»   »  ஆங்கில மோகத்தில் மலையாளம்!

ஆங்கில மோகத்தில் மலையாளம்!

Subscribe to Oneindia Tamil
Click here for more images
மலையாள திரையுலகில் ஆங்கிலப் பெயர்கள் வைப்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதிலும் திலீப்பின் படங்களுக்கு தொடர்ந்து ஆங்கில டைட்டில்களே வைக்கப்பட்டு வருகின்றன.

கொஞ்ச காலத்திற்கு முன்பு தமிழ்த் திரையுலகினர் ஆங்கில மோகத்துடன் அலைமோதிக் கொண்டிருந்தனர். சற்றும் சம்பந்தம் இல்லாத பெயர்கள் வைக்தப்பட்டன. ஆங்கிலம் தவிர ஏய், ஊய், ஓய் என்ற ரீதியிலும் குண்டக்க மண்டக்க பெயர்கள் வைக்கப்பட்டன.

இப்படி தமிழுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத பெயர்களை வைக்கக் கூடாது என்று கோரி பல அரசியல் கட்சிகள் போராட்டங்களையும் நடத்தின. ஆனால் சரிப்பட்டு வரவில்லை. ஆனால் முதல்வராக கருணாநிதி பதவியேற்றதும், தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு என்று உத்தரவிட்டார்.

இதையடுத்து இப்போது சுத்தத் தமிழில் பெயர் வைக்க ஆரம்பித்துள்ளனர். ஆங்கிலப் பெயர்கள் அடியோடு ஒழிந்து விட்டன.

ஆனால் மலையாளத்தில் கதை நேர் மாறாக உள்ளது. சுத்தமான ஆங்கிலத்தில்தான் பெயர் வைத்து படங்கள் வருகின்றனர். ஒரு காலத்தில் அற்புதமான பெயர்களில் மலையாளப் படங்கள் வெளியாகின. ஆனால் இன்று நிலைமை தலைகீழாகி விட்டது.

ஆங்கிலப் பெயர்கள் இல்லாத படங்களை காண்பது அரிதாகி வருகிறது. இவர்களில் குறிப்பாக திலீப் தனது படங்களுக்குத் தொடர்ந்து ஆங்கிலத்தில் பெயர் சூட்டி வருகிறார்.

ரன்வே, தி செஸ், ஸ்பீட் டிராக் ஆகிய படங்கள் ஹிட் ஆனதால் தொடர்ந்து அதே டைப்பில் பெயர் வைத்து வருகிறார்.

தற்போது அவர் கொல்கத்தா நியூஸ், ரோமியோ என இரு படங்களில் நடித்துள்ளார். இதுதவிர அடுத்ததாக குட்டநாடன் எக்ஸ்பிரஸ் என்ற புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

திலீப் மட்டுமல்லாது மற்ற நடிகர்களும் கூட ஆங்கிலத்தில் டைட்டில் வைக்கவே விருப்பமாக உள்ளனராம். மோகன்லால் சமீபத்தில் நடித்துள்ள படம் ராக் அண்ட் ரோல்.

இன்னொரு கருணாநிதியாக மாறுவாரா அச்சுதானந்தன்?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil