»   »  நிர்வாணத்துக்கு கட்!

நிர்வாணத்துக்கு கட்!

Subscribe to Oneindia Tamil

காதல் அரங்கம் படத்தில் சென்சார் போர்டு ஆட்சேபித்த நிர்வாணக் காட்சிகளை கட் செய்ய முடிவெடுத்துள்ளார் வேலு பிரபாகரன்.

பெங்களூரிலிருந்து கருப்புத் தக்காளியாக ஷெர்லி தாஸைக் கூட்டி வந்து காதல் அரங்கம் என்ற படத்தை களேபரமாக தயாரித்து இயக்கினார் புரட்சி இயக்குநர் வேலு பிரபாகரன்.

படத்தில் ஷெர்லி தாஸ் மேலாடை இன்றியும், அரை நிர்வாணமாகவும் நடித்த காட்சிகளும், ஹீரோவுடன் வெட்ட வெளியில் உடலுறவு கொள்வது போன்ற காட்சியும் பரபரப்பை ஏற்படுத்தின.

படம் முடிந்தும் சென்சார் போர்டு சான்றிதழ் தர மறுத்ததால் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை. இதையடுத்து டெல்லியில் உள்ள டிரிப்யூனலுக்குப் பஞ்சாயத்தைக் கொண்டு சென்றார் பிரபாகரன்.

படத்தைப் பார்த்த டிரிப்யூனல் படத்தில் இடம் பெற்றுள்ள நிர்வாணக் காட்சிகள் படு ஆபாசமாக இருப்பதாக கூறி படத்தை திரையிட தடை விதித்து விட்டனர்.

இதனால் அப்செட் ஆன வேலு பிரபாகரன் உச்சநீதிமன்றத்தை அணுகப் போவதாக கூறியிருந்தார். ஆனால் இப்போது தனது முடிவை மாற்றிக் கொண்டு சென்சார் போர்டு ஆட்சேபித்த காட்சிகளை கட் செய்து விட முடிவு செய்துள்ளார்.

மேலும் படத்தையும் மாற்றி நிர்வாணம் என்ற புதிய பெயரையும் சூட்டவுள்ளாராம். அதை விட முக்கியமாக தனக்கும் சென்சார் போர்டுக்கும் இடையே நடந்த வாக்குவாதங்களை, வாதப் பிரதிவாதங்களையும் ஒரு காட்சியாக வைக்கப் போகிறாராம்.

வேலு பிரபாகரன் ஈசியாக படத்தை மாற்ற முடிவு செய்து விட்டார். ஆனால் ஷெர்லியின் கவர்ச்சியை நம்பி படத்தை நல்ல விலை கொடுத்து வாங்கி விட்ட விநியோகஸ்தர்கள், இப்போது அப்செட் ஆகியுள்ளனராம்.

ஷெர்லியின் புரட்சி கவர்ச்சியை நம்பித்தான் நிறைய விலை கொடுத்து படத்தை வாங்கினோம். இப்போது அது இல்லை என்றால் எப்படி என்று அவர்கள் புலம்புகிறார்களாம். வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்குமாறு பிரபாகரனை நெருக்க ஆரம்பித்துள்ளார்களாம்.

காதல் அரங்கம் சண்டைக் களமாகிறது!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil