந்தப் படம்தான் பல்வேறு பிரச்சனைகளைக் கிளப்பியுள்ளது.

  சிறு வயது முதலே நட்பாக இருக்கும் தோழிகளான இஷா கோபிகரும், அம்ரிதா அரோராவும் ஒரு கட்டத்தில்லெஸ்பியன் பழக்கம் உள்ளவர்களாக மாறுகிறார்கள். இஷா வெளியூர் சென்றிருக்கும்போது கதாநாயகன் ஆஷிஸ்செளத்ரியைச் சந்திக்கும் அம்ரிதா அவனைக் காதலிக்கத் தொடங்குகிறாள். தனது தோழியை இன்னொருவன்லவட்டிக் கொண்டு போவதை விரும்பாத இஷா வில்லியாக மாறுவதுதான் கதை.

  கதை ஏடாகூடமானது என்பதால் காட்சிகளும் அப்படியே வந்துள்ளன. லெஸ்பியன் காட்சிகள் மட்டுமல்ல,ஆஷிஸ்-அம்ரிதா காதல் காட்சிகளும் சூட்டைக் கிளப்பும் வகையில்தான் உள்ளன. இதுபோதாதா?கலாச்சாரத்தைச் சீர்குலைக்கும் வகையில் உள்ளது என சிவசேனா கட்சிக் காரர்கள் போர்க்கொடி தூக்கிவிட்டார்கள்.

  படத்தைத் தடை செய்ய வேண்டும் என்பதில் தொடங்கி, தியேட்டர்களில் ரகளை செய்வது, போராட்டம்,ஆர்ப்பாட்டம் என தங்களது வழக்கமான ஜனநாயக வழிகளில் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

  இவர்களை சமாதானப்படுத்தும் வழி தெரியாமல் இயக்குநர் கரண் ரஷ்தான், இந்தப் படத்தின் கதை என்னுடையசொந்த வாழ்வில் நடந்ததாகும். அதையே படமாக எடுத்துள்ளேன் என்று கூற, சிவசேனக்காரர்கள் கொதித்துவிட்டனர். சொந்த வாழ்வில் நடந்தது என்றால் வீட்டில் பார்த்துக் கொள், இந்தியாவின் பண்பாட்டை இப்படிதான்சந்தி சிரிக்க வைப்பதா? என்று எகிறி விட்டனர்.

  இது போன்ற படத்தில் ஏற்கனவே நடித்து எதிர்ப்புகளைச் சந்தித்த அனுபவமுடைய நந்திதா தாஸ் (பயர் படம்),கரணுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தார். ஆனாலும் தினமும் படத்துக்கு எதிராக இந்து அமைப்புகள் ஒவ்வொன்றும்குரல் கொடுத்து வருவது அதிகரித்து வருகிறது.

  இதற்கிடையே பெங்களூரில் ஒரு தியேட்டர் உரிமையாளர் இந்தப் படத்தை பார்க்க பெண்களுக்கு பிரத்யோககாட்சிக்கு ஏற்பாடு செய்து புண்ணியம் சேர்த்துக் கொண்டார்.

  வழக்கமான கதைகளை விட இந்த மாதிரி படங்களில் நடித்தால் பெயர் கிடைக்கும் என்று நினைத்த இஷாகோபிகர் இப்போது மும்பையில் வெளியே போகவே பயந்து போய் கிடக்கிறார். இந்தப் படம் தனது சினிமாவாழ்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடுமோ என்று புலம்பி வருகிறாராம்.

  வித்தியாசமாக நடிக்க வேண்டியதுதான், ஆனால் வில்லங்கமாக நடித்தால்...

  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X