»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

பிரபல திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவின் மகன் கார்த்திக்ராஜா திருமணம் திருப்பதியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கார்த்திக் ராஜாவும் ஒரு இசையமைப்பாளரே. பாண்டியன், அலெக்சாண்டர், நாம இருவர் நமக்கு இருவர் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு இசை அமைத்தவர்கார்த்திக் ராஜா. தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் இளையராஜாவின் மூத்த மகன்.

இவருக்கும், மறைந்த நடிகர் எம்.கே.ராதாவின் பேத்தி ராஜராஜேஸ்வரி என்ற ராஜிவிக்கும் திருப்பதியில் வைதீக முறைப்படி திருமணம் நடைபெற்றது.

திருப்பதியில் அகோபில மடத்தில் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு திருமண நிகழ்ச்சிகள் தொடங்கின. மணமக்கள் மாலை மாற்றி தாலி கட்டிக்கொள்வதற்கு முன்னதாக இளையராஜா தனது இசைக்குரு தட்சிணாமூர்த்தி பிள்ளையை மேடைக்கு அழைத்தார். மணமக்களுக்கு அவர் ஆசி கூறிய பின்னர்திருமணம் நடைபெற்றது.

திருமண நிகழ்ச்சியில் பஞ்சு அருணாச்சலம், நடிகர்கள் ராதாரவி, சங்கிலிமுருகன், டைரக்டர்கள் பாரதிராஜா, ஆர்.வி.உதயகுமார், சுரேஷ்கிருஷ்ணா, கவிஞர்கள்வாலி, பொன்னடியான் இசையமைப்பாளர்கள் தேவா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த கையோடு மணமக்கள் திருப்பதி வெங்கடாசலபதியை தரிசித்தனர். ஏழுமலையானுக்கு திருமண உற்சவம் நடத்தினர்.

முன்னதாக மாப்பிள்ளை அழைப்பின்போது கார்த்திக்ராஜாவின் தங்கை பாடகி பவதாரிணி மாப்பிள்ளை வந்தார்.... மாப்பிள்ளை வந்தார் பாடலைப் பாடினார்.

Read more about: chennai, karthicraja, music
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil