»   »  விக்ரம்-கந்தசாமி 10,000!

விக்ரம்-கந்தசாமி 10,000!

Subscribe to Oneindia Tamil

சுசி. கணேசன் இயக்க, விக்ரம் நடிப்பில் விளையாட பெரும் பொருட்செலவில் உருவாகவிருக்கும் கந்தசாமி படத்திற்கான பூஜைக்காக படு காஸ்ட்லியான அழைப்பிதழை தயாரிக்கவுள்ளார் கலைப்புலி தாணு.

பெரும் பொருட்செல்வில் படம் தயாரிப்பதற்கு சற்றும் தயங்காதவர் தாணு. படம் நன்றாக வர வேண்டும் என்பது மட்டுமே அவரது நோக்கமாக இருக்கும். படம் சிறப்பாக வர வேண்டும் என்பதற்காக பணத்தை தண்ணீராக இறைக்க சற்றும் தயங்காதவர் இந்த கலைப்புலி.

ஒரு படத்தை வெற்றிப் படமாக்க மீடியாக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்பதை நன்கு உணர்ந்தவர் கலைப்புலி. இந்த நிலையில், தான் தயாரிக்கவுள்ள கந்தசாமிக்கு இப்போதே தடபுடலாக வாரி இறைக்க ஆரம்பித்து விட்டார்.

கந்தசாமி படத்தின் பட்ஜெட் 40 கோடியாம். இந்த நிலையில் படத்தின் பூஜைக்கான அழைப்பிதழை படு காஸ்ட்லியாக தயாரித்துள்ளாராம் தாணு. கிட்டத்தட்ட ஒரு இன்விடேஷனின் தயாரிப்பு விலை ரூ. 10,000 என்கிறார்கள்.

அப்படி என்ன இதில் விசேஷம் என்று கேட்டால், இது ஒரு லேப்டாப் வடிவிலான வித்தியாசமான அழைப்பிதழ் என்ற பதில் கிடைத்தது. இந்த வித்தியாச ஹைடெக் அழைப்பிதழை வடிவமைக்க சீன நிறுவனம் ஒன்றின் உதவியை நாடியுள்ளார் தாணு.

இந்த அழைப்பிதழில் பல பொத்தான்கள் இருக்குமாம். ஒரு பொத்தானை அழுத்தினால் படத்தின் டிரைலரைப் பார்க்கலாமாம். இன்னொரு பொத்தானை அழுத்தினால் படத்தின் ஸ்டில்கள் தெரியுமாம். இப்படி ஒவ்வொரு பொத்தானிலும் பல மேட்டர்கள் இருக்குமாம் (எந்தப் பொத்தானை அழுத்தினால், முழுப் படமும் தெரியும் சார்?)

இந்த நூதன ஐடியா குறித்து படத்தின் பி.ஆர்.ஓ. டயமண்ட் பாபுவிடம் கேட்டபோது, பூஜை அழைப்பிதழை காஸ்ட்லியாக தயாரித்து வருகிறார் கலைப்புலி தாணு என்ற செய்தி உண்மையானதுதான். ஆனால் இன்னும் அந்த டிசைன் இறுதி செய்யப்படவில்லை.

இந்த மாதக் கடைசியில்தான் டிசைன் எங்களது கைக்கு வருகிறது. ஆனால் இதுவரை இல்லாத அளவுக்கு படு வித்தியாசமாக, படு காஸ்ட்லியாக இன்விடேஷன் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

ஆகஸ்ட் மத்தியில் பூஜை போட்டு ஷூட்டிங்கைத் தொடங்கவுள்ளனர் என்றார் பாபு.

கந்தசாமி, நீ கலக்கு சாமி!

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil