twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இன்று கண்ணதாசன் பிறந்தநாள்: மறக்க முடியாத டாப் 20 பாடல்கள்

    By Siva
    |

    சென்னை: இன்று கவிஞர் கண்ணதாசனின் பிறந்தநாள்.

    காலத்தால் அழியாத பாடல்களை தந்தவர் கவிஞர் கண்ணதாசன். அவர் கவிதை தவிர பிரபலமான அர்த்தமுள்ள இந்து மதம் புத்தகத்தை எழுதியவர். இது தவிர அவர் ஸ்வர்ண சரஸ்வதி, ரக்த புஷ்பங்கள், முப்பது நாளும் பௌர்ணமி உள்ளிட்ட பல்வேறு நாவல்களை எழுதியுள்ளார்.

    கண்ணதாசன் எழுதிய திரைப்பாடல்கள் எத்தனை தலைமுறை கடந்தாலும் இனிக்கும் பாடல்கள். அவற்றில் 20 பாடல்களை பார்ப்போம்.

    ஒரு கோப்பையிலே

    ஒரு கோப்பையிலே

    ரத்த திலகம் படத்தில் கண்ணதாசன் எழுதிய ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோலமயில் என் துணையிருப்பு
    இசை பாடலிலே என் உயிர் துடிப்பு நான் பார்ப்பதெல்லாம் அழகின் சிரிப்பு என்ற பாடலை யாராலும் மறந்துவிட முடியாது.

    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது

    சூரிய காந்தி படத்தில் கண்ணதாசன் எழுதிய பாட்டை டி.எம்.எஸ். பாடியிருப்பார். படத்தில் கண்ணதாசனே பாடுவது போன்று காட்டியிருப்பார்கள்.

    பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது
    கருடா சௌக்கியமா
    யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால்
    எல்லாம் சௌக்கியமே.. கருடன் சொன்னது..
    அதில் அர்த்தம் உள்ளது..

    பொன்னை விரும்பும் பூமியிலே

    பொன்னை விரும்பும் பூமியிலே

    ஆலயமணி படத்திற்காக கண்ணதாசன் எழுதிய வைர வரிகள்.

    பொன்னை விரும்பும் பூமியிலே
    என்னை விரும்பும் ஓருயிரே
    புதையல் தேடி அலையும் உலகில்
    இதயம் தேடும் என்னுயிரே

    வாழ நினைத்தால் வாழலாம்

    வாழ நினைத்தால் வாழலாம்

    பலே பாண்டியா படத்திற்காக கண்ணதாசன் வடித்த பாடல்.

    வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்
    ஆழ்கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

    தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

    தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே

    ஆலயமணி படத்திற்காக கண்ணதாசன் எழுதிய இந்த பாடலை எஸ். ஜானகி பாடியிருந்தார். இந்த பாடலைக் கேட்டால் தூக்கம் வராதவர்களுக்கும் கண் சொக்கும்.

    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே - அந்த
    தூக்கமும் அமைதியும் நானானால் - உன்னை
    தொடர்ந்திருப்பேன் என்றும் துணையிருப்பேன்
    தூக்கமுன் கண்களைத் தழுவட்டுமே
    அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே

    இதய வீணை தூங்கும் போது

    இதய வீணை தூங்கும் போது

    இருவர் உள்ளம் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடலை பி.சுசீலா தனது தேன் குரலில் பாடியிருப்பார்.

    இதய வீணை தூங்கும் போது பாட முடியுமா
    இரண்டு கண்கள் இரண்டு காட்சி காண முடியுமா
    உதடு சிரிக்கும் நேரம் உள்ளம் சிரிக்குமா
    உருவம் போடும் வேஷம் உண்மை ஆகுமா
    விளக்கை குடத்தில் வைத்தால் வெளிச்சம் தோன்றுமா
    வீட்டு குயிலை கூண்டில் வைத்தால் பாட்டு பாடுமா பாட்டு
    பாடுமா

    நெஞ்சம் மறப்பதில்லை

    நெஞ்சம் மறப்பதில்லை

    நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வரும் கண்ணதாசனின் பாடலை சுசீலா மற்றும் பி.பி. ஸ்ரீனிவாஸ் ஆகியோர் அருமையாக பாடியிருப்பார்கள்.

    நெஞ்சம் மறப்பதில்லை
    அது நினைவை இழக்கவில்லை
    நான் காத்திருந்தேன் உன்னை பார்த்திருந்தேன்
    கண்களும் மூடவில்லை
    என் கண்களூம் மூடவில்லை

    மலர்ந்தும் மலராத

    மலர்ந்தும் மலராத

    பாச மலர் படத்தில் வரும் கண்ணதாசன் வரிகளுக்கு சிவாஜி கணேசனும், சாவித்ரியும் தங்கள் நடிப்பால் மேலும் உயிர் கொடுத்திருப்பார்கள்.

    மலர்ந்தும் மலராத பாதி மலர்
    போல வளரும் விழி வண்ணமே
    வந்து விடிந்தும் விடியாத காலைப் பொழுதாக
    விளைந்த கலையன்னமே
    நதியில் விளையாடி கொடியின் தலை சீவி நடந்த
    இளம்தென்றலே
    வளர் பொதிகை மலை தோன்றி மதுரை நகர்
    கண்டு பொலிந்த தமிழ் மன்றமே

    நினைக்கத் தெரிந்த மனமே

    நினைக்கத் தெரிந்த மனமே

    ஆனந்த ஜோதி படத்தில் வரும் இந்த வரிகள் என்றும் இனியவை

    நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
    பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
    நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியாதா?
    பழகத் தெரிந்த உயிரே உனக்கு விலகத் தெரியாதா?
    உயிரே விலகத் தெரியாதா?

    படைத்தானே

    படைத்தானே

    நிச்சய தாம்பூலம் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடலை டி.எம். சௌந்தர்ராஜன் தனது அருமையான குரலில் பாடியிருப்பார்.

    படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே
    வளர்த்தானே வளர்த்தானே மனதினில் கவலையை வளர்த்தானே
    படைத்தானே படைத்தானே மனிதனை ஆண்டவன் படைத்தானே

    கொடுத்தானே கொடுத்தானே பழரசம் ஆண்டவன் கொடுத்தானே
    பிரித்தானே பிரித்தானே மனதையும் கவலையும் பிரித்தானே

    அச்சம் என்பது மடமையடா

    அச்சம் என்பது மடமையடா

    மன்னாதி மன்னன் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய தத்துவப் பாடல்.

    அச்சம் என்பது மடமையடா
    அஞ்சாமை திராவிடர் உடைமையடா
    ஆறிலும் சாவு நூறிலும் சாவு
    தாயகம் காப்பது கடமையடா
    தாயகம் காப்பது கடமையடா

    பொன் ஒன்று கண்டேன்

    பொன் ஒன்று கண்டேன்

    படித்தால் மட்டும் போதுமா படத்திற்காக கண்ணதாசன் எழுதிய காதல் பாடல்.

    பொன் ஒன்று கண்டேன் பெண் அங்கு இல்லை
    என்னென்று நான் சொல்லலாகுமா
    என்னென்று நான் சொல்லவேண்டுமா

    பூ ஒன்று கண்டேன் முகம் காணவில்லை
    ஏன் என்று நான் சொல்லலாகுமா

    ஏன் என்று நான் சொல்லவேண்டுமா

    சொன்னது நீ தானா

    சொன்னது நீ தானா

    நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய வரிகளை பி.சுசீலா தனது இனிமையான குரலில் பாடி அசத்தியிருப்பார்.

    சொன்னது நீதானா சொல் சொல் சொல் என்னுயிரே
    சம்மதம் தானா ஏன் ஏன் ஏன் என்னுயிரே
    ஏன் ஏன் ஏன் என்னுயிரே
    (சொன்னது)
    இன்னொரு கைகளிலே யார் யார் நானா
    எனை மறந்தாயா ஏன் ஏன் ஏன் என் உயிரே
    (சொன்னது)

    எங்கிருந்தாலும் வாழ்க

    எங்கிருந்தாலும் வாழ்க

    நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய இந்த பாடலைத் தான் பல ஆடவர்கள் தங்கள் காதலி வேறு ஒருவரை மணக்கையில் பாடுகின்றனர்.

    எங்கிருந்தாலும் வாழ்க
    உன் இதயம் அமைதியில் வாழ்க
    மஞ்சள் வளத்துடன் வாழ்க
    உன் மங்கலக் குங்குமம் வாழ்க
    வாழ்க...வாழ்க...

    மயக்கமா கலக்கமா

    மயக்கமா கலக்கமா

    சுமைதாங்கி படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடலை பி.பி. ஸ்ரீனிவாஸ் பாடியிருப்பார்.

    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா
    மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா

    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோரும் வேதனை இருக்கும்
    வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோரும் வேதனை இருக்கும்
    வந்த துன்பம் எதுவென்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை
    வாடி நின்றால் ஓடுவதில்லை
    எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் அமைதி நிலைக்கும்

    ஆறு மனமே ஆறு.. ஆண்டவன் கட்டளை ஆறு

    ஆறு மனமே ஆறு.. ஆண்டவன் கட்டளை ஆறு

    ஆண்டவன் கட்டளை படத்திற்காக கண்ணதாசன் எழுதிய பாடலை டி.எம்.எஸ். அழகுற பாடியிருப்பார்.

    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு
    தேர்ந்து மனிதன் வாழும் வகைக்கு தெய்வத்தின் கட்டளை ஆறு
    தெய்வத்தின் கட்டளை ஆறு
    ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

    சட்டி சுட்டதடா

    சட்டி சுட்டதடா

    ஆலயமணி படத்திற்காக கண்ணதாசன் எழுதிய தத்துவ பாடல்.

    சட்டி சுட்டதடா கை விட்டதடா
    புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
    புத்தி கெட்டதடா நெஞ்சைத் தொட்டதடா
    நாலும் நடந்து முடிந்த பின்னால்
    நல்லது கெட்டது தெரிந்ததடா

    அவனுக்கென்ன தூங்கிவிட்டான்

    அவனுக்கென்ன தூங்கிவிட்டான்

    பெரிய இடத்துப் பெண் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய அழியாப் பாடல்.

    அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
    அகப்பட்டவன் நான் அல்லவா
    ஐயிரண்டு மாதத்திலே கைகளிலே போட்டு விட்டான்
    அவனுகென்ன தூங்கிவிட்டான் ...
    அகப்பட்டவன் நான் அல்லவா

    ஒருவன் மனது ஒன்பதடா

    ஒருவன் மனது ஒன்பதடா

    தர்மம் தலைகாக்கும் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய தத்துவ பாடல்.

    ஒருவன் மனது ஒன்பதடா
    அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா
    உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
    அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
    உருவத்தை பார்ப்பவன் மனிதனடா
    அதில் உள்ளத்தை காண்பவன் இறைவனடா
    ஒருவன் மனது ஒன்பதடா
    அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா

    உள்ளம் என்பது ஆமை

    உள்ளம் என்பது ஆமை

    பார்த்தால் பசி தீரும் படத்திற்காக கண்ணதாசன் எழுதிய தத்துவ பாடல்.

    உள்ளம் என்பது ஆமை - அதில்
    உண்மை என்பது ஊமை
    சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
    தூங்கிக் கிடப்பது மீதி
    சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
    தூங்கிக் கிடப்பது நீதி
    உள்ளம் என்பது ஆமை - அதில்
    உண்மை என்பது ஊமை

    இது போல இன்னும் எத்தனையோ பாடல்கள்... சொல்லிக் கொண்டே போகலாம்.

    English summary
    Poet Kannadasan is remebered on his birthday on monday. Above is a list of 20 of his songs that live forever.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X