»   »  வருகிறது 'காதல் கடிதம்'

வருகிறது 'காதல் கடிதம்'

Subscribe to Oneindia Tamil
Anisha with Sribalaji

தயாரிக்கப்பட்டு ஒரு ஆண்டைத் தாண்டிய நிலையில் ஈழத்துக் காதல் கதையை அடிப்படையாகக் கொண்ட காதல் கடிதம் திரைப்படம் ஜனவரி 11ம் தேதி திரைக்கு வருகிறது.

காதல் கடிதம் திரைப்படம் தயாரிக்கப்பட்டு கிட்டத்தட்ட ஒரு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இந்த நிலையில், பெரும் தாமதத்திற்குப் பின்னர் திரைக்கு வருகிறது.

ஜனவரி 11ம் தேதி இப்படத்தை ஐரோப்பிய நாடுகள், இலங்கை உள்ளிட்ட நாடுகளில் திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணம் ராஐர் திரையரங்கிலும், வவுனியா நியூ குமரன், கொழும்பு கெப்பிட்டல் திரையரங்கிலும் இப்படம் திரையிடப்படுகிறது. அதே நேரத்தில் தமிழகத்திலும், நார்வேயிலும் திரையிடுவதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இப்படத்தில் தமிழகத்தைச் சேர்ந்த ஸ்ரீபாலாஜி நாயகனாக நடித்துள்ளார். அனீஷா நாயகியாக நடித்துள்ளார். இவர்கள் தவிர நிழல்கள் ரவி, ஸ்ரீரஞ்சனி, காதல் சுகுமார், தலைவாசல் விஜய், பிரவீன், கணேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.

இலங்கை பப்பிசைப் பாடகர் மனோகரனும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இலங்கை வானொலி அறிவிப்பாளர் நடராஜ சிவம், நாயகியின் தந்தையாக நடித்துள்ளார்.

தில்லைவண்ணன் படத்தைத் தயாரித்துள்ளார். வினோலியா கதையை எழுதியுள்ளார். வி.எஸ். உதயா இசையமைக்க, ராஜன் கேமராவைக் கையாள, நார்வே வசீகரன் பாடல்கள் எழுத, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் முகேஷ்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil