»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

அர்ஜூனின் இழுபறி கால்ஷீட் காரணமாக நீண்ட காலமாக எடுக்கப்பட்டு வந்த அரசாட்சி இப்போதுமுடிவடைந்து விட்டது. இதனால் இயக்குநர் மகராஜன் மகிழ்ச்சியில் இருக்கிறார்.

வல்லரசு என்ற வெற்றிப் படத்தை இயக்கிய மகராஜன், அதற்குப் பின் இந்திக்குப் போய்விட்டார். இந்தியில்இரண்டு படங்களை இயக்கினார். இடையே அரசாட்சி என்ற படத்தை தமிழில் இயக்க ஒப்புக் கொண்டார்.படத்தில் ஹீரோ அர்ஜூன். கடந்த 2,000ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்ற இந்திய அழகி லாராதத்தாதான் ஹீரோயின்.

முதலில் அர்ஜூன் கால்ஷீட் குளறுபடிகள் செய்தார். படம் பாதியில் நின்றது. அர்ஜூன் கால்ஷீட் கிடைத்தபோது,நாயகி லாரா தத்தா இந்தியில் பாபி தியோல், அபிஷேக் பச்சன், ஜான் ஆப்ரஹாம் ஆகியோரின் படங்களில்பிஸியாகி விட்டார்.

இருவரின் கால்ஷீட்டும் கிடைத்தபோது, பணப்பிரச்சினை வந்து வாட்டியது. இதை நம்பி காலத்தை ஓட்ட முடியாதுஎன்ற முடிவுக்கு வந்த மகராஜன், அஜீத்குமாரை வைத்து ஆஞ்சநேயா படத்துக்கு பூஜை போட்டார். படம்வேகமாக வளர்ந்து ரீலீசும் ஆகி, ஆன வேகத்திலேயே திரும்பவும் படுத்துக்கொண்டது.

இதனால் மகராஜனுக்கு வேறு பட வாய்ப்புகள் எதுவும் வரவில்லை. வேறு வழியின்றி அர்ஜூன், லாரா தத்தாகால்களில் விழாத குறையாகக் கெஞ்சி, அரசாட்சி படத்தை விட்ட இடத்திலிருந்து தொடங்கினார்.

இந்தியில் பிஸியாக இருந்தாலும், மகராஜனுக்கு நிம்மதி அளிக்கும் வகையில் லாரா தத்தா சில வாரங்களுக்கு முன்புசென்னை வந்து படத்தை வேகமாக முடித்துக் கொடுத்து மும்பைக்கு மீண்டும் பறந்தார். இதனால் படம் முடிவடைந்துவிட்டது.

அர்ஜூன், லாரா தத்தா தவிர, ரகுவரன், மணிவண்ணன், நாசர், விவேக், தாமு உள்ளிட்டோரும் படத்தில் உள்ளனர்.சமூக விரோதிகளிடமிருந்து சட்டத்தையும், அதைக் காக்கும் வழக்கறிஞர்களையும் நாயகன் காப்பாற்றுவதுதான்கதையாம்.

சமீபத்தில் அர்ஜூன் மற்றும் மீனா நடித்து வெளிவந்த அன்புச் சகோதரன் வந்த சுவடே தெரியாமல் திரும்பிபெட்டியில் அடைக்கலமாகிவிட்டது. இந் நிலையில் இந்தப் படத்தையே பெரிதும் நம்பியிருக்கிறார் அர்ஜூன்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil